விஜய் டிவி பிரபலங்களின் மொத்த ஆதரவு...கடைசி நேரத்தில் மாறிய ட்விஸ்ட்..பிக்பாஸில் பரபரப்பான நிமிடங்கள்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இருக்கும் கடைசி தருணத்தில் பரபரப்பான பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
இதுவரைக்கும் ராஜுவின் பெயரை அதிகமாக கூறி வந்த ரசிகர்கள் தற்போது அவர் டைட்டில் ஜெயிப்பாரா?? இல்லையா?? என்பது கேள்விக் குறியில் இருந்து வருகின்றனர்.

வித்தியாசமான ஐந்தாவது சீசன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தற்போது முடிவடைய கடைசி கட்டத்தை எட்டிவிட்டது. இந்த ஐந்தாவது சீசன் இதுவரைக்கும் இருந்த சீசன் களை விட வித்தியாசமாக இருக்கிறது என்று ஆரம்பத்தில் இருந்து ரசிகர்கள் கூறி வந்தனர். இதில் அதிகமான புது போட்டியாளர்கள் அறிமுகமானது ஒருவித காரணமாக இருந்தாலும், இதுவரைக்கும் இல்லாத வகையில் போட்டியாளர்கள் அதிகப்படியாக இந்த சீசனில் இறக்கப்பட்டனர். ஒருசில போட்டியாளர்கள் மட்டுமே ரசிகர்களுக்கு பரிச்சயமான முகம் களாக இருந்தனர் .அதிலும் அவர்களில் பலர் விஜய் டிவியை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் ஆரம்பத்தில் குறிப்பிட்டு கூறிவந்தனர்.

எல்லாமே வித்தியாசமாக இருக்கே
நிகழ்ச்சியின் சுவாரசியமான தருணமாக பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தாலும், இந்த நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யத்தைக் கூட்டும் போட்டியாளர்களாக இருப்பவர்களில் ரசிகர்களின் மனதை அதிகமாக கவர்ந்தவர்கள் ராஜு மற்றும் பிரியங்கா இருந்து வந்தனர். இவர்கள் இருவருமே விஜய் டிவியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இவர்களுக்கு அதிகமாக சப்போர்ட் ரசிகர்களிடம் இருந்து வந்தது. அதில் பல ரசிகர்கள் என்ற முறையில் ராஜூ தான் ஜெயிப்பார் என்று ஆரம்பம் முதலே கூறி வந்தனர். ஆனால் தற்போது நடக்கும் செயல்கள் வித்தியாசமாக இருக்கிறது என்று பலரும் பதறி வருகின்றனர்.

பிரபலங்களின் திடீர் சப்போர்ட்
சமூக வலைத்தளத்தில் பிரியங்காவிற்கு அதிகமான ஆதரவு கிடப்பதைப் பார்க்கும்போது டைட்டில் மாற வாய்ப்பு உள்ளதா?? என்று ராஜுவின் ரசிகர்கள் ஒருபக்கமாக குழப்பத்தில் இருக்கும்போது, மற்றொரு பக்கத்தில் இதுவரைக்கும் அமைதியாக இருந்த விஜய் டிவி பிரபலங்கள் பலர் தற்போது பிரியங்காவிற்கு ஆதரவுகளை தேட தொடங்கியிருக்கின்றனர். இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பல ரசிகர்கள் பிரியங்காவிற்கு சப்போர்ட் செய்து போஸ்ட் போட்டுள்ளனர். இது ராஜுவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவும் கடுப்பாகவும் இருந்தாலும் பிரியங்காவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கடைசிநேரத்தில் மாறிய நிலைமை
இதுவரைக்கும் ஒவ்வொரு முறையும் ஜெயித்து வந்த பிரியங்கா கடைசி தருணத்தில் உடல்நிலை சரியில்லாமல் வெளியே அனுப்பப்பட்டு இருக்கிறார். இவர் ரெஸ்ட் எடுத்துவிட்டு நேரடியாக கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிக்பாஸ் அறிவித்து இருந்தது. இந்த நிலையில்தான் வீட்டை விட்டு வெளியேற மாட்டேன் என்று குழந்தை போல அழது வெளியேறிய பிரியங்கா ரசிகர்களின் மனதில் சிம்பதி ஏற்படுத்திவிட்டார் என்று ஒரு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர் .மற்றொரு தரப்பினர் இந்த முறை செலக்டிங் சரியாக இருக்குமா இல்லையா என்று சமூக வலைத்தளத்தில் பட்டிமன்றங்களில் நடத்தி வருகிறார்கள்.
Recommended Video

ஆதரவு அதிகரிக்கிறது
விஜய் டிவி யை சேர்ந்த பிரியங்காவிற்கு விஜய் டிவியை சேர்ந்த தீனா, ரக்ஷன், மானசி, மைனா நந்தினி, சிவாங்கி, மா.கா.பா.ஆனந்த், புகழ், சுனிதா என இன்னும் பல பிரபலங்களும் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய ஆதரவுகளை தெரிவித்து வருகிறார்கள். இதை வைத்து பல ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் மீம்ஸ்களை போட்டு கலாய்த்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரே நாளில் தெரிந்துவிடும் யார் வெற்றி கோப்பையை தட்டுகிறார்கள் என்பது என பலர் கடைசி தருணத்துக்காக காத்து இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications