பெருகிக் கொண்டிருக்கும் ஆதரவால்... திணறிக் கொண்டிருக்கும் ரசிகர்கள்.. எதிர்பார்க்காத முடிவு
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நிலவி வரும் குழப்பமான நிலவரங்களை பார்த்து ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர்.
சமூக வலைத்தளத்தில் பெருகி வரும் ஆதரவு மட்டுமல்லாமல் போஸ்ட்களும் ராஜுவின் ரசிகர்களை கலங்க வைத்து வருகிறது.

ரசிகர்களின் கருத்து போட்டி
பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் கிராண்ட் பினாலே நாளை இருக்கும் தருணத்தில் இன்று போட்டியாளர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களை பிடித்த ரசிகர்களுக்கும் தூக்கம் வராது போல, அதனால்தான் சமூக வலைதளத்தை தங்களுடைய கருத்துகளை பதி விட்டு வருகிறார்கள். ஏற்கனவே இவர்கள் கடந்த நூறு நாட்களாக சமூக வலைத்தளத்தில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து கொண்டிருந்தாலும் தற்போது தங்களுடைய ஆதரவு யாருக்கு என்பதில் போட்டி நிலவி வருகிறது.

கொஞ்சம் குழப்பம்தான்
பிக் பாஸில் ஐந்தாவது சீசனில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் அறிமுகமாகி தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருக்கும் நிலையில், இன்று ஒரு போட்டியாளர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற இருக்கும் தருணத்தில், ஜெயிக்கப்போவது யாராக இருக்கும் என்பது தான் பலருடைய கேள்வியாக இருந்துவருகிறது. ஆரம்பத்திலிருந்து மக்களின் மனதை ஜெயித்தவரா??அல்லது தனது கருத்துக்களை எந்த சூழ்நிலையில் இருந்தாலும் தைரியமாக எடுத்துரைத்தவரா??என்பது பலருடைய குழப்பமாக இருந்து வருகிறது.

சமூக வலைத்தளத்தில் ஆதரவு
இப்போது இருக்கும் ஐந்து போட்டியாளர்களில் நிரூப் ஐந்தாவது போட்டியாளராக வெளியேற போகிறார் என்ற தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் மீதம் இருப்பது ராஜு, பிரியங்கா, பாவனி, அமீர் இந்த நான்கு பேருமே விஜய் டிவியை சார்ந்தவர்களாக இருப்பதால் இவர்களில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்று ரசிகர்களுக்கு ஒரு பக்கம் குழப்பமாக இருந்து வருகிறது. ஆனால் இது வரைக்கும் இல்லாத வகையில் இன்று அதிகமான விஜய் டிவி பிரபலங்கள் பிரியங்காவிற்கு சப்போர்ட் கொடுத்து வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் தங்களுடைய கருத்துக்களையும் ஆதரவுகளையும் பிரியங்காவிற்கு தெரவித்துக் கொண்டிருக்கின்றனர்.

அதிகரிக்கும் ஆதரவு மற்றும் அன்பு
நேற்றைய எபிசோடில் பிரியங்காவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை வீட்டிற்கு பிக்பாஸ் அனுப்பி வைத்துவிட்டது. உடல்நிலையை சரி செய்துவிட்டு பைனலில் அன்று நேரடியாக அவரை கலந்துகொள்ள சொல்லியிருந்தது. இதனை பார்த்ததும் பிரியங்கா விரைவில் நலம் பெற்று வரவேண்டும் என்று பலரும் சமூக வலைத்தளத்தில் அவருக்கு எனர்ஜி கொடுக்கும் விதமாக ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அதில் காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் ராகவா புலி, தன்னுடைய இன்ஸ்டாகிராமில், நீ இவ்வளவு தூரம் வந்ததே எனக்கு பெருமை தான் அக்கா...என்று பிரியங்காவை டேக் செய்து, திரும்பி வா உன் திசை எது தெரிந்தது, மாறிப் போகாது..என பாடல் வரிகளை அனுப்பியிருக்கிறார். இதை பார்க்கும்போது அப்போ டைட்டில் வின்னர் பிரியங்கா தானா? ?என ரசிகர்களின் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications