ரஞ்சித் மகனுக்கு ஆட்டிசம் பாதித்ததால் சொந்தக்காரங்களே சொன்ன வார்த்தை.. மனைவி செய்த நெகிழ்ச்சி செயல்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ரஞ்சித் தன்னுடைய மகனுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்பட்டது குறித்து கண்கலங்க பேசி இருந்தார். அதற்கு பிறகு அவருடைய மனைவியான பிரியா ராமன் தன்னுடைய குழந்தை குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கதை சொல்லும் டாஸ்கின் போது ரஞ்சித் அவருடைய கதையை சொல்லியிருந்தார். அப்போது தன்னுடைய மகன் பற்றி பேசும் போது ரொம்பவும் எமோஷனலாக இருந்தார். அதாவது தன்னுடைய மூத்த மகனுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதனால் உறவினர்கள் அதிகமாக அவமானப்படுத்தினார்கள்.

அதையெல்லாம் தாண்டி நாங்கள் என்னுடைய மகனை சந்தோஷமாக வளர்த்து மகிழ்கிறோம். ஒரு குழந்தையை வளர்ப்பது என்பது பெரிய காரியம். அதிலும் ஆட்டிசம் பாதித்த குழந்தையை வளர்ப்பது ரொம்பவும் கஷ்டம். என்னுடைய மனைவி பிரியா ராமன் தான் குழந்தையை ரொம்பவும் கவனமாக வளர்த்துக் கொண்டிருக்கிறார்.
அதுபோல என்னுடைய இரண்டாவது மகனிடம் நான் எனக்கு பிறகு நீ தான் அண்ணனை பத்திரமா பார்த்துக்கணும் என்று சொன்னேன். அதற்கு அவரும் அவருடைய பொறுப்பை உணர்ந்து நான் இருக்கிறேன் என்னுடைய அண்ணனுக்கு என்று சொல்லி இருக்கிறார். அன்று சொன்னது போலத்தான் இப்ப வரைக்கும் தன்னுடைய அண்ணனை ரொம்பவும் பாசமாக பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று கண் கலங்க பேசி இருந்தார்.
அது பற்றி பிரியா ராமன் பேட்டி ஒன்றில் பேசும் போது என்னுடைய கணவர் ரஞ்சித் சொன்ன கதை தான் எங்கள் ரியாலிட்டி. எங்க லைஃப்ல அப்படி ஒரு விஷயம் இருக்கிறது என்கிறது உண்மைதான். நம்முடைய கதையை சொல்லும்போது பிள்ளைகளை விட்டு விட்டு நம்ம கதையை சொல்ல முடியாது. அப்படி சொல்ற போது அவர் மீதுள்ள பார்வை மாறுபடுகிறது.
அவர் அந்த கதையை மட்டும் அல்ல, எப்படி படம் எடுத்து நாங்கள் தோற்றோம் என்ற கதையும் சொன்னார். விழுந்து, எழுந்து..., விழுந்து, எழுந்து... என பலவிதமான பிரச்சனைகளை நாங்கள் ஜோடியா எதிர்கொண்டிருந்தோம் என்று சொல்லி இருக்கிறார். அதோடு என்னுடைய மூத்த மகன் ஆதித்யாவிற்கு ஆட்டிசம் பிரச்சனையை நாங்கள் பெரிய பிரச்சனையா பார்க்கல.
எப்பவுமே ஆதித்யாவோட அம்மா என்பது எனக்கு ரொம்பவும் பெருமை. இந்த மாதிரி குழந்தைகளை வீட்டில் வளர்க்கிறது சவால்தான். ஆதித்யாவிற்கு ஆட்டிசம்னு சொன்ன போது என்னுடைய பிரண்ட்ஸ் எல்லாரும் நீ என்ன தப்பு பண்ணின? உனக்கு இப்படி ஒரு தண்டனை கிடைச்சிருக்குன்னு ஆறுதலா பேசுறோம்னு கேட்டாங்க.
அதைக் கேட்டு நானும் வருத்தப்பட்டு இருக்கிறேன், அழுது இருக்கிறேன். பிறகு இதுதான் அக்செப்ட் பண்ண ஆரம்பிச்ச பிறகுதான் எனக்கு விஷயமே புரிந்தது. எனக்கு கடவுள் என்னை நம்பி என்கிட்ட அந்த குழந்தையை கொடுத்து இருக்கிறார். என் மேல கடவுளுக்கு அவ்ளோ நம்பிக்கையானு எனக்கே தோணிச்சு.
உறவினர்கள் பாக்குற போதெல்லாம் நீ எவ்வளவு துறுதுறு என்று பேசுவ உன் குழந்தைக்கு இப்படி ஆயிடுச்சேன்னு சொல்லுறாங்க. நான் அவர்களுக்கு சொல்ற பதில் ஒன்னே ஒன்னு தான். கடவுள் உங்ககிட்ட ஒரு மண்பானையை கொடுத்து பிடித்த வண்ணத்தை பூசிக்கோங்கன்னு சொல்லி இருக்கிறார். ஆனால் எனக்கு களிமண் கொடுத்து நீ என்ன வேணாலும் பண்ணிக்க என்று கொடுத்திருக்கிறார்.
இது எவ்வளவு பெரிய பொறுப்பு. இப்படி ஒரு அற்புதமான குழந்தைக்கு நான் அம்மாவாக இருக்கிறேன் என்பது எனக்கு ரொம்பவும் பெருமை என்று பிரியா ராமன் பேசி இருக்கிறார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications