Surya: நடிகர் “சூர்யாவின் 45” படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு.. வைரலாகும் போஸ்டர்.. இப்படி ஒரு பெயரா?
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் அவருடைய 45 வது படத்திற்கான போஸ்டரை இன்று பட குழுவினர் வெளியிட்டிருக்கின்றனர். ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா, திரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் "சூர்யா 45" படத்தின் டைட்டில் பெயர் அறிவித்ததும் ரசிகர்கள் பலரும் சூர்யாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
ஆரம்ப காலகட்டத்தில் சின்ன கேரக்டரில் சினிமாவில் நடிக்க தொடங்கி இருந்தாலும் பிறகு மாஸான கேரக்டரில் நடித்து பிரபலம் அடைந்த நடிகர் சூர்யாவிற்கு சில வருடங்களாகவே போதாத காலம் ஆகத்தான் இருக்கிறது. அவர் நடிக்கும் திரைப்படங்கள் இப்போது அவருக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. அவர் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அதிகமான ட்ரோல் செய்யப்படுகிறது. அது கூட அவருடைய அவருடைய படம் ஃபிளாப் ஆவதற்கு காரணமா? என்று அவருடைய ரசிகர்களும் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

சூர்யா படம் நடிகர்கள்
சூர்யா தொடர்ந்து நடிக்கும் திரைப்படங்களில் தன்னுடைய வித்தியாசத்தை காட்டி வருகிறார். ஆனால் அது வெற்றியை அவருக்கு கொடுக்காமல் இருக்கிறது. ஆனாலும் சூர்யா மனம் தளராமல் தன்னுடைய அடுத்த படத்தின் பூஜையை தொடங்கி இருக்கிறார். அதுவும் நடிகரும் இயக்குனருமான ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் தன்னுடைய 45 வது படத்தில் சூர்யா கமிட் ஆகி இருக்கிறார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது. "கட்சி சேரா", "ஆச கூட" போற்ற பாடல்களை இசையமைத்து பிரபலமான சாய் அபயங்கர் சூர்யா 65 படத்திற்கு இசையமைக்கிறார்.
சூர்யா 65 பட தலைப்பு
அதுபோல இந்த படத்திற்கு ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆர் ஜே பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று ஜூன் இருபதாம் தேதி அன்று சூர்யா படத்தின் டைட்டிலை போஸ்டர் உடன் திரை குழுவினர் வெளியிட்டு இருக்கிறனர். இந்த படத்திற்கு "கருப்பு" என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த போஸ்டர் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்திற்க்கு நடிகர் சூர்யா கமிட்டானது குறித்து ஆர்.ஜே பாலாஜி ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.
ஆர் ஜே பாலாஜி பேட்டி
அதில் "சூர்யாவிடம் நான் கதை சொன்ன அரை மணி நேரத்தில் இந்த படத்திற்கு எனக்கு ஓகே என்று சொல்லிவிட்டார். 15 வருடங்களாக நான் கேட்ட கதையில் இந்த படம் கதை என்னை ரொம்பவும் ஈர்த்துவிட்டது. இந்த படத்தில் கண்டிப்பாக நான் நடிக்கிறேன் என்று சூர்யா சொன்னார். அது எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. பல நடிகர்கள் படத்தின் கதையை கேட்டுவிட்டு நீங்க வீட்டுக்கு போயிட்டு வாங்க, உங்களுக்கு போன் பண்றோம், மெயில் அனுப்புறோம் லெட்டர் போடுறோம் என்று என்னென்னலாமோ சொல்லுவாங்க. ஆனால் சூர்யா படத்தின் கதையைக் கேட்டதும் உடனே ஓகே சொல்லிவிட்டார்" என்று ஆர்.ஜே பாலாஜி நெகிழ்ச்சியாக பேசி இருந்தார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications