அந்த மனசுதான் கடவுள்! இறந்த நடிகர் ரதீஷின் மகள்களுக்கு 100 சவரன் போட்டு திருமணம் நடத்திய சுரேஷ் கோபி
சென்னை: சுரேஷ் கோபிக்கு இத்தனை நல்ல மனதா? நடிகர் ரதீஷின் 4 குழந்தைகளை படிக்க வைத்து திருமணம் செய்து வைத்துள்ளார். அதிலும் பெண்களுக்கு 100 சவரன் தங்கத்தை போட்டு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சுரேஷ் கோபி பல வருடங்களுக்கு முன் டெல்லி சென்றிருந்தார். அங்கு அவரை டெல்லியின் பல தெருக்களில் ஓட ஓட விரட்டிக் கொல்வார்கள்.

அந்த கூலிப்படை கும்பலுக்கு தலைவன் நம்ம 'மம்பட்டியான்' தியாகராஜன் தான்.
அன்று அவர் நினைத்திருக்க மாட்டார். இந்த டெல்லி தெருக்களில் 'நியூடெல்லி' பட ஷூட்டுக்காக ஓடிக் கொண்டே இருக்கிறோம். ஒரு நாள் இதே டெல்லியில் "நான் சுரேஷ்கோபி...கடவுள் மீது ஆணையாக...." என்று நாட்டின் பிரதிநிதியாக சத்யவாக்குமூலம் எடுப்பேன் என்று....
ரதீஷ் என்று ஒரு நடிகர்... 80களில் மலையாளத்தில் ஆக்ஷன் ஹீரோ.. பின்னாளில் அவர் வில்லனாக வந்தார்.. வில்லனாக சுரேஷ் கோபியோடு அவர் நடித்த 'கமீஷனர்' மிகப்பெரிய ஹிட்.. கேரளம் முழுக்க சுரேஷ்கோபியோடு, வில்லன் மோகன் தோமசும் பேசப்பட்ட படம்.. மோகன் தோமஸாய் ஹைடெக் அரசியலை மாற்றும் வில்லன் ரதீஷ் தான்..
ரதீஷ் மனைவி டயானா. ரதீஷின் மாமனார் முன்னாள் எம்.பி. ஹேமச்சந்திரன்... ரதீஷுக்கு ஆண் இருவர். பெண் இருவர் என நான்கு குழந்தைகள்...
திடீர்னு 2002ல் ரதீஷ் ஹார்ட் அட்டாக்கில் மறைந்து போனார்.. அவர் வாங்கி வைத்த கடனுக்காக அவர் குடும்பத்தை ஒரு ஃபைனான்சியர் பிடித்து வைக்க சுரேஷ்கோபியே சினிமா நாயகனைப் போல் அங்கு போய் கடனை கொடுத்து அதிரடியாக மீட்டு வந்தார்.
அதோடு விடவில்லை. அந்த நான்கு குழந்தைகளையும் படிக்க வைத்தார். இவருக்கு நடிகை மேனகாவின் கணவர் சுரேஷும் உதவ படிப்பு நடக்கிறது. தந்தை இழந்த சோகத்தில் உள்ள நான்கு குழந்தைகளுக்கும் மீண்டும் சோகம். தாய் டயானா 2014ல் கேன்சரில் இறந்துவிட உறுதுணையாய் இரண்டு சுரேஷ்களும் இருக்கின்றனர்.
இரு பெண்களுக்கும் திருமணம் செய்து வைக்கின்றனர். சுரேஷ் கோபி நூறு சவரன் தங்கம் கொடுத்து..... நன்றாக கேளுங்கள்...நூறு சவரன்.... அந்த பெண்ணை துபாயில் பாங்க் வேலையிலுள்ள ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்..
சினிமாவால் கெட்டுப்போகிறது எனக் கூவும் இடத்தில் அவரும் ஒரு கட்சிக்காரர் தான்..
இன்னும் வெளியே சொல்லாமல் பல உதவிகள் ஆதிவாசிகளுக்கு செய்தவர் சுரேஷ்கோபி. ரதீஷின் மாமனார் ஒரு எம்.பியாக இருந்தவர். அவரின் பேத்திக்கு செய்த காலத்தால் அழியாத உதவி சுரேஷ்கோபியை அதே எம்.பியாக்கி இருக்கிறது இன்று. அன்று டெல்லித் தெருக்களில் ஓடிய அதே சுரேஷ்கோபி இன்று சைரன் வைத்த காரில்...
எல்லா வெற்றிகளுக்குப் பின்னாலும் புகழ், பணம் போன்றவை சொல்லப்பட்டாலும் நல்ல குணங்களும், நல்ல மனசும்....
அது தான் சார் கடவுள்.... அது எதுவும் செய்யும்... இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications