சூப்பர் சிங்கரில் அவமானம்! 8 வருட போராட்டம்! அந்த வீடியோவில் பேசியது நான்தான்.. யாழினி எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல சீசன்களில் கலந்து கொண்ட பாடகி யாழினி சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கஷ்டங்கள் மற்றும் தான் பட்ட அவமானங்கள் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதோடு தான் குழந்தையாக இருக்கும்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவர்கள் பற்றி கம்பளைண்ட் பண்ணிய வீடியோ இணையத்தில் வைரலானது குறித்தும் பேசியிருக்கிறார்.

ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன விஜய் டிவி நிகழ்ச்சியில் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்றால் அதை தொடர்ந்து அடுத்தடுத்து சீசன்கள் தொடங்கப்படுவது வாடிக்கைதான். அந்த வகையில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சீனியர் மற்றும் ஜூனியர் என அனைத்து நிலைகளிலும் போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் வகையில் அடுத்தடுத்து தொடங்கப்பட்டு வருகிறது.

Television Vijay TV Super Singer entertainment

அதோடு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் இப்போது சினிமாவில் பின்னணி பாடகர்களாக மாறி இருக்கிறார்கள். அதனாலேயே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பலர் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ஒரு போட்டியாளர் தான் பாடகி யாழினி. இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் முதலாவது, இரண்டாவது சீசனில் கலந்து கொண்டிருக்கிறார். அதோடு மூன்றாவது சீசனில் பைனல் வரை சென்றிருந்தார்.

அதற்குப் பிறகு சீனியர் சீசன் 9 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார். அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசுகையில் நான் குழந்தையாக இருக்கும்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தேன். அப்போது அந்த ஆடிஷனில் கலந்து கொண்ட போது நான் யமுனை ஆற்றிலே என்ற பாடலை பாடினேன். அந்த பாடலை நான் பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

அதனால் எனக்கு அப்போதே தெரிந்து விட்டது. நம்மை ரிஜெக்ட் செய்து விடுவார்கள் என்று, பிறகு நான் நினைத்தது போலவே அவர்கள் ரிஜெக்ட் செய்து விட்டார்கள். கூடவே நீ இன்னும் கத்துகிட்டு பாட்டு பாடணும் என்று சொல்லி இருந்தார்கள். நான் அதை கேட்டு சோகமாக வெளியே வரும்போது வீடியோ எடுப்பவர்கள் உள்ளே என்ன சொன்னார்கள் என்று கேட்டபோது, நான் நடுவர்கள் இரண்டு பேரும் பேசி வச்சிட்டு என்னை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க, இனி நான் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வரமாட்டேன் என்று குழந்தைதனமா ஏதோ சொல்லி இருக்கிறேன்.

Television Vijay TV Super Singer entertainment

அந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் அதிகமாக வைரலாகி கொண்டு இருக்கிறது. ஆனாலும் அதற்கடுத்த சீசன்களில் கலந்து கொண்டு தான் இருந்தேன். எனக்கு என்னுடைய திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகவே இருக்கிறது. ஆனாலும் நான் பல சீசன்களில் போட்டியாளராக கலந்து கொண்டாலும் எட்டாவது சீசனில் கலந்து கொள்ளவில்லை. அதற்கு காரணம் நான் நியூமராலஜியை ரொம்பவே நம்புபவர். எனக்கு எட்டாவது எண் ராசி இல்லை என்று அதில் சொல்லி இருந்ததால் நான் எட்டாவது சீசனில் கலந்து கொள்ளவில்லை.

அது குறித்து நான் ஒன்பதாவது சீசனில் கலந்து கொண்ட போது சொல்லியிருந்தேன். அதை வைத்து இணையத்தில் அதிகமானோர் என்னை கலாய்த்திருந்தனர். சைக்காலஜி படிக்கிற நீங்க ஒரு பாடகியாக இருக்கும் போது இதையெல்லாமா நம்புவீங்க என்று பலர் கேள்வி கேட்கிறாங்க. என்னுடைய நம்பிக்கை வேறு சைக்காலஜி படிப்பு வேறு என்று நான் சொல்லுவேன். ஆனாலும் என்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக எட்டு வருடமாக நான் போராடிக் கொண்டிருக்கிறேன்.

என்னுடைய கனவு ஒருநாள் கண்டிப்பாக நிறைவேறும். என்னுடைய பாடல்கள் குறித்து பலரும் பாராட்டுகிறார்கள். ஒரு சிலர் நான் குட்டையாக இருக்கிறேன் என்று என்னை கிண்டல் செய்கிறார்கள். அதைக் குறித்து எனக்கு கவலை கிடையாது. என்னுடைய திறமைக்கு அங்கீகாரம் வேண்டும் என்பதற்காகத்தான் நான் இப்போதும் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்று அந்த பேட்டியில் சூப்பர் சிங்கர் யாழினி பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+