Super Singer: இளையராஜா நாம நினைக்கிற மாதிரி கிடையாது! நேரில் சந்தித்த சூப்பர் சிங்கர் சரண் நெகிழ்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான இசை நிகழ்ச்சியான 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சி, பல திறமையான பாடகர்களைத் தமிழ் திரையுலகத்திற்குக் கொடுத்து வருகிறது. இந்த சீசனில் போட்டியாளராகக் கலந்து கொண்டிருக்கும் சரண் என்பவர், அச்சு அசல் இளையராஜா பாடல்கள் பாடுவதில் தனி முத்திரை பதித்து, மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருக்கிறார்.

சரண் என்ற ராஜா
சரணின் அறிமுகப் பாடல் ரசிகர்கள் மனதில் ஆழமாக இடம் பிடித்துவிட்டது. இளையராஜாவைப் போலவே தத்ரூபமாகப் பாடும் இவருடைய குரல், இசையமைப்பாளரின் அசல் சாயலைக் கொண்டிருப்பதால், பலருடைய ஃபேவரிட் போட்டியாளராக சரண் மாறியுள்ளார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மிஷ்கின் உட்படப் பல பிரபலங்கள், சரணின் திறமையைப் பாராட்டி, அவருக்கு 'ராஜா' என்ற பட்டத்தையும் சூட்டியிருக்கிறார்கள். "சரண் என்ற என் பெயருக்குப் பின்னால் 'ராஜா' என்ற பெயரையும் சூட்டி இருப்பது எனக்கு மிகவும் பெருமை" என்று சரண் பெருமிதமாகப் பேசியுள்ளார்.
கங்கை அமரன் நிறைவேற்றிய கனவு
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் கங்கை அமரன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது நடந்ததுதான் அனைவரையும் நெகிழ வைத்த ஒரு சம்பவம். கங்கை அமரன் முன்பு இளையராஜாவின் பாடலைச் சரண் பாடியிருந்தார். அதைக் கேட்டு பிரமித்துப் போன கங்கை அமரன், "உன்னுடைய ஆசை என்னவென்று சொல்லு, அதை நான் நிறைவேற்றுகிறேன்"என்று கேட்டார்.

சரணின் ஆசை
அதற்குச் சரண், "என்னுடைய ஆசை என்றால் இளையராஜா ஐயாவை ஒருமுறை தொட்டுப் பார்க்க வேண்டும். அதுதான் என்னுடைய கனவு, லட்சியம்" என்று உருகி பேசியிருந்தார். அதற்கு அங்கிருந்தவர்கள், சரண் நிகழ்ச்சி முடியும் வரைக்கும் சென்னையில்தான் இருப்பார் என்று சொல்ல, உடனே கங்கை அமரன், "நான் உனக்கு அண்ணனிடம் (இளையராஜா) பேசிவிட்டு, அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்" என்று வாக்குறுதி அளித்திருந்தார்.
இளையராஜாவை சந்தித்த சரண்
கங்கை அமரனின் பாசமும், முயற்சியும் வீண் போகவில்லை. இந்த வாரத்திற்கான ப்ரோமோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தப் ப்ரோமோவில், இளையராஜாவின் வீட்டிற்குச் சென்று சரண் இளையராஜாவைச் சந்தித்திருக்கிறார். அவருடன் புகைப்படங்களும் எடுத்து, தனது கனவை நிஜமாக்கிக் கொண்டார். அதற்கு உடனடியாகக் கங்கை அமரனுக்கு சரண் நன்றி தெரிவித்த காட்சிகளும் இடம் பெற்றிருந்தது.
சரணின் பெருமிதம்
இளையராஜாவைச் சந்தித்த பின்னர், சரண் ஒரு பேட்டியில் பேசிய உருக்கமான வார்த்தைகள், இசை மீதான அவரது அன்பை வெளிப்படுத்தியது. "இளையராஜா நாம் நினைக்கிற மாதிரி கிடையாது. அவர் எல்லாப் பேட்டிகளிலும் 'நான் நீங்க நினைக்கிற மாதிரி இல்லை'ன்னு சொல்லுவாரு, அதுதான் உண்மை. அவரை எளிதாக யாராலும் புரிந்துகொள்ள முடியாது. அவருக்குள் அவ்வளவு திறமைகள் இருக்கிறது."
"அவருடைய பாடல்களாக இருந்தாலும் சரி, அவராக இருந்தாலும் சரி, அது வித்தியாசம் தான். என்னிடம் இளையராஜாவைப் பற்றி என்ன நினைக்கிறீங்கன்னு யாராவது கேட்டா, நான் சொல்லுவேன், 'தமிழ் வார்த்தைகளால் இளையராஜாவை அடக்கி விடக்கூடாது!' என்று" சரண் பெருமிதமாகச் சொல்லியிருந்தார்.
கங்கை அமரன் மூலமாக சரணின் கனவு நிறைவேறிய இந்த சம்பவம், திரையுலகப் பிணைப்பையும், உண்மையான திறமைக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தையும் எடுத்துக்காட்டி, ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்!












Click it and Unblock the Notifications