சூப்பர்ஸ்டார் சர்ச்சை.. பிரச்சனையை தொடங்கிய நடிகர் சரத்குமார்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க
சென்னை: நடிகர் சரத்குமார் நடிகர் விஜயோடு வாரிசு திரைப்படத்தில் நடித்த நிலையில் இசை வெளியீட்டு விழாவில் விஜயை சூப்பர் ஸ்டார் என்று அழைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தில், "பட்டத்தை பறிக்க பலர்" என்று பாடல் ஒன்றில் குத்தலாக டுவிஸ்ட் வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் இதுகுறித்து பல்வேறு சர்ச்சைகளும் வதந்திகளும் பரவி வரும் நிலையில் நடிகர் சரத்குமார் பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதை குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது பல்வேறு சர்ச்சைகளும், பிரச்சனைகளை ஏற்பட்டு விடுகிறது. அது ரசிகர்கள் மத்தியில் இருந்து சில நேரங்களில் உருவாகி இருந்தாலும் திரைப்படத்தை பற்றி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவ சில பிரச்சனைகளை உருவாக்கி திரைப்படத்தைப் பற்றிய ஆர்வத்தை அதிகரிக்கின்றனர்.
அந்த வகையில் தற்போது நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தைப் பற்றி பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது. காரணம் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன கழுகு மற்றும் காகம் கதை. அதோடு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடந்த நிகழ்வுகள் தான்.

அதாவது சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திருப்திகரமான வசூலையும் பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு அப்பாவாக நடிகர் சரத்குமார் நடித்திருப்பார். இந்த நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியிட்டு விழாவில் சரத்குமார் பேசிக் கொண்டிருக்கும்போது விஜய்யை "சூப்பர் ஸ்டார்" என்று அழைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
முன்னணி நடிகர் ஒருவரே விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தை கொடுத்து விட்டாரே என்றும் நடிகர் ரஜினிகாந்த் மீது உள்ள பொறாமையில் காரணமாகத்தான் சரத்குமார் இப்படி விஜய்யை சூப்பர் ஸ்டார் ஆக்கி அழகு பார்த்திருக்கிறார் என்று ஏகப்பட்ட சர்ச்சைகளும், விவாதங்களும் வெடித்துக் கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து நடிகர் சரத்குமார் செல்லும் இடங்களில் எல்லாம் செய்தியாளர்கள் ரஜினிகாந்த் இன்னமும் முன்னணி நடிகராக நடித்துக் கொண்டிருக்கும் போது, சூப்பர் ஸ்டார் பட்டத்தை எப்படி விஜய்க்கு கொடுக்கலாம் என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.

அதற்கு சரத்குமார் சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது அனைத்து மாநிலங்களிலும் பல நடிகர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது என்றும் பேசி இருந்தார். அதன் காரணமாக ஜெயிலர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன காக்கா- கழுகு கதைக்கு அதிகமான ரசிகர்கள் விஜய் தான் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு போட்டி போடுவதாகவும் ரஜினிகாந்த் விஜய்யை தான் குறிப்பிடுவதாகவும் கூறி வந்தனர். ஆனால் இன்னும் ஒரு சில ரசிகர்கள் இது விஜய்க்கான கதை இல்லை. ரஜினிகாந்தை வீழ்த்த முடியாமல் இருக்கும் சரத்குமார் போன்ற ஒரு சில நடிகர்களுக்கு தான் என்று கதையையே மாற்றிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் சரத்குமார் சமீபத்தில் பேட்டி ஒன்றில் டாப் ஹீரோவாக வலம் வருபவர்களை சூப்பர் ஸ்டார் என்று சொல்வது வழக்கம் தான். தம்பி விஜய்யை அந்த நோக்கத்தில் தான் நானும் சூப்பர் ஸ்டார் என்று சொன்னேன். ஆனால் நடிகர் ரஜினிகாந்தை மட்டம் தட்டி பேச வேண்டும் என்பது என்னுடைய நோக்கம் கிடையாது. இது குறித்து கொஞ்ச நாள் முன்னாடியே நான் ரஜினியிடம் பேசி விட்டேன். அவர் நீங்கள் அதுக்கெல்லாம் கவலைப்படாதீங்கன்னு சொல்லிவிட்டார் என்று சூப்பர் ஸ்டார் சர்ச்சை குறித்து சரத்குமார் விளக்கம் கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications