கள்ளக்குறிச்சி பையன் சூப்பர் சிங்கரில் வெற்றி..19 வயதில் ரூ.60 லட்சம் வீடு..வென்ற பிறகு ஜான் எமோஷனல்
சென்னை: விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. இதில் வெற்றியாளராக ஜான் ஜெரோம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தான் வெற்றி பெற்றதால் 60 லட்சம் வீடு கிடைத்தது குறித்து பேட்டி ஒன்றில் உருக்கமாக பேசி இருக்கிறார். இந்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் அதிகமான கருத்துக்கள் குவிந்து வருகிறது. அது பற்றி பார்க்கலாம்.
விஜய் டிவியில் அதிகமான ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக்கப்பட்டு வருகிறது. அதிலும் மக்கள் விரும்பும் வகையில் பல புதுமையான நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ஒரு நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் சீனியர் என்று இரண்டு விதமாக ஒளிபரப்பாகி வருகிறது. இது இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கடந்த 10 வருடங்களாகவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் பாட்டு பாடுவது மட்டுமே முக்கியமாக இருந்த நிலையில் இப்போது பாட்டோடு சேர்ந்து காமெடி கலாட்டா பழைய நினைவுகள் எல்லாமே அங்கே அசை போடப்படுகிறது. அதோடு சென்டிமென்ட் காட்சிகளும் அவ்வப்போது எட்டிப் பார்த்து பார்க்கும் ரசிகர்களை கண்கலங்க வைத்து விடுகிறது.
இந்த நிலையில் தான் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட சூப்பர் சிங்கர் 10 நிகழ்ச்சி கடந்த வாரத்தோடு முடிவுக்கு வந்தது. ரசிகர்கள் அதிகமானோர் ஃபைனல் நிகழ்ச்சிக்காக காத்திருந்தபோது நிகழ்ச்சி பெரிய அளவில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டு நிகழ்ச்சியில் பாடகர் ஜான் ஜெரோம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

அவருக்கு முதல் பரிசு ஆக 60 லட்சம் மதிப்புள்ள வீடும் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தான் 60 லட்சம் பரிசு பெற்றது குறித்து பேட்டி ஒன்றில் ஜான் ஜெரம் பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நான் இந்த நிகழ்ச்சியில் பல போராட்டங்களுக்கு பிறகு தான் கலந்து கொண்டேன். எனக்கு 19 வயது தான் ஆகிறது. இந்த நேரத்திலேயே நான் வெற்றி பெற்று என்னுடைய அப்பா அம்மாவிற்கு 60 லட்சம் வீடு கொடுப்பேன் என்று நினைக்கவில்லை.
இது உண்மையில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு முன்பு எல்லோரும் இந்த நிகழ்ச்சியில் நீ வெற்றி பெறுவாய் என்று சொல்லும் போது சந்தோஷமா இருந்தாலும் நான் உறுதியாக வெற்றி பெறுவேன் என்று நினைக்கவில்லை. அப்படியே சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்றால் அந்த நிகழ்ச்சியில் கிடைக்கும் வீட்டில் என்ன செய்வாய் என்று பலர் கேட்பார்கள். அப்போது நான் அந்த வீட்டில் நிம்மதியாக படுத்து தூங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.
இறுதியில் அந்த நிகழ்ச்சியில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்று சொன்னதும் எனக்கு வானத்தில் பறப்பது போன்று இருந்தது. இந்த வயதில் என்னுடைய அம்மா அப்பாவிற்கு பெருமையும் அவர்களின் ஆசையையும் நிறைவேற்றி இருக்கிறேன் என்பது எனக்கு சந்தோசம் தான் என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே கடந்த சில வாரங்களாகவே கள்ளக்குறிச்சி என்கிற பெயர் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
விஷ சாராயம் அருந்தி அங்கு 50க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். இதனால் அங்கு அரசியல் பிரமுகர்கள் பலரும் சென்று வந்த வண்ணமாக இருப்பதால் அந்த ஊர் பற்றிய பேச்சு அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சியில் இருந்து வந்து ஜான் ஜெரோம் வெற்றி பெற்றது குறித்து பலரும் பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications