பாடகி சுஜாதாவின் கணவர் யார் தெரியுமா? விஜய் டிவியில் அறிமுகம்.. ஆரம்பமே அசத்தல், நெகிழ்ச்சி!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் அதாவது மார்ச் 30 மற்றும் 31ம் தேதிக்கான எபிசோடில் பாடகர் எஸ்பிபியின் செலிப்ரேஷன் ரவுண்டு நடைபெறுகிறது. அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் சுஜாதாவின் பிறந்த நாளும் இந்த வாரத்தில் வருகிறதாம். அதையும் அந்த நிகழ்ச்சியில் சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்கள்.
பாடகி சுஜாதாவின் மகள் ஸ்வேதா மோகனும் ஒரு பாடகராகவும் நடுவராகவும் இருக்கும் நிலையில் இப்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சுஜாதாவின் கணவர் மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறார். அதே நேரத்தில் தனக்காக கொண்டாடப்பட்ட நிகழ்ச்சியில் தன்னுடைய கணவர் மற்றும் மகள் இருவரும் சேர்ந்து கலந்து கொண்டதை பார்த்து சுஜாதா மோகன் இன்ப அதிர்ச்சியாகி இருக்கிறார்.

சிறுவயதில் திருமணம்: பாடகி சுஜாதா ஆறாம் வகுப்பு படிக்கும் போது தன்னுடைய பாடல் திறமையை உலகத்திற்கு நிரூபிக்க தொடங்கி இருக்கிறார். இதுவரைக்கும் கிட்டத்தட்ட அவர் 2000க்கும் மேற்பட்ட பாடல்களை சுஜாதா பாடி இருக்கிறார். இவருக்கு இவருடைய கணவரோடு 17 வயதிலேயே திருமண நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாம். பிறகு 18 வயது முடிவடைந்ததும் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். குடும்பத்தினர் சம்பந்தத்தால் இவர்கள் திருமணம் நடைபெற்றதாம். சுஜாதாவின் அப்பா சிறு வயதிலேயே இறந்து விட்டதால் ஒரு பாடகியாக இருந்தாலும் அதிகமான கட்டுப்பாடுகளோடு தான் இருந்திருக்கிறார். அதனாலேயே இவருக்கு சிறுவயதிலேயே திருமணத்தை செய்து வைத்திருக்கிறார்கள்.
ஒரே மகள்: பாடகி சுஜாதாவின் கணவர் ஒரு மருத்துவர் குழந்தைகள் நல நிபுணராக இருந்து வருகிறார் இவர்கள் இருவரும் குடும்ப நண்பர்களாக இருந்த நிலையில் சுஜாதாவிற்கு இரண்டு முறை அபார்ஷன் ஆகிவிட்டதாம். அதற்கு பிறகு தான் பாடகி சுவேதா பிறந்திருக்கிறார். சுஜாதாவிற்கு ஸ்வேதா ஒரே மகளாக இருந்து வருகிறார். ஏற்கனவே சுஜாதாவும் அவருடைய அம்மாவிற்கு ஒரே மகள் தான். இந்த நிலையில் குழந்தையாக இருக்கும் போது ஒரு அம்மாவாக என்னால் பல கடமைகளை நிறைவேற்ற முடியாமல் ஆகிவிட்டது என்று ஏற்கனவே ஒரு பேட்டியில் உருக்கமாக கூறியிருக்கிறார். ஸ்வேதா பிறந்த பிறகு தொடர்ச்சியாக அதிகமான பாடல் வாய்ப்புகள் சுஜாதாவிற்கு கிடைத்த வண்ணமாகவே இருந்ததாம்.
அதற்கான மாற்று வழி: அதனால் ஸ்வேதா ஸ்கூல் படிக்கும்போதும் காலேஜ் படிக்கும்போதும் அவர்களுடைய ஸ்கூல் ஃபங்ஷன், காலேஜ் ஃபங்ஷன், ஸ்போர்ட்ஸ் பங்க்ஷன் என எதிலும் எங்களால் கலந்து கொள்ள முடியாமல் ஆகிவிட்டது. அது இப்போது நினைத்தாலும் அது வருத்தமாக தான் இருக்கிறது. எங்களை அந்த நேரங்களில் அதிகமாக ஸ்வேதா மிஸ் பண்ணுவார். ஆனால் எங்களால் அந்த நேரங்களில் அவளோடு இருக்க முடியவில்லை. அதற்கு இப்போது நான் மன்னிப்பு தான் கேட்க முடியும்.
வேறு ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியிருக்கும் சுஜாதா அதற்கு எல்லாம் ஈடு செய்யும் வகையில் தற்போது ஸ்வேதாவின் மகளை பராமரித்து வருவது எங்களுடைய வேலையாகத்தான் இருக்கிறது. அதை நாங்கள் சந்தோஷமாக செய்கிறோம் என்று கூறியிருக்கிறார். ஸ்வேதா வெளிநாட்டில் இருக்கும் நிலையில் சுஜாதா தான் அவருடைய மகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று கூட்டி வருவது என எல்லாவற்றையும் பார்த்து வருகிறாராம். தற்போது பேட்டி ஒன்றில் இதைப் பற்றி பேசியிருக்கிறார்கள்.
நடுவர்: பாடகி சுஜாதா திரைப்படங்களில் அதிகமான பாடல்களை பாடி இருந்தாலும் விஜய் டிவியில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீசன் 2,3, 4 என தொடர்ந்து இவர்தான் ஜட்ஜ் ஆக இருந்து வந்தார். அது மட்டும் அல்லாமல் ஜீ தமிழில் சரிகமப சாம்பியன்ஸ், சரிகமப சீனியர் சீசன் 2 போன்ற நிகழ்ச்சிகளிலும் ஜட்ஜ் ஆக கலந்து கொண்டு இளம் பாடகர்களை உருவாக்கி கொண்டிருக்கிறார். குழந்தைகளோடு குழந்தைகளாக இவர் மாறி கலகலப்பாக பேசி ரசிகர்களை மேலும் கவர்ந்திருக்கிறார். ரசிகர்களின் மனம் கவர்ந்த பல பாடல்களில் இவர் பாடிய முதல் பாடலான புது வெள்ளை மழை பாடல் இப்ப வரைக்கும் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் காதல் பாடலாக இருந்து வருகிறது.
ஒரே நிகழ்ச்சியில்: இந்த நிலையில் சுஜாதா மற்றும் அவருடைய கணவர் மோகன் மற்றும் இவர்களுடைய மகள் ஸ்வேதா எல்லோரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் பாடகர் பாலசுப்பிரமணியனின் செலிப்ரேஷன் ரவுண்டில் அம்மாவின் இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் கொண்டாடப்படுவது எங்களுக்கு மேலும் சிறப்பு என்று ஸ்வேதா கூறி இருக்கிறார். அதோடு பாடகி சுஜாதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications