“என் கால் மேல் ஏறி நில்” சூட்டிங் ஸ்பாட்டில் உதயநிதி சொன்ன வார்த்தை! அந்த நொடி எதிர்பார்க்கல! சீரியல் நடிகை ஒபன்
சென்னை: நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் குறித்து சீரியல் நடிகை ஸ்வேதா டோரதி பகிர்ந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின், பின்னர் காமெடி மற்றும் ஆக்ஷன் கலந்த பல படங்களில் நடித்தார். அதன்பிறகு சமூக கருத்துகளை மையமாகக் கொண்ட நெஞ்சுக்கு நீதி மற்றும் மாமன்னன் போன்ற படங்களில் நடித்த அவர், மாமன்னன் தான் தனது கடைசி படம் என அறிவித்து அரசியலில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார்.

படப்பிடிப்பில் நடந்த சம்பவம்
சமீபத்திய பேட்டியில் பேசிய ஸ்வேதா டோரதி, இப்படை வெல்லும் படப்பிடிப்பில் நடந்த ஒரு அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, நான் முதல்முறையாக உதயநிதி ஸ்டாலின் சாரை இந்த படத்தின் சூட்டிங்கில் தான் பார்த்தேன். அப்போது ராதிகா மேடம் கூட இருந்தாங்க. நான் முதலில் உதயநிதி சாரோட தங்கச்சியா நடிக்கிறதாக இருந்துச்சு. அவருக்கு ஜோடியா மஞ்சுமா நடித்திருந்தார். அப்போ என்னை பார்த்ததும் அவர் இவங்க எனக்கு தங்கச்சியாக இருக்கிறதை விட மஞ்சிமா மோகனின் தங்கச்சியா நடிச்சா சரியா இருக்கும். இவங்க ரெண்டு பேருடைய முகமும் ஒரே போல இருக்கு என்று சொன்னாரு.
அப்புறம் ஒரு நாள் கோவில் மேல் பகுதியில் கலசத்திற்கு அருகில் ஒரு காட்சி எடுக்கப்பட்டபோது, கடும் வெயிலில் காலில் செருப்பு இல்லாமல் நின்றது மிகவும் சிரமமாக இருந்தது. அப்போது நான் காலை வெயிலில் வைக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருப்பதை கவனித்த உதயநிதி ஸ்டாலின், "என் காலின் மேல் ஏறி நில்" என்று சொன்னாரு.
முதலில் தயங்கியதாகவும், பின்னர் வெயில் தாங்க முடியாததால் அந்த உதவியை ஏற்றுக்கொண்டதாகவும், அந்த தருணம் அவருக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாகவும் கூறினார்.
ஸ்வேதா டோரதி - சின்னத்திரை முதல் பெரிய திரை வரை
ஸ்வேதா டோரதி சின்னத்திரை மூலம் பிரபலமானவர். தற்போது வாரிசு என்ற ஜீ தமிழ் சீரியலில் கதாநாயகியாக நடித்துவருகிறார். குடும்ப பின்னணியில் நகரும் இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ள அவர், மெதுவாக தனது இடத்தை உருவாக்கிக் கொண்டுவருகிறார்.
ரசிகர்கள் பாராட்டு
இந்த பேட்டி வெளியானதுடன், உதயநிதி ஸ்டாலின் காட்டிய மனிதநேயத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். ஒரு சாதாரண உதவி போல தோன்றினாலும், அந்த சூழலில் அது பெரிய ஆதரவாக இருந்தது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மொத்தத்தில், ஸ்வேதா டோரதி பகிர்ந்த இந்த அனுபவம், உதயநிதி ஸ்டாலின் பற்றிய ஒரு வித்தியாசமான முகத்தை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் நடந்த இந்த சிறிய சம்பவம் கூட, அவரது மனிதநேயத்தை எடுத்துக்காட்டுவதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications