சின்னத்திரை 2014–2022 விருதுகள் குளறுபடி.. ரட்சிதாவுக்கு மறுப்பு, பாதியில் வந்த இயக்குனருக்கு அவார்ட்
சென்னை: (Tamil TV Awards 2014-2022 )சின்னத்திரை கலைஞர்கள் மற்றும் சீரியல்களுக்கான விருதுகள் 2014 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்காக ஒரே கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விருது அறிவிப்பே ஒரு விழாவாக இல்லாமல், சர்ச்சைகளின் திருவிழாவாக மாறியுள்ளது.
வரும் 13ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விருதுகளை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விழா நடைபெறும் முன்பே, விருது பட்டியல் குறித்து சின்னத்திரை வட்டாரங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

காலதாமதம் மீதான கேள்விகள்
(Small screen awards 2014-2022) சீனியர் சின்னத்திரை நடிகர்கள் சிலர், இந்த விருதுகள் அறிவிக்கப்பட்ட நேரம் குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். "முந்தைய ஆட்சிக் காலத்தில் விருதுகள் வழங்கப்படாதது தவறு தான். ஆனால் இந்த ஆட்சி வந்த பிறகாவது, ஓரிரு ஆண்டுக்குள் கொடுத்திருக்க வேண்டாமா? ஏன் இவ்வளவு காலம் காத்திருந்து, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவசரமாக அறிவிக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
தேர்வுக் குழு
இந்த விருதுகளுக்கான பரிந்துரைகள் தயாரிப்பாளர்கள் மூலமாக மட்டுமே பெறப்படுவதாக நடிகர் சங்கம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. "இந்த ஆண்டு ஒளிபரப்பான எங்களது இந்த சீரியலில் இந்த நடிகர்கள் விருதுக்கு பொருத்தமானவர்கள்" என்று தயாரிப்பாளர்கள் விண்ணப்பிக்க, அதனை அடிப்படையாக வைத்து அரசு பரிசீலனை செய்கிறது என்பதே நடைமுறை. இதில் தான் பெரிய குறைபாடு இருப்பதாக பலர் குற்றம்சாட்டுகிறார்கள்.
செம்பருத்தி சீரியல் சர்ச்சை
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி, டிஆர்பி பட்டியலில் சன் டிவி டிஆர்பியை கூட முந்திய சாதனையை படைத்த 'செம்பருத்தி' சீரியல், சிறந்த சீரியலுக்கான விருதைப் பெற்றுள்ளது. ஆனாலும், அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரியா ராமன், இயக்குனர் ஆகியோருக்கு விருது வழங்கப்படாதது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ரட்சிதாவுக்கு விருது இல்லை
2014 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில், சின்னத்திரையில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற சீரியலில் ஒன்று 'சரவணன் மீனாட்சி'. அந்த சீரியலில் மூலம், தமிழ் டிவி ரசிகர்களிடையே புகழின் உச்சத்துக்கு சென்றவர் நடிகை ரட்சிதா. இவ்வளவு பெரிய தாக்கம் ஏற்படுத்திய ஒரு நடிகையின் பெயர் விருதுப் பட்டியலில் இடம்பெறாதது, நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
"இந்த காலகட்டத்தில் சின்னத்திரையில் ரட்சிதா இல்லாமல் ஒரு விருது பட்டியல் எப்படி முழுமையாக இருக்கும்?" என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவர் பெயர் தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து பரிந்துரைக்கப்படவில்லையா, அல்லது பரிந்துரை வந்தும் தேர்வுக் குழு அதை புறக்கணித்ததா என்ற குழப்பமும் நீடிக்கிறது. சிலர், தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அல்லது உள்ளக அரசியல் காரணமாகவே ரட்சிதாவின் பெயர் ஒதுக்கப்பட்டிருக்கலாம் என்றும் பேசுகின்றனர்.
ரோபோ சங்கருக்கும், மகளுக்கும் தமிழக அரசு கொடுத்த விருது.. கண்ணீரோடு இந்திரஜா வெளியிட்ட பதிவு
அதேபோல ஜீ தமிழில் ஒளிபரப்பான 'பூவே பூச்சூடவா' சீரியலுக்கு சிறந்த சீரியல் விருதும், சிறந்த இயக்குனர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சீரியலில் முதல் 700 எபிசோடுகளை இயக்கியவர் மணிகண்டன். கடைசி 400 எபிசோடுகளை மட்டுமே இயக்கிய ரத்னம் வாசுதேவனுக்கு மட்டும் சிறந்த இயக்குனர் விருது வழங்கப்பட்டுள்ளது.
முழு சீரியலையும் இயக்கிய மற்ற இயக்குனர்களுக்கு முழுமையான அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஒரு சீரியலில் மட்டும் ஏன் இப்படியொரு விதிவிலக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
உள்ளே நடக்கும் அரசியல்
இந்த விருதுகளை சுற்றிய சர்ச்சைகளில், "திறமைக்கு விருது" என்ற அடிப்படை நோக்கம் மங்கிப் போய்விட்டதாக பல கலைஞர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள். தேர்வுக் குழுவில் இருப்பவர்களுக்கும், சில தயாரிப்பாளர்களுக்கும் உள்ள நெருக்கம், விருது பட்டியலில் பிரதிபலிக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் வெளிப்படையாக பேசப்படுகின்றன.
"ஒரு நடிகர் எவ்வளவு நல்ல நடிப்பு கொடுத்தாலும், அவருக்குப் பின்னால் சரியான லாபி இல்லையென்றால் விருது கிடைக்காது" என்ற கசப்பான உண்மைதான் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது என்று சின்னத்திரை வட்டாரங்களில் பேசப்படுகிறது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications