பாடகியின் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஜேம்ஸ் வசந்தன் போட்ட போஸ்ட்.. ஆனால் ஸ்வாகதா போல்டான பதில்!
சென்னை: பாடகி ஸ்வாகதா குறித்து சமீப காலமாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளரும் இயக்குநருமான ஜேம்ஸ் வசந்தன் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றது. தற்போது அந்த பதிவையே ஸ்வாகதா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருப்பது புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

ஜேம்ஸ் வசந்தன் என்ன சொன்னார்?
ஜேம்ஸ் வசந்தன் தனது பதிவில், ஸ்வாகதாவை முதன்முதலாக அறிமுகப்படுத்திய நினைவுகளை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, "ஸ்வாகதா 2012ஆம் ஆண்டு என் டிவி நிகழ்ச்சியான 'பாட்டுவா பாடலை' மூலம் அறிமுகமானவர். அவர் எங்களால் மிகவும் நேசிக்கப்பட்டார். மிகவும் சீக்கிரமாக எங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாக மாறினார்.
பின்னர் அவருடன் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. இப்போது அவர் தனது மரியாதைக்காக போராடுவது பற்றி மீடியாவில் பார்க்கிறேன். அவர் இந்த போராட்டத்தில் வெற்றி பெறுவார் என்று நம்புகிறேன்." இந்த பதிவு வெளிவந்தவுடன், சமூக வலைதளங்களில் பெரிதும் பகிரப்பட்டு, பலரும் அதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஸ்வாகதா பதில்
இந்த நிலையில், ஜேம்ஸ் வசந்தன் வெளியிட்ட பதிவை ஸ்வாகதா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் பகிர்ந்துள்ளார். அதற்கு பதிலாக அவர் உணர்ச்சிமிகுந்த வார்த்தைகளை பதிவிட்டுள்ளார், "எப்போதும் உங்கள் குழந்தை தான் சார்... உங்கள் ஆதரவுக்கு நன்றி ❤️🙏" இந்த சின்ன பதிலே, இருவருக்கும் இடையேயான உறவை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது. குறிப்பாக "கிடோ" (kiddo) என்று அவர் குறிப்பிட்டது, ஜேம்ஸ் வசந்தனுடன் இருந்த மரியாதையான பாசத்தை காட்டுகிறது.
விஜய் ஒன்னும் சும்மா சினிமாவை விட்டு வரல.. 20,000 கோடிக்கு ஆசைப்படுகிறார்! ஏமாற்றுக்காரர்.. ஜேம்ஸ் வசந்தன் ஆதங்கம்
ஏற்கனவே ஸ்வாகதா ஒரு இசையமைப்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு சொன்னதும் அந்த இசையமைப்பாளருக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்க வேண்டும் என்று ஜேம்ஸ் வசந்தன் ஒரு போஸ்ட் போட்டு இருந்தார். அந்த பதிவு வைரலானதும் அந்த பதிவுக்கு கீழே பலர் பாடகியிடம் தவறாக நடந்து கொண்ட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் என்று அவருடைய பெயரை குறிப்பிட்டு அவரை அசிங்கப்படுத்தி இருந்தனர்.
பாடகி ஸ்வாகதா சர்ச்சை.. பிரபல இசையமைப்பாளர் பெயரை இழுத்த சுசித்ரா! பின்னணியில் காதல் போட்டி?
அதற்கு ஜேம்ஸ் வசந்தன் கூலாக இதுதான் "ஹேட்டர்ஸ் தராதரம்" என்று பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில் நெட்டிசன்கள் கலாய்ப்பது போல அது ஜேம்ஸ் வசந்தன் இல்லை என்று சொல்வது போலத்தான் இப்போது மொத்த வதந்திகளுக்கும் பதிலடி கொடுத்து ஸ்வாகதா ஜேம்ஸ் வசந்தனின் பதிவை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications