நடிகையின் கன்னத்தை "தொட்ட" பிரபலம்.. பத்மபிரியா சொல்றது அவரையா? நம்ம நடிகர் சங்கத்தில் இப்படியா?
மலையாள திரையுலகிலிருந்து, தமிழ் படங்களில் நடித்து, தமிழக மக்களின் அன்பை பெற்றவர் நடிகை பத்மபிரியா.. தன்னுடைய எதார்த்த நடிப்பின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார்.. தவமாய் தவமிருந்து, மிருகம், இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், சத்தம் போடாதே, பொக்கிஷம், தங்கமீன்கள், போன்ற படங்களில் தன்னுடைய நடிப்பின் முத்திரையை பதித்திருப்பார்.

நடிகை பத்மபிரியா: சமீபத்தில் வெளியான, ஹேமா கமிட்டி அறிக்கையானது, கேரளாவை உலுக்கி எடுத்து வரும் நிலையில், இதைப்பற்றியும் பத்மபிரியா கருத்து சொல்லியிருந்தார்.. கேரளாவில் பிரபல நடிகர்கள் மீது, நடிகைகள் பாலியல் புகார்களை அடுக்கி கொண்டே வருகிறார்கள்.. நடிகர்களும் ஜாமீனை பெற முயன்று கொண்டிருக்கிறார்கள்.
எனினும், மலையாள நடிகர்கள் சங்க அமைப்பான அம்மா அமைப்பிலிருந்து மோகன்லால் உட்பட 17 பேர் ராஜினாமா செய்தார்கள். இது குறித்து நடிகை பத்மபிரியா துணிச்சலான கருத்தை வெளியிட்டிருந்தார்.
ராஜினாமா: இப்படியொரு ராஜினாமாவை நான் எதிர்பார்க்கவில்லை.. இது ஒரு பொறுப்பற்ற செயல். இந்த பிரச்சனையை வெறுமனே பாலியல் துன்புறுத்தல் பிரச்சனையாக மட்டும் பார்க்கக் கூடாது. இதுக்கெல்லாம் காரணமாக இருக்கும் அதிகார அமைப்பையே கேள்வி கேட்க வேண்டும்.. மலையாள நடிகர் சங்கத்தினர் அனைவரும் முதுகெலும்பு அற்றவர்கள்" என்று காட்டமாக கூறியிருந்தார்.
இந்நிலையில், மிருகம் படத்தில் தான் நடித்தபோது, ஷூட்டிங்கின்போது நடந்த சம்பவம் குறித்து பத்மபிரியா பேசும்போது, "மிருகம் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நான் உணர்வுப்பூர்வமாக நடிக்கவில்லை என்று டைரக்டர் என்னை பளாரென கன்னத்தில் அறைந்தார். இந்த விவகாரத்தை நான், நடிகர் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.
சான்ஸ்: கடைசியில், என்னை ஹீரோயினாக வைத்து அடுத்தடுத்த படங்களை எடுப்பதாக உறுதி தந்த நிறைய பேர், எனக்கு சான்ஸ் தராமலேயே போய்விட்டார்கள். சினிமா துறையில், பெண்கள் தங்கள் பிரச்சனையை பேசினாலே, அது பூதாகரமாக மாற்றப்படுகிறது.. பிரச்சனை குறித்து பேசியவர்களையே பிரச்னையாக மாற்றிவிடுகின்றனர்..
அதுவரை எனக்கு எந்த விதமான நெகட்டிவான அனுபவமும் ஏற்பட்டதில்லை. இயக்குநர் என்னை அறைந்தார். ஆனால் நான் அந்த இயக்குநரை அடித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
பாலின பாகுபாடு: ஆண்களுக்கு தரப்படும் வலுவான கேரக்டர்களை பெண்களுக்கு தருவதில்லை.. இதற்கான வாய்ப்பு பெண்களுக்கு மறுக்கப்படுகிறது. பெண்களுக்கு அழகான ஹீரோயின், மனமுடைந்த ஹீரோயின், டான்ஸ் ஆடும் ஹீரோயின், இப்படியேதான, இப்படிதான் கேரக்டர்கள் தருகிறார்கள்..
வெளியில் மட்டுமல்ல, திரைத்துறையிலும் பாலின பாகுபாடு, பெண்களுக்கான முக்கியத்துவம் குறித்து பேசியே ஆக வேண்டும். இல்லாவிட்டால், அது உங்களை மீண்டும் மீண்டும் காயப்படுத்தும்" என்று தெரிவித்துள்ளார். இயக்குனர் ஒருவர் அறைந்ததால், படவாய்ப்புகளை இழந்ததாக பத்மபிரியா சொல்லியிருக்கும் இந்த பேட்டிதான் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications