Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரோபோ சங்கருக்கும், மகளுக்கும் தமிழக அரசு கொடுத்த விருது.. கண்ணீரோடு இந்திரஜா வெளியிட்ட பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளுக்கு தேர்வானவர்கள் லிஸ்ட் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கருக்கு இரண்டு முறை 'சிறந்த நகைச்சுவை நடிகர் (ஆண்)' விருது வழங்கப்பட்டதையடுத்து, அவரது மகள் இந்திரஜா தனது சோசியல் மீடியா பக்கத்தில் மனதை நெகிழ வைக்கும் ஒரு நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், தந்தையை இழந்த வேதனையும், அவர் இல்லாத நிலையில் கிடைத்த பெருமைக்கான மகிழ்ச்சியும் கலந்த உணர்வுகள் வெளிப்பட்டுள்ளன.

Robo Shankar Indraja Tamil Nadu Government Awards

இந்திரஜா வெளியிட்ட பதிவு

அந்த பதிவில் இந்திரஜா,
"எங்களுடைய கனவு, our dream come moment...
'Indha moment-la... Appa, ungala romba miss panren.'
இந்த மேடை, இந்த விருது, இந்த வெளிச்சம்...
எல்லாமே நீங்க இருந்தா ரொம்ப வேற மாதிரி இருந்திருக்கும் அப்பா...
கை பிடிச்சு நின்னு, 'பாத்தியா... நம்ம hard work-க்கு value கிடைச்சிருக்கு'னு சொல்லிருப்பீங்கன்னு தோணுது அப்பா.
அப்பா இல்லாம இந்த சந்தோஷம் ரொம்ப silent-ஆ இருக்கு.
ஆனா இதுவும் நம்ம ரெண்டு பேருக்குமே..."

என்று உருக்கமாக எழுதிக் கொண்டே, ரோபோ சங்கருக்கு கிடைத்த விருதுகள் குறித்த விவரங்களையும் அவர் பதிவு செய்துள்ளார்.

அதில்,
🏆 Robo Sankar - Tamil Nadu State Awards
Best Comedy Actor (Male)
• 2016 - Vellainu Vandhuta Vellaikaran
• 2022 - Iravin Nizhal

🏆 Indraja - Robo Sankar Award
Best Comedy Actor (Female)
• 2022 - Viruman

எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு அரசு திரைப்பட விருது குழுவினருக்கு நன்றி தெரிவித்து,
"எங்களின் உழைப்பை அங்கீகரித்த இந்த கௌரவத்திற்கு மனப்பூர்வமான நன்றி. இது ஒரு விருது மட்டும் இல்லை... ஒரு வாழ்க்கை முழுவதும் நினைவில் நிற்கும் தருணம்" என்று அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ரோபோ சங்கர் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், இரவின் நிழல், விருமன் ஆகிய படங்களின் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இணைந்து நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினருக்கும் அவர் தனிப்பட்ட நன்றி தெரிவித்துள்ளார். "நீங்கள் எல்லாம் கொடுத்த ஆதரவு இல்லாமல் இது சாத்தியமாகியிருக்காது" எனவும் இந்திரஜா உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

மேலும் அந்த பதிவில் கடைசியாக, "சில வெற்றிகள் கைதட்டல்களோடு கொண்டாடப்படுகின்றன. சில வெற்றிகள் கண்ணீர் மற்றும் நினைவுகளோடு கொண்டாடப்படுகின்றன. Miss u and love u appa..."

என்று தந்தையின் நினைவில் கண்ணீர் மல்க எழுதியுள்ளார். "கைதட்டும் உங்கள் பாராட்டு தான் கலைஞர்களுக்கு கிடைக்கும் மிகப் பெரிய சன்மானம்" என்றும் குறிப்பிட்டு, "இந்த பாடல் உங்களுக்காக அப்பா" என்று தனது உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வந்த உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

ரோபோ சங்கர்

தமிழ் சினிமாவில் தனித்துவமான உடல் மொழி, டைமிங் காமெடி என ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தவர் ரோபோ சங்கர். ஆரம்பத்தில் துணை நகைச்சுவை நடிகராக அறிமுகமான அவர், பின்னர் பல படங்களில் நடித்த காட்சிகளை அவ்வளவு சீக்கிரமாக ரசிகர்களால் மறக்க முடியாது அந்த அளவிற்கு அந்த காட்சிகளோடு இணைந்து அனைவரையும் சிரிக்க வைத்திருந்தார்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் அவர் நடித்த "அன்னைக்கு காலையில கோழி கொக்கரக்கோணு கூவிச்சி" என்ற காமெடி எத்தனை முறை பார்த்தாலும் சிரிப்பு வர வைக்கும் அளவிற்கு இயல்பாக ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து, இரவின் நிழல் போன்ற வித்தியாசமான முயற்சிகளிலும் தன்னை வேறொரு கோணத்தில் வெளிப்படுத்தினார். அந்த இரண்டு படங்களுக்காகவும் தமிழக அரசு அவரை 'சிறந்த நகைச்சுவை நடிகர்' என விருது வழங்கி கௌரவித்தது என்பது அவரது கலைப் பயணத்தில் மிக முக்கியமான அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.

தந்தையின் பாதையில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வரும் இந்திரஜாவுக்கும் 'விருமன்' படத்திற்காக தமிழக அரசு விருது வழங்கப்பட்டது. அப்பா - மகள் இருவருக்கும் ஒரே மேடையில் அரசு விருது கிடைத்த இந்த தருணம், அவர்களது குடும்பத்திற்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான நினைவாக மாறியுள்ளது.

இன்று ரோபோ சங்கர் உயிரோடு இல்லாவிட்டாலும், அவர் விட்டுச் சென்ற காமெடி, நடிப்பு மகளுக்காக வைத்த கனவுகள் அனைத்தும் இந்த விருதுகள் மூலம் மீண்டும் நினைவுகூரப்படுகின்றன. அப்பா இல்லாத அந்த மேடையில் நின்று, கண்களில் கண்ணீருடன் மகள் எழுதிய இந்த வார்த்தைகள் தான், ரோபோ சங்கர் ரசிகர்களின் மனங்களையும் கலங்க வைத்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+