தல, தளபதி ரெண்டு பேர் கூடவும் நடிச்சுட்டேனே.. அடுத்து அதுதான்.. குதூகலிக்கும் "கண்மணி"!
சென்னை: சன் டிவியின் நாயகி சிரியலில் கண்மணியாக நடிக்கும் கொல்கத்தா ரசகுல்லா பாப்ரி கோஷ்.
கொழுக் மொழுக்னு இருந்தவர் அண்மை காலமாக இளைப்பாகத் தெரிகிறார், ஏன்னு கேட்டப்போ... இளைக்கணும்னு ஆசைப்பட்டேன், தானா ஒல்லியாகிட்டேன்... நல்லதுதானேன்னு அழகாக சிரிக்கிறார்.
தமிழ் நல்லா பேசறீங்களேன்னா, தமிழ்தாங்க என்னை வாழ வைக்குதுன்னு சொல்லி சிலிர்க்க வைக்கிறார். உண்மையை ஒப்புக்கிட்டா சரிதானே...

சென்னை
இந்தில விளம்பர படங்கள் நடிச்சேன்.. பிறகுதான் சென்னை வாய்ப்புகள் வந்தன. அப்பா அம்மாவுக்கு என்னைத் தனியா அனுப்ப பயம். கொல்கத்தாவுல கூட பெண்களுக்கு அவ்வளவா பாதுகாப்பு இல்லை.சரி தமிழ் நாட்டுக்கு போலாம்னு வந்துட்டேன்.

சூப்பர் மதிப்பு
தமிழ் நாட்டுல பாதுகாப்பு இருக்கு. இங்க நான் தனியாதான் இருக்கேன். அம்மா அடிக்கடி வந்து பார்த்துட்டு போவாங்க. தமிழ்நாட்டு பசங்க பெண்களை பார்க்கற விதமே மரியாதையா இருக்கு. அதனால தமிழ் நாட்டுல செட்டில் ஆயிட்டேன்.

விளம்பரங்கள்
புடவை, நகைக்கடை விளம்பரங்கள்னு ரொம்ப நடிச்சுட்டேன்... மைதா மாவு மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சு இருக்குன்னு நிறைய விளம்பரம் எடுத்தாங்க. இந்த சமயத்துலதான், நாயகி ஆடிஷன் போனேன்... என் ரோலுக்கு ஏற்கனவே நடிகையை ஃபிக்ஸ் பண்ணியாச்சு... எனக்கு தெரியாது, குமரன் சார் சும்மா நடிச்சு காமின்னார். நான் நடிச்சு முடிச்சுட்டு லொட லொடன்னு பேச ஆரம்பிச்சுட்டேன். உடனே நீதான் கண்மணின்னு சொல்லிட்டார்.

போலீஸ் பாதுகாப்பு
நான் ரொம்ப துறுதுறுன்னு இருப்பேன்... செட்ல சின்ன பையன் முத்து கூட விளையாடிகிட்டே இருப்பேன். கோயில்ல ஷூட் நடக்கறப்போ, கோயிலுக்கு வெளியில ஓடிப் போய் விளையாடினோம், கூட்டம் கூடி, போலீஸ் பாதுகாப்பு தர மாதிரி ஆயிருச்சு.

தல அஜீத்
தளபதி விஜய் சார் கூட சர்க்கார் படத்துல ஒரு சீன் நடிச்சேன்.. தல கூட விசுவாசம் படத்துல ஒரு சீன் நடிச்சேன். எனக்கு ரெண்டு பேர் மேலயும் ரொம்ப மதிப்பு இருக்கு.பந்தா இல்லாம பேசினாங்கன்னு உருகறார். அடுத்து முழு நீள சினிமாவில் நடிக்க தயாரா இருக்காராம்.. வாய்ப்பு கொடுங்க டைரக்டர்ஸ்.












Click it and Unblock the Notifications