"சூப்பர் ஹீரோ" சரிந்த கதை.. நடிகரின் மோசமான நிலைமை.. அந்த பழக்கம் வேற.. வலியில் வாரிசுகள்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இப்படி போராடுவதற்கான காலத்தைகூட, தோல்வியடைந்தவர்களுக்கு இந்த சமூகம் யாருக்கும் தருவதில்லை. இதுபோன்ற அழுக்கு எண்ணங்களை கழட்டிவிட்டு, நாலு பேருக்கு உதவி செய்தாலே, இதுபோன்ற மரணங்களை தவிர்க்கலாம்" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன் வாரிசு நடிகர்களின் வலிகளையும், வேதனைகளையும் விரிவாக விவரித்துள்ளார்.

Media circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "ஒருவருக்கு ஆயிரம் திறமை இருக்கும்.. சுதந்திரமாக அவர்களை வேலை பார்க்க விட்டாலே போதும்.. வாரிசு நடிகர்களுக்கு என்ன சிக்கல் என்றால், தங்களது தகப்பனாரின் வெற்றியே பிளஸ் ஆகிறது, அதுவே மைனஸும் ஆகிறது. எப்படிப்பட்ட கம்பீரமான, ஆளுமையான பாரதிராஜா சார்? இதுபோல தன்னுடைய மகனுக்கே கொள்ளி வைக்கணும் என்ற கொடுமையான சூழ்நிலை, எந்த தகப்பனுக்கும் வரக்கூடாது.

Television superheros Actors

இப்ப என்ன பண்றே?

25 வயது இளைஞன் சமூகத்துக்குள் வரும்போது, "இப்ப என்ன பண்றே? அடுத்து என்ன?" என்று பலரும் கேட்கிறார்கள். இது அநாகரீகமான, கேவலமான கேள்வியாகும்.. வேலை கிடைக்காத இளைஞனுக்கு, எதிர்காலத்தை நோக்கி செல்லும் இளைஞனுக்கு, இப்படியான கேள்விகள் மிகப்பெரிய மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதை கேட்பவர்கள் யாரென்றால், நண்பர்கள் கிடையாது, அவர்கள் ஆறுதல்தான் சொல்வார்கள், ஆனால், வன்மம் பிடிச்சவர்கள், சொந்தக்காரர்கள் இப்படி வேண்டுமென்றே கேள்வி கேட்பார்கள்.

ஊக்குவிக்கவில்லை

இப்படி பல மனஅழுத்தம் மனோஜூக்கு பல இடங்களில் கிடைத்திருக்கிறது.. பாரதிராஜா என்பவர் சினிமாவில் பெரிய நபர்.. "அப்பா" என்ற ஸ்தானத்தில் வைத்து கொண்டாடப்படுபவர் பாரதிராஜா.. கிட்டத்தட்ட 25 வருஷமாக முக்கிய இடத்தை பிடிக்க வேண்டும் என்று மனோஜ் போராடினார்.. ஒரு தகப்பனாராக, படங்களை தந்து, வீடு, வாசல் தந்து பாரதிராஜா கடமைகளை செய்தார்.. ஆனால் மனோஜை சினிமா உலகில் யாருமே ஊக்குவிக்கவில்லை.. மனோஜூக்கு யாரும் வாய்ப்பும் தரல..
உதவி செய்யாவிட்டாலும், முயற்சி செய்யும்போது, அவருக்கு ஆறுதல் தந்திருக்கலாம்.. ஆனால், "உங்கப்பா பெரிய ஆளு, நீங்க என்ன பண்றீங்க" என்று கேட்டு கேட்டு துளைத்தெடுத்துவிட்டார்கள். அப்பா காசுல உட்கார்ந்து சாப்பிடும் என்று தன்னை கேலி செய்கிறார்களோ? நம்மை யாருமே மதிக்கலியே? என்ற எண்ணமும், தாழ்வு மனப்பான்மையும் மனோஜுக்கு வந்துவிட்டது.

காலியாகும் சிகரெட் பாக்கெட்டுகள்

இதுபோன்ற மனநிலைமை வந்தால், முதலில் தங்களை தனிமைப்படுத்தி கொள்வார்கள், பிறகு, சிகரெட் பாக்கெட்டுகள் காலியாகும், அடுத்து மதுப்பழக்கத்தில் விழுந்துவிடுவார்கள். இப்படி பல இயக்குனர்களின் மகன்கள், நடிகர்களின் மகன்கள் இதையெல்லாம் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வேதனையைதான் மனோஜ்க்கு இந்த திரையுலகம் 30 வருட காலம் தந்துள்ளது.

சினிமாவை மட்டும் குறை சொல்ல முடியாது, இந்த சமூகமே அப்படித்தான் இருக்கிறது.. வேலை கிடைக்காத இளைஞனை பார்க்கும் பார்வையே வேறுவிதமாக இருக்கிறது. வேலையே கிடைத்தாலும், இன்னும் கல்யாணம் ஆகலியா? ஜாதகம் சரியில்லையா? என்பார்கள், கல்யாணம் ஆகி 15, 20 நாளிலேயே வீட்டில் ஏதாவது விசேஷம் இருக்கா? என்று கேட்பார்கள். இதெல்லாம் கணவன் மனைவியின் அந்தரங்கம்.

வாரிசுகளின் துயரம்

பிரபு பெரிய நடிகர் என்றாலும் சிவாஜி சாரின் உச்சத்தை அடையவில்லை.. பிரபுவின் உச்சத்தை விக்ரம் பிரபு அடையவில்லை..
ஒருவர் பெரிய நபராக வளர்ந்தால், அவரது மகனும் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதற்கு உதாரணமாக, கார்த்திக் மகனை சொல்லலாம், பி.வாசுவின் மகனை சொல்லலாம், ரஜினி மகள்கள், கமல் மகள்கள், பாண்டியராஜன், பாக்யராஜ் , என சொல்லிக் கொண்டே போகலாம்.

அருண் விஜய்க்கு 35 வருட கால போராட்டங்கள் நடந்தது.. எவ்வளவு கேள்விகள் அருண் விஜய்க்கு வந்திருக்கும்? இப்போதுதான் உயர்ந்த இடத்தை பிடித்துள்ளார்.. இப்படி போராடுவதற்கான காலத்தைகூட, தோல்வியடைந்தவர்களுக்கு இந்த சமூகம் யாருக்கும் தருவதில்லை. இதுபோன்ற அழுக்கு எண்ணங்களை கழட்டிவிட்டு, நாலு பேருக்கு உதவி செய்தாலே, இதுபோன்ற மரணங்களை தவிர்க்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+