நல்லவேளை, சூர்யா நடிக்கல.. வணங்கான் படத்துக்கு அருண் விஜய்க்கு அவார்டு கிடைக்கலாம்.. பிரபலம் ஆரூடம்
சென்னை: "வித்தியாசமான கேரக்டர் என்றால், டைரக்டர் மிஷ்கினை சொல்லலாம்.. மிடுக்காக, ஆளுமையாக நடந்து வருகிறார். ஆனால், கிளைமேக்ஸ் வேறு கோணத்தில் இருந்திருக்கலாம்" வணங்கான் படம் குறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியிருக்கிறார்.
Media circle யூடியூப் சேனலுக்கு பாலாஜி பிரபு தந்துள்ள பேட்டியில், "வணங்கான் படம், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.. வழக்கமான பாலா படம் போலதான் வணங்கான் படமும் இருக்கிறது.. எப்போதுமே பாலாவை பொறுத்தவரை, டார்க் கதையை எடுத்துக்கொண்டு, அதில் சில வன்முறைகள், பெண்கள் பிரச்சனைகளை சொல்லுவார்.. அப்படியொரு கதைதான் இந்த வணங்கான்

பிதாமகன்: அருண் விஜய்யை முதல் காட்சியில் பார்க்கும்போதே, பிதாமகன் விக்ரமை பார்க்கிற மாதிரி இருக்கு.. அதேபோன்ற பாடிலேங்குவேஜ, மேனரிசம் இருக்கிறது.. அருண் விஜய்யை பார்க்கும்போது, விக்ரமை பார்ப்பதுபோலவே இருப்பதை தவிர்க்கவே முடியவில்லை.
ஆனால், இதில் சென்ட்டிமென்ட்டாக வேறு மாதிரியாக இருக்கு.. அண்ணன் -தங்கை சென்ட்டிமென்ட் நல்லாவே இருந்தது... தங்கையாக வருபவர் இயல்பாகவே, அழகாகவே நடித்திருக்கிறார். பரிதாபம் வரும் அளவுக்கு அவரது கேரக்டர் இருக்கிறது.
கடவுள் மறுப்பாளர்: பாலா ஒரு கடவுள் மறுப்பாளர்.. மதத்தை, சாதியை, கடவுளை கிண்டலடித்துவிட்டு போவார்.. அந்தவகையில், ஆரம்பத்தில், இந்த படத்தின் போஸ்டரில், ஒரு கையில் பெரியார் சிலையையும் மற்றொரு கையில் பிள்ளையார் சிலையையும் அருண்விஜய் தன்னுடைய கைகளில் ஏந்தி வந்திருந்தார். அந்த காட்சி எப்போது வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு படம் முழுக்க ஏற்பட்டது. ஆனால், அதை பற்றி எங்குமே சொல்லப்படவில்லை.. எதுக்காக அந்த போஸ்டர் இடம்பெற்றது என்று தெரியவில்லை. அது இந்த படத்துடன் ஒட்டாமல் இருக்கு.
அருண் விஜய் இந்த படத்தில் ரொம்பவே பக்குவப்பட்டுள்ளார்.. இதுவரை இல்லாத நடிப்பை இதில் வெளிப்படுத்தியிருக்கிறார்.. கேரக்டரை உள்வாங்கி நடித்திருக்கிறார்.. அந்த அளவுக்கு பாலா அவரை நடிக்க வைத்துள்ளார். அருண் விஜய்க்கு அவார்டு கிடைக்க வாய்ப்புள்ளது.. இது பெஞ்ச் மார்க்காக இருக்கும்.
மிஷ்கின் கேரக்டர்: பிதாமகன் லைலா வருவதை போலவே, இந்த படத்தின் ஹீரோயினை பார்க்கும்போது தோன்றுகிறது. ஆனால் நன்றாகவே இருக்கிறது. பிதாமகன் படத்தின் சாயல், இதிலும் உள்ளது. வித்தியாசமான கேரக்டர் என்றால், டைரக்டர் மிஷ்கினை சொல்லலாம்.. மிடுக்காக, ஆளுமையாக நடந்து வருகிறார். கிளைமேக்ஸ் வேறு கோணத்தில் இருந்திருக்கலாம்.
சாயா சரத்குமார் நல்லா நடிச்சிருக்காங்க.. அவரது முதல்படம் போலவே தெரியல.. அழகா நடிச்சிருக்காங்க. அவரை இனி நிறைய டைரக்டர்கள், பல படங்களில் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இது பாடல்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய படம் இல்லை என்றாலும், ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் எதுவுமே பெரிதாக ஈர்க்கவில்லை..
சூர்யா: இந்த படத்தில் அருண் விஜய் நடித்ததால்தான், வணங்கான் படம் வேறு கோணத்தில் தெரிகிறது. ஆனால், இதே படத்தில் சூர்யா நடித்திருந்தார் அது டிட்டோ பிதாமகன் மாதிரியே இருந்திருக்கும். அதனால் இந்த படத்தில் சூர்யா நடிக்காமல் இருந்ததே நல்ல விஷயம்தான்" என்று தெரிவித்துள்ளார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications