For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Thenmozhi BA Serial: டேக் இட் ஈஸி பாலிசியா இருக்கே தேனு!

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் டிவியின் தேன்மொழி சீரியல் கதை காலத்துக்கு ஏற்ற கதையா இருக்கு.

பஞ்சாயத்து தேர்தல் நடக்கும் சமயத்தில் பஞ்சாயத்து தேர்தலில் ஜெயிச்ச ஒரு பெண்ணை எம்எல்ஏ சீட்டுக்காக தன் மகனுக்கு ஜாதி மதம் பார்க்காமல் கல்யாணம் பண்ணி வச்சுட்டு, அவளை கொடுமைப்படுத்தற கதை.

ரொம்ப ரொம்ப கொடுமைதான்.. கொஞ்சம் விழிப்புணர்வான கதையும் கூட!

ஒரிஜினல்.. கோடீஸ்வரன்.. மாமா.. உணர்ச்சி வசப்பட்ட ராதிகா சரத்குமார்!ஒரிஜினல்.. கோடீஸ்வரன்.. மாமா.. உணர்ச்சி வசப்பட்ட ராதிகா சரத்குமார்!

ராணி மாதிரி

ராணி மாதிரி

என்னதான் ஏழையா இருந்தாலும் வீட்டில் பெட் காபி குடித்து ராணி மாதிரி வளர்ந்த தேனுவை, புகுந்த வீட்டில் பதவிக்காக என்று கல்யாணம் செய்துகொண்டு, கொல்லைப்புற வீட்டில் தங்க வைத்து காபி கூட கொடுக்காமல் ஒதுக்கி வைக்கிறார்கள். அதைக்கூட புரிந்து கொள்ளாத அப்பாவி பெண்ணாக இருக்கிறாள் தேனு. வீட்டுக்குள் போனால், மாமியார் உப்பு போட்ட காபியை கொடுத்து வீட்டை விட்டு வெளியில் வந்து தர தர வென்று இழுத்து வந்து தள்ளி விடுகிறார்.

கண்ணீர் வருது

கண்ணீர் வருது

கண்ணீர் வருது.. ஆனால், அடுத்த நிமிடம் மறந்து நகைச்சுவையாக வெரி டேஞ்சரஸ் மதர் இன் லாஎன்று மட்டும் சொல்லிக்கொண்டு அடுத்த வேலையை பார்க்க போய்விடுகிறாள். குளிக்க பாத்ரூம் கேட்டால் வேலைக்காரர்கள் குளிக்கும் இடத்தை காண்பிக்கிறார்கள். அவர்கள் உபயோகிக்கும் சோப்பைத்தான் கொடுக்கிறார்கள்,.

பத்து முதல் 15 வரை

பத்து முதல் 15 வரை

இந்த சோப்பை போட்டு குளித்தால் 10 முதல் 15 வரை ஸ்கின் பிராப்ளம் வராதான்னு கேட்பது...சினிமா ஸ்டார் போடற சோப் வேணும்னு கேட்பது.. வெகுளியான பெண்ணாக தேன்மொழியைப் பார்க்க பாவமாக இருக்கிறது. நாட்டு நடப்பும் அப்படித்தான் இருக்கிறது.

புகுந்த வீட்டில்

புகுந்த வீட்டில்

என்னதான் வீட்டில் மகாராணியாக வலம் வந்தாலும், புகுந்த வீட்டில் பல பெண்கள் பிரச்சனைகளை டேக் இட் ஈஸி பாலிசியா எடுத்துக்கறதாலதான் குடும்பம் என்கிற வண்டி ஓடுகிறது.இந்த சீரியலில் தேனுவை ஆரம்பத்தில் அப்படித்தான் காண்பித்து இருக்கிறார்கள். ஆங்கிலத்தை தப்பாக பேசுவது.. அதை சரி செய்யும் ஹீரோ.. என்று காட்சிகள் அசத்தல்!

English summary
Vijay TV's thenmozhi BA serial story is a timely story. During the panchayat elections, a woman who won the panchayat elections, her husband was married to her son without caste, the story of bullying. Very cruel .. even a little awkward story!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X