விளையாட்டு வினையானது..மாகாபா கேள்வியால் கோபத்தில் கிளம்பிய கங்கை அமரன்..சூப்பர் சிங்கரில் பரபரப்பு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் ஜூன் 18-ம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இந்த வாரம் நடுவர்களில் ஒருவராக கங்கை அமரன் கலந்து கொண்டிருக்கிறார்.
அதில் கங்கை அமரனின் பாடல்களை மாகாபா கிண்டல் செய்ததால் கோபத்தில் நான் கிளம்புகிறேன் என்று கூறியிருக்கிறார். அது இப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் இந்த வார எபிசோடில் நடுவர்களாக பாடகி சித்ரா, பாடகர் அனந்த் வைத்தியநாதன், பாடகர், இசையமைப்பாளர் என பல முகங்கள் கொண்ட கங்கை அமரன், பாடகர் புஷ்பவனம் குப்புசாமி போன்றோர் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அதுபோல இந்த வார தொகுப்பாளராக மாகாபா மற்றும் குரோஸி கலந்து கொண்டிருக்கின்றனர். இதுவரைக்கும் தொகுப்பாளராக இருந்த பிரியங்கா இந்த வாரம் இல்லை என்பது பலருடைய வருத்தமாக இருக்கிறது. அதே நேரத்தில் குரோஸி மற்றும் மாகாபா இருவரும் நடுவர்களையே கலாய்த்து பல்பு வாங்கி இருக்கின்றனர்.
அந்த வகையில் இந்த வாரம் டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் அருணா மேடைக்கு அழைக்கும் போது ஒரு மியூசிக் ஒலிக்கப்படுகிறது. அது கங்கை அமரன் பாடல் தான்." வந்தனம் என் வந்தனம்" என தொடங்கும் பாடல் மியூசிக் கேட்கிறது. அதை கேட்டு மாகாபா என்ன உங்களுக்கு மட்டும் சீரியல் மியூசிக் போடுறாங்க என்று அருணாவிடம் கேட்க, டேய் இது நான் கஷ்டப்பட்டு போட்ட மியூசிக் என்று கங்கை அமரன் கூறுகிறார்.
அதைத் தொடர்ந்து இது உங்க பாட்டா ஐயோ என்று பதறியபடி குரோஸி சொல்ல, ஆனாலும் மீண்டும் மாகாபா என்ன பாட்டு இது?," வந்தனம் சைதாப்பேட்டை நந்தனும்னு" இது ஒரு பாட்டா என்று நக்கல் செய்ய," ஏய் நான் போறேன் பா எனக்கு இது சரிப்பட்டு வராது என்று சொல்ல, அதற்கு மாகாபா சார் போகாதிங்க சார், நானும் வந்துருவேன் உங்க கூட என்று மேலும் நக்கல் செய்ய கடுப்பான கங்கை அமரன் ஏய் என்று அதட்டுகிறார். தற்போது இந்த பிரமோ பரபரப்பாக வலம் வருகிறது.

இந்த நிலையில் கங்கா அமரன் யாருன்னு தெரியுமா? இப்படி கூப்டு வச்சி நிகழ்ச்சியில் அவமானப்படுத்துறாங்களே, ஒரு பாடலாசிரியராகவும், பாடகராகவும் இசையமைப்பாளராகவும், இயக்குனராகவும் பல முகங்களை வைத்திருக்கும் கங்கை அமரன் இயக்கிய படங்களில் ஒரு கதை இருக்கும். அந்த கதையை ரசிகர்களுக்கு புரிய வைப்பதற்காக எளிய திரைக்கதையும் இருக்கும். அதற்குள்ளே காமெடியும், செண்டிமெண்ட்டும் இருக்கும்.
முக்கியமாக பாடல்கள் பட்டய கிளப்பும். அது மட்டுமாங்க அவருடைய திரைப்படங்களில் அதிகமாக கண்ணுக்கு முழுமையான லொகேஷனும் இருக்கும். அந்த மாதிரி பல ஹிட் திரைப்படங்களை கொடுத்த கங்கை அமரன் இந்த நிகழ்ச்சியில் இப்படி கலாய்க்கப்படுவது அவருடைய ரசிகர்களுக்கு வருத்தமாக இருப்பதாக கமெண்ட்களில் தெரிவிக்கிறார்கள்.
-
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications