சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட் கார்த்திக்.. தமிழக சினிமாவின் பொக்கிஷம் சறுக்கியது எங்கே? அதிர்ச்சி காரணம்
சென்னை: நடிகர் கார்த்திக் கிட்ட பணம் போனா திரும்ப வராது.. கார்த்திக் ஒரு மிகப்பெரிய நடிகர் அவருடைய மார்கெட்டை வேற யாரும் கெடுக்கல. அவரேதான் கெடுத்துக்கொண்டார் என்று சமீபத்தில் இயக்குனர் பாரதி கண்ணன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.. இந்நிலையில், இதே கருத்தை பத்திரிகையாளர் அந்தணன் பேட்டி ஒன்றில் மீண்டும் பதிவு செய்துள்ளார்.. அத்துடன் தமிழக சினிமாவில் கார்த்திக் ஒரு பொக்கிஷம் என்றும் புகழ்ந்து சொல்லி உள்ளார்.
Aagayam Tamil என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் அந்தணன், இப்போதுள்ள இளம் தலைமுறைக்கு கார்த்திக் யாரென்று தெரியாது.. அன்று கார்த்திக்கை பற்றி எழுதாத பத்திரிகைகளே கிடையாது..

நடிகர் சிம்புவை எடுத்து கொண்டால், காதல் விவகாரத்திலும் சரி, ஷூட்டிங்குக்கு நேரத்துக்கு வருவதிலும் சரிஆரம்ப காலத்தில் அவர் மீது ஒரு கருத்து இருந்தது.. சிம்பு x100தான் அன்றைய கார்த்திக் எனலாம்..
ஒருமுறை, பேட்டி எடுப்பதற்காக நான் சென்றிருந்தேன்.. காலையில் 8 மணிக்கு அந்த படத்தின் ஷூட்டிங் என்பதால், என்னையும் அப்போது வர சொல்லியிருந்தார்கள்.. எனவே நானும், போட்டோகிராபரும் 8 மணிக்கே ஸ்பாட்டுக்கு சென்றுவிட்டோம். ஆனால், மதியம் 3 மணிக்குதான் ஹாய் சொல்லிட்டு வந்தார்.. 2 சீன் எடுத்ததுமே கிளம்பி சென்றுவிட்டார்.. என்னை வர சொல்லியிருந்ததே அவருக்கு நினைவில்லை..
நடிகர் கார்த்திக் ஸ்டைல்
உடனே கிளம்பி சென்றுவிட்டார்.. அவுட்டோரிலும் திடீரென வயிற்றை பிடித்து கொண்டு, வயிறு வலி என்று உட்கார்ந்துவிடுவார்.. சார் வயிறு வலி, ரொம்ப முடியல என்று சொல்லிவிட்டு கிளம்பிவிடுவார்.. ஆனால் அந்த வயிற்று வலிக்கு ஒரு காரணம் இருக்கும்.. அந்த காரணத்தை டைரக்டர் செய்து தந்தால் வயிறு வலி போய்விடும்..
இத்தனை விமர்சனங்களையும் கடந்து பீக்கில் இருந்தார் கார்த்திக்.. இன்றுவரை கார்த்திக்கை போல நடிக்க வேறொருவர் கிடையாது.. பெண்கள் எல்லாம் அந்த அளவுக்கு அவர் மீது கிரேஸில் இருந்தார்கள்.. கார்த்திக்கின் நடிப்பு பாணி தனி ஸ்டைலில் இருக்கும்.. ஃபிரேமில் கார்த்திக் இருக்கிறார் என்றாலே, எல்லாரையும் நடிப்பில் தூக்கி தின்னுட்டு போயிடுவார்..
சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட்
ஒருவேளை, அன்றைய காலகட்டத்தில் விமர்சனங்களை தவிர்த்துவிட்டு, ஷூட்டிங்கிற்கு நேரத்திற்கு வந்து சின்சியராக நடித்திருந்தால் இன்றும் கார்த்திக் இடத்தில் , கார்த்திக் மட்டுமே நின்றிருப்பார்.. வேறு யாருமே அவரை நெருங்க முடியாது.. இப்போது வரை கார்த்திக் நடிப்பின் பாணியை யாருமே டச் செய்யவில்லையே.. ஒருசிலர் கார்த்திக் மாதிரி முயற்சித்தார்கள்.. ஆனால், கார்த்திக்கிடம் அவர்களால் நெருங்க கூட முடியல.
கார்த்திக்கை பொறுத்தவரை சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட்.. 10 டேக் எடுக்கக்கூடிய நடிகர் அவர் கிடையாது.. டயலாக்கை படித்ததுமே, நடிப்பை அடித்து தூள் கிளப்பிவிட்டு கிளம்பிடுவார்.. அந்த அளவுக்கு அசாத்திய திறமைசாலி கார்த்திக். எல்லாமே சரியாகயிருந்தும், ஏதோ ஒரு இடத்தில் பிரச்சனையில் சிக்கினார். அந்த பிரச்சனையால் அவர் முழுமையாக ஆட்கொள்ளப்பட்டார்..
தமிழ்நாட்டின் பொக்கிஷம்
கேவி ஆனந்த் அப்போது ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.. அனேகன் படத்தில் கார்த்திக்கை நடிக்க வைக்க போறேன் என்று சொன்னதுமே, பல பேர் என்னை எச்சரித்தார்கள்.. போய் மாட்டிக்காதே என்றெல்லாம் சொன்னார்கள்.. ஆனாலும் என் விருப்பப்படியே கார்த்திக்கை நடிக்க வைத்துள்ளேன் என்று கூறியிருந்தார்.
அந்தவகையில் கார்த்திக் தமிழ்நாட்டின் பொக்கிஷம்.. ஆனால், அவரே தன் மீது தாரை பூசிக்கொண்டுவிட்டார் என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications