SaReGaMaPa: சரிகமப டைட்டிலை வென்ற கோவை பொண்ணு சுசாந்திகா யார் தெரியுமா? டி ராஜேந்தர் அப்பவே அப்படி சொன்னாரே
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஆறு மாதங்களாக பரபரப்பாக நடைபெற்று வந்த சரிகமப சீனியர் சீசன் 5 பாடல் போட்டி, நேற்று மாபெரும் இறுதி போட்டியுடன் முடிவுக்கு வந்துள்ளது. மக்களின் வாக்குகள் அடிப்படையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக கோவை மாவட்டத்தை சேர்ந்த இளம் பாடகி சுசாந்திகா முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

சுசாந்திகாவுக்கு 60 லட்சம் மதிப்புள்ள வீடு
இந்த சீசனின் டைட்டில் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்ட சுசாந்திகாவுக்கு எம்.பி. டெவலப்பர்ஸ் சார்பில் 60 லட்சம் மதிப்பிலான புதிய பிரம்மாண்ட வீடு பரிசாக வழங்கப்பட்டது. இறுதிப் போட்டியில் பங்கேற்ற ஆறு போட்டியாளர்களுக்கும் அவர்கள் பெற்ற இடத்திற்கு ஏற்பப் பரிசுகள் வழங்கப்பட்டன:
இரண்டாம் இடம் (முதல் ரன்னர் அப்) பெற்ற சபேசன் 10 லட்சம் ரூபாய் பணப்பரிசு வென்றுள்ளார். மூன்றாம் இடம் (இரண்டாம் ரன்னர் அப்) தேர்வான சின்னு செந்தமிழன் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் சிறப்புப் பரிசு (கோல்டன் வாய்ஸ் பவித்ரா 5 லட்சம் மதிப்புள்ள தங்கம் வென்று இருக்கிறார்.
கர்நாடிக் சங்கீதம் பயின்ற சுசாந்திகா
முதல் பரிசு பெற்ற சுசாந்திகா பற்றிப் பலரும் அறியாத சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளன. சுசாந்திகா தமிழகத்தில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர். தற்போதுதான் 12-ம் வகுப்பை முடித்துள்ளார். கர்நாடிக் சங்கீதம் பயின்ற இவர், முதல் முறை கலந்துகொண்ட நிகழ்ச்சியே இந்த சரிகமப நிகழ்ச்சிதான் என்பது ஆச்சரியமான விஷயம்.
டி.ராஜேந்தரின் பாராட்டு
தான் பங்கேற்ற முதல் நிகழ்ச்சியிலேயே சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார் சுசாந்திகா. இவர் சிறப்பாக பாடியதை பார்த்த நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர் "இந்த பெண் பெரிய பின்னணி பாடகி யாக வருவார்" என்று அன்றே கூறியிருந்தார். அதற்கு உறுதி தரும் விதமாகத் தற்போது சுசாந்திகா வெற்றி பெற்றுள்ளார்.
இறுதி சுற்றில் நடந்தவை
கிராண்ட் ஃபினாலே என்று அழைக்கப்படும் இறுதிச் சுற்றுக்குப் போட்டியாளர்களாக வந்தவர்கள் சுசாந்திகா, சபேசன், சின்னு செந்தமிழன், பவித்ரா உட்பட ஆறு பேர். ஆறு போட்டியாளர்களும் தங்கள் திறமையின் அடையாளமாக நினைக்கும் பாடல்களைப் பாடி நடுவர்கள் மற்றும் மக்களின் மனதை வென்றனர்.
இரண்டாம் இடத்தை பிடித்த சபேசன் இலங்கையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பெற்ற 10 லட்சம் ரூபாய் பணப்பரிசு அவருக்கு பெரிய உதவியாக இருக்கும். மூன்றாம் இடம் பெற்ற சின்னு செந்தமிழன் ஒரு மெக்கானிக் என்பதால், அவர் பெற்ற 3 லட்சம் மதிப்புள்ள தங்கம் அவருடைய குடும்பத்தின் கஷ்டத்தைப் போக்க உதவும். அதுமட்டுமல்லாமல் சிவா என்ற ரசிகர் ஒருவர் சின்னுவுக்கு பைக் வாங்கி கொடுத்திருந்தார். அதோடு அதே ரசிகர் சின்னு படித்த இன்ஜினியரிங் படிப்புக்கு தகுந்த வேலையை துபாயில் ஒரு கம்பெனியிலும் சிவா வாங்கி கொடுத்திருக்கிறார்.
பவித்ராவின் ஆறுதல்
கணவர் இழப்புக்கு பிறகு இந்த போட்டியில் பங்கேற்ற பவித்ராவுக்கு கோல்டன் வாய்ஸ் என்ற சிறப்புப் பரிசும், அதனுடன் 5 லட்சம் மதிப்புள்ள தங்கமும் கிடைத்தது ரசிகர்களுக்கு சற்று ஆறுதலைக் கொடுத்தது. இந்த போட்டியில் சுசாந்திகாவுக்கு கிடைத்த பிரமாண்ட வீடு, தமிழ் ரியாலிட்டி ஷோ வரலாற்றில் ஒரு முக்கியச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications