போச்சா? சிவக்குமாரின் அதே மேடை, அதே மைக், அவனே, இவனே? இப்ப பாருங்க.. பிறவிக்கலைஞன் சூர்யா: பிரபலம்
சென்னை: நடிகர் சிவக்குமாரின் மேடைப்பேச்சுக்கு பிறகு, "ரெட்ரோ ட்ரெயிலர் மொக்கையாக உள்ளது, எதிர்பார்த்த அளவுக்கு ஒன்றுமில்லை" என்று இப்பவே சோஷியல் மீடியாவில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.. ட்ரெயிலரை பார்த்து ஒரு படத்தை முடிவு செய்ய முடியாது. அது தவறானதும்கூட.. ஆனால், சிவக்குமாரின் பேச்சை வைத்துதான், இப்படி எதிர்மறை விமர்சனங்கள் வருகின்றன என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா கருத்து தெரிவித்துள்ளார்.
King 24x7 என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "சிவக்குமார் சொல்லித்தான், சூர்யா மிகப்பெரிய நடிகர் என்று மக்களுக்கு தெரிய வேண்டியதில்லை.. பிறவிக்கலைஞரில் சூர்யாவும் ஒருவர் என்பது அனைவருக்குமே தெரியும்..
கங்குவா பட தோல்விக்கு பிறகு, ரெட்ரோ படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.. நல்ல விஷயம் நடக்கும்போது, இப்படியெல்லாம் எதுக்காக சிவக்குமார் பேசணும்? எப்போதுமே மேடையில் பேச துவங்கும்போதே, எமோஷனலான விஷயங்களை களைந்துவிடவேண்டும்.. நாம் பேசும்போது யாரையாவது காயப்படுத்தி விடுகிறோமோ? என்பதையும் யோசிக்க வேண்டும்.

சூர்யா மாதிரி எவன் இருக்கான்?
சூர்யா மாதிரி எவன் இருக்கான்? என்று கேட்பது மிகப்பெரிய வார்த்தை.. சிவக்குமார் குடும்பத்தின் நாக்கில் சனி இருக்கிறது.. ஆடியோ விழாவுக்கு ஜோதிகா ஏன் வரல? சூர்யா - கார்த்திக் இருவருமே நல்ல நடிகர்கள் என்றாலும், இருவருமே சரிவை நோக்கி உள்ளதற்கு என்ன காரணம்? இன்னம் இப்படி பல கேள்விகள் இருக்கின்றன.. இதையெல்லாம் சரிசெய்யாமல் விட்டுவிட்டு, மேடையில் வந்து, ஊர் வம்புகளை, பிள்ளைகளின் தலையில் கட்டக்கூடாது,.
சிவக்குமாரை பொறுத்தவரை, வயது மூத்தவர். குடும்பத்தின் தலைவர். .. குடும்பத்திலுள்ள பிணக்குகளை சரி செய்ய வேணடும். சூர்யாவுக்கு திறமைகளை வெளிப்படுத்துவது இன்னும் நிறைய இருக்கிறது. அப்படியிருக்கும்போது, தேவையில்லாத பாரத்தை பெற்றோரே தலையில் ஏன் வைக்கணும்? தேவையில்லாத அவப்பெயர் இது..
சிவக்குமார் பேசியதை கேட்டு, சகக்கலைஞர்கள் என்ன நினைப்பார்கள்? மகனை உயர்த்தி இன்னொருத்தரை ஏன் நோகடிக்கணும்? சிக்ஸ்பேக் ஏற்கனவே பலர் வைத்துவிட்டார்களே, அவர்களெல்லாம் இதைக்கேட்டால் அவர்கள் மனம் நோகாதா?
கங்குவா பட தோல்வி
சிவக்குமார் இப்படி தவறாகவே பேசினாலும், சூர்யாவும் அதை கேட்டுட்டு மேடையில் அமைதியாகவே உட்கார்ந்திருக்கிறார்.. அதை நாகரீகமான முறையில் தடுத்து மறுத்து பேசியிருக்கலாம். சர்ச்சை பேச்சு பேசுவதற்காகவே சிவக்குமார் குடும்பத்தில் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்..
கங்குவா படம் சுமாராக போக வேண்டியது.. ஆனால், ஞானவேல்ராஜா, சூர்யா, சிவக்குமார், இவங்கெல்லாம் பேசி பேசியே, அந்த படத்தை காலி செய்துவிட்டார்கள். கங்குவா படத்தின் மோசமான தோல்விக்கு பிறகும், அதே மேடை, அதே மைக், அவனே, இவனே.. என்று சிவக்குமார் குடும்பம் பேசுவதுதான் ஆச்சரியமாக உள்ளது.
போட்டியும் பொறாமையும் நிறைந்த இந்த சினிமாவில், ஒருவரை கவிழ்க்க பலர் இருப்பார்கள். அப்படியிருக்கும்போது, சர்ச்சைகளை நாமாகவே கிளப்ப கூடாது.. இந்த சர்ச்சை பேச்சு, சூர்யாவுக்கு முன்பே சிக்ஸ் பேஸ் வைத்திருந்தவர்களின் ரசிகர்களும், சிக்ஸ் பேக் இல்லாதவர்களும், இனி இவர்களுக்கு எதிரான நெகட்டிவ்வாக பேசும் சூழலையும் உருவாக்கிவிடும்..
பெரும்பாலும், பிள்ளைகளுக்கு திருஷ்டி ஆகிவிடக்கூடாதே என்றுதான் பெற்றோர்கள் நினைப்பார்கள். ஆனால், சிவக்குமார் மேடையிலேயே பெருமையாக பேசுவது, அவசியமில்லாதது, அவப்பெயரையும் சூர்யாவுக்கு பெற்றுத்தந்துவிடும்.
சபாஷ் சூர்யா - கடுமையான உழைப்பாளி
சிவக்குமாரின் இந்த மேடைப்பேச்சுக்கு பிறகு, "ரெட்ரோ டிரெயிலர் மொக்கையாக உள்ளது, எதிர்பார்த்த அளவுக்கு ஒன்றுமில்லை" என்று இப்பவே சோஷியல் மீடியாவில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்..
டிரெயிலரை பார்த்து ஒரு படத்தை முடிவு செய்ய முடியாது. அது தவறானதும்கூட.. ஆனால், சிவக்குமாரின் பேச்சை வைத்துதான், இப்படி எதிர்மறை விமர்சனங்கள் வருகின்றன.
கங்குவா என்ற மிகப்பெரிய தோல்விக்கு பிறகு சூர்யா மீண்டும் நம்பிக்கையுடன் ரெட்ரோவில் களமிறங்கியிருக்கிறார்.. சூர்யாவின் அடையாளமே அவரது உழைப்புதான்.. கடுமையான உழைப்பாளி.. அதேபோல கார்த்திக் சுப்புராஜ், பல வெற்றிப்படங்களை தந்தவர் என்பதால், இந்த ரெட்ரோ படம் நிச்சயம் வெற்றியடையும் என்றே நம்புகிறேன். அதற்காக ரெட்ரோ இத்தனை கோடி அடிக்கும், என்றெல்லாம் கணித்து பொய்யான தகவலை பரப்பக் கூடாது" என்றார்.












Click it and Unblock the Notifications