காக்க காக்க படம் பார்த்து ரசிகர் கலெக்டர் ஆகியிருக்காரு! “கஜினி" ஒருவர் வாழ்க்கையை மாற்றியது- சூர்யா
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் இன்று தியேட்டரில் வெளியாகி இருக்கும் நிலையில் சூர்யா ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது காக்க காக்க திரைப்படத்தை பார்த்து ஒரு ரசிகர் கலெக்டராக மாறி இருக்கிறார் என்று தன்னிடம் பகிர்ந்து கொண்டதாக பேசியிருக்கிறார்.
நடிகர் சிவகுமாரின் மகனான சூர்யா தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். அவர் நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் இன்று உலகெங்கும் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறார். திஷாபதானி, பாபிதியோஸ் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

கங்குவா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் சூர்யா பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் டிடி தான் சூர்யாவிடம் கேள்வி கேட்டிருக்கிறார். அப்போது நீங்க நடிச்ச படங்கள் பற்றி உங்களிடம் யாரேனும் பெருமையாக பேசி இருக்கிறார்களா? என்று கேட்ட கேள்விக்கு சூர்யா பதில் கொடுத்திருக்கிறார்.
ரஞ்சித் மகனுக்கு ஆட்டிசம் பாதித்ததால் சொந்தக்காரங்களே சொன்ன வார்த்தை.. மனைவி செய்த நெகிழ்ச்சி செயல்
சூர்யா பேசுகையில், ஆமா கஜினி படத்தில் வந்த ஒரு டயலாக் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் அதாவது "கஷ்டப்பட்டு வேலை பார்க்கக் கூடாது இஷ்டப்பட்டு வேலை பார்க்கணும்" என்று ஒரு வசனம் வரும். அந்த டயலாக்கை வைத்து ஒரு தம்பி தான் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்ததாக என்னிடம் சொன்னார்.
அவர் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து இருக்கிறார். அங்கு உணவு சப்ளை செய்யும் வேலை பார்த்து வந்த அந்த தம்பி பிறகு ரெஸ்டாரண்ட் மேனேஜர் ஆகி இருக்கிறார். என்னிடம் உங்க படத்தில் இருந்து தான் சார் அந்த ஐடியா வந்துச்சு என்று சொன்னார்.
அதுபோல நான் ஒரு முறை இந்தியாவில் இருக்கும் ஒரு முக்கியமான இடத்திற்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு கலெக்டர் என்னிடம் பேசினார். நான் ஆரம்பத்தில் ஒரு ஐடி டிபார்ட்மெண்டில் கம்ப்யூட்டரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது இப்படியே இருக்கக்கடாது வாழ்க்கையில் ஏதாவது பண்ண வேண்டும் என்று நினைத்தேன்.

அந்த நேரத்தில் காக்க காக்க படத்தை பார்த்தேன். அதனால் ஐபிஎஸ் ஆனேன், பிறகு ஐஏஎஸ் ஆனேன் இப்போ கலெக்டராக இருக்க காரணம் நீங்க நடிச்ச காக்க காக்க திரைப்படம் என்று சொன்னாரு. 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரைக்கும் உருவான நிறைய ஐஏஎஸ் ஆபீஸர்ஸ் நாங்கள் காக்க காக்க படத்தை பார்த்து இன்ஸ்பையர் ஆனோம் என்று சொல்கிறார்கள்.
மனைவியின் பிறந்தநாளுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. இதுவல்லவா சர்ப்ரைஸ்!
எல்லோருக்கும் ஒரு படம் வாழ்க்கையில் கையை பிடித்து கூட்டிட்டு போயிருக்கிறது என்று அந்த பேட்டியில் சூர்யா பகிர்ந்து இருக்கிறார். சூர்யா நடிப்பில் பல திரைப்படங்கள் எவர்கிரீன் திரைப்படங்களாக மாறி இருக்கிறது. ஆரம்பத்தில் எளிமையான கமர்சியல் படங்களில் நடித்து வந்த நிலையில் இப்போது அதிரடியான சண்டைக் காட்சிகள் நிறைந்த படங்களில் நிறைய நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதிலும் அவர் நடித்த காக்க காக்க திரைப்படம் காதல், நட்பு, துரோகம், போலீஸ் வேலை என எல்லாம் கலந்த கலவையாக தான் இருக்கும். அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் பலருடைய ஃபேவரைட் லிஸ்டில் இடம் பிடித்திருக்கும். அதிலும் ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி பிறந்தாலே, ஒன்றாய் இரண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா, என்னை கொஞ்சம் மாற்றி... போன்ற பாடல்கள் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் பாடல்கள் தான்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications