இந்த வார டாப் 10 சீரியல்கள்.. எதிர்நீச்சலுக்கே இந்த நிலைமையா? அந்த விஜய் டிவி சீரியலை பார்த்தீர்களா?
சென்னை: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் அடிப்படையில் இந்த வருடத்தின் 39 வது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் விவரங்கள் வெளியாகியிருக்கிறது.
அதில் எதிர்பார்க்காத பல சீரியல்கள் டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்து இருக்கிறது. அதனால் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

அதுபோல இந்த தகவல்கள் கிராமப்புறங்களிலும், நகரப்புறங்களிலும் அதிகமாக தொலைக்காட்சியில் பார்க்கப்பட்ட சீரியல்களின் டிஆர்பி அடிப்படையில் வெளியாகி இருக்கிறது. அதை கீழே வரிசையாக பார்க்கலாம்.
ஐஸ்வர்யாவால் பிரசாந்தை பிடித்த குடும்பத்தினர்.. மூர்த்திக்கு காத்திருந்த அதிர்ச்சி..எதிர்பாரா முடிவு
1, கயல் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த சில வாரங்களாகவே இரண்டாவது இடத்தில் இருந்தது ஆனால் இந்த வாரம் 10. 53 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தில் வந்திருக்கிறது.
2, எதிர்நீச்சல் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்துவின் மறைவிற்கு பிறகு தொடர்ச்சியாக சில வாரங்களாகவே முதலிடத்தில் இருந்தது. இந்த நிலையில் இந்த வாரம் 10.18 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்திற்கு வந்திருக்கிறது.
3, வானத்தைப்போல சீரியல்; சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் கடந்த சில வாரங்களாகவே நான்காவது இடத்தில் இருந்தது. ஆனால் இந்த வாரம் 10.07 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

4, சுந்தரி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் கடந்த சில வாரங்களாக மூன்றாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 9.89 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்திற்கு வந்திருக்கிறது.
5, இனியா சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் கடந்த வாரத்தில் ஆறாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 8.68 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
எதிர்நீச்சல்: அறிமுகமானதும் மாரிமுத்துவின் டயலாக்கை மாற்றிய வேல ராமமூர்த்தி.. ஜனனி கேட்ட கேள்வி
6, மிஸ்டர் மனைவி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி சீரியல் கடந்த வாரத்தில் ஏழாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 8. 67 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது.

7, சிறகடிக்க ஆசை சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த வாரத்தில் ஐந்தாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 8. 16 புள்ளிகளை பெற்று ஏழாவது இடத்திற்கு வந்திருக்கிறது.
8, பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த வாரம் எட்டாவது இடத்தில் இருந்தது. அதுபோல இந்த வாரமும் 7.56 புள்ளிகளை பற்றி எட்டாவது இடத்தை தக்க வைத்து இருக்கிறது.
9, ஆனந்த ராகம் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் கடந்த வாரத்தில் பத்தாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 6.82 புள்ளிகளை பெற்று 9-வது இடத்திற்கு வந்திருக்கிறது.

10, ஆஹா கல்யாணம் சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் சீரியல் கடந்த வாரம் பத்து இடங்களுக்குள் வராத நிலையில் இந்த வாரம் 6.57 புள்ளிகளை பெற்று பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications