பாடகி ஸ்வாகதா சர்ச்சை.. பிரபல இசையமைப்பாளர் பெயரை இழுத்த சுசித்ரா! பின்னணியில் காதல் போட்டி?
சென்னை: பாடகி ஸ்வாகதா விவகாரம் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இசையமைப்பாளர் யார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் அதிகமாக எழுந்து கொண்டிருந்த நிலையில், பாடகி சுசித்ரா தனது இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு உள்ளார்.

பாடகி சுசித்ரா பதிவு
முன்னதாக மறைமுகமாக பேசப்பட்ட விஷயங்களை நேரடியாக கூறியுள்ள சுசித்ரா, இந்த பிரச்சனையின் பின்னணி குறித்து விரிவாக விளக்கம் அளித்திருக்கிறார். குறிப்பாக, "யாரையும் சுலபமாக 'பிரபல பின்னணி பாடகி' என்று அழைக்க வேண்டாம்" என்று தொடங்கிய அவர், அந்த நிலையை அடைய தொடர்ந்து மேடைகளில் ஹிட் பாடல்களைப் பாடியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதன் மூலம் ஸ்வாகதா இன்னும் வளர்ந்து வரும் பாடகி மட்டுமே என்று அவர் சொல்லி இருக்கிறார்.
காதல் தோல்வி
அடுத்து, இந்த சர்ச்சையின் மையத்தில் ஒரு தோல்வியடைந்த காதல் உறவு இருப்பதாக சுசித்ரா தெரிவித்துள்ளார். ஸ்வாகதா மற்றும் அந்த இசையமைப்பாளர் இடையே இருந்த உறவு ஆரோக்கியமானதல்ல, "டாக்ஸிக்" தன்மை கொண்டது என்றும் கூறியுள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்த உறவு முறிந்ததாகவும், பின்னர் இசையமைப்பாளர் மீண்டும் சேர முயன்றதாகவும், ஆனால் ஸ்வாகதா அவரை நிராகரித்ததாகவும் அவர் கூறுகிறார்.
இந்த பிரிவுக்குப் பிறகே, ஸ்வாகதா முழு இசைத்துறையையும் குறிவைத்து குற்றச்சாட்டுகளை முன்வைக்க தொடங்கியதாக சுசித்ரா குற்றம்சாட்டியுள்ளார். மேலும், "இது ஒரு தனிப்பட்ட பிரச்சினை தான், ஆனால் அதை பெரிதாக்கி அனைவரையும் குற்றம் சாட்டுவது தவறு" என்ற கருத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.

சுசித்ரா விமர்சனம்
இதில் மட்டும் இல்லாமல், இந்த விவகாரத்தில் மற்ற சிலரையும் சுசித்ரா கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, யூடியூப்பர் சிவசங்கரி குறித்து பேசும்போது, அவர் தமிழ் அல்லது ஆங்கிலம் சரியாக பேசத் தெரியாதவர் என்றும், ஆனால் தனது லாபத்திற்காக இந்த பிரச்சினையை தூண்டி மக்களை ஆத்திரமடையச் செய்கிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். "எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல செயல்படுகிறார்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஸ்வாகதாவிடம் சம்பந்தப்பட்ட இசையமைப்பாளரின் பெயரை வெளிப்படுத்த வேண்டாம் என்று கூறி, இதை ஒரு பெரிய சர்ச்சையாக மாற்றுவது திட்டமிட்ட செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். "கன்டென்ட்டிற்காக எதையும் செய்ய தயங்காதவர்கள் இருக்கிறார்கள்" என்று கூறிய அவர், "முதலைக் கண்ணீர் விடுபவர்கள்" என்ற வார்த்தையையும் பயன்படுத்தியுள்ளார்.
மாயாவின் மௌனம்
இந்த விவகாரத்தில் ஸ்வாகதாவின் தங்கச்சி பிக்பாஸ் மாயா அமைதியாக இருப்பதையும் சுசித்ரா முக்கியமாக எடுத்துக்காட்டியுள்ளார். "மாயா இதுவரை எதுவும் பேசாமல் இருப்பது, இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்பதற்கே சான்று" என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், மாயாவின் 'மஞ்சுளா டீச்சர்' காமெடி வீடியோக்கள் மூலம் கிடைக்கும் பிரபலத்தால் ஸ்வாகதா பொறாமைப்படுகிறார் என்றும் தன்னை மாயா இதுவரை பேட்டி எடுக்காதது கூட ஸ்வாகதாவுக்கு மனக்கசப்பாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இசையமைப்பாளருக்கு ஆதரவு
இதற்கிடையில், அந்த இசையமைப்பாளருக்கு ஆதரவாகவும் சுசித்ரா பேசியுள்ளார். தனது பதிவில் அவரை டேக் செய்து, "பரவாயில்லை ப்ரோ, இது சிறந்தவர்களுக்கும் நடக்கும். ஆனால் உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பெரிய குற்றச்சாட்டில் அமைதியாக இருக்க வேண்டாம். உங்கள் தரப்பையும் வெளிப்படையாக சொல்லுங்கள்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மிகவும் முக்கியமாக, இதுவரை மறைத்து வைக்கப்பட்டிருந்த இசையமைப்பாளரின் பெயரையே சுசித்ரா வெளிப்படையாக குறிப்பிட்டிருப்பது இந்த சர்ச்சையை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், அடுத்து என்ன நடக்கும்? அந்த இசையமைப்பாளர் பதில் தருவாரா? ஸ்வாகதா தனது தரப்பை எப்படி விளக்குவார்? என்ற கேள்விகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications