ஐஸ்வர்யாவால் பிரசாந்தை பிடித்த குடும்பத்தினர்.. மூர்த்திக்கு காத்திருந்த அதிர்ச்சி..எதிர்பாரா முடிவு
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் அக்டோபர் ஆறாம் தேதிக்கான எபிசோடு வெளியாகியிருக்கிறது.
அதில் ஜனார்த்தனனின் இந்த நிலைமைக்கு காரணம் பிரசாந்த் தான் என்பதை மீனா கண்டுபிடித்து விட தன்னுடைய குடும்பத்தினரிடம் அதைப் பற்றி சொல்கிறார்.

அதே நேரத்தில் குடும்பத்தினர் அனைவருடன் கூட்டு முயற்சியால் பிரசாந்தை கையும் களவுமாக பிடிக்கின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பிரசாந்தை பற்றி தெரிய வந்ததும் மீனா மூர்த்தி வீட்டுக்கு செல்கிறார். அங்கு மூர்த்தி எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார். எப்படியாவது கதிர் மற்றும் ஜீவா அந்த நேரத்தில் எங்கே இருந்தாங்க என்பதை கண்டுபிடித்தால் நாம அவர்களை இந்த பிரச்சனையில் இருந்து வெளியே கொண்டு வந்து விடலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் அங்கு வந்த மீனாவை பார்த்ததும் முல்லை வீட்டுக்குள் செல்ல முயற்சிக்கிறார். அதற்கு மூர்த்தி முல்லையை அங்கே நிற்க வைத்து விட்டு மீனாவிடம் என்னப்பா எந்த நேரத்தில் வந்திருக்க என்று கேட்க அதற்கு மீனா எல்லா உண்மைகளையும் சொல்கிறார். அதற்கு மூர்த்தி அப்போ எப்படியாவது பிரசாந்த் பற்றிய உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும் என்று குடும்பத்தோடு சேர்ந்து பிளான் போடுகிறார்.
அதைத்தொடர்ந்து எல்லோரும் சேர்ந்து ஹாஸ்பிடலுக்கு போகின்றனர். அப்போது மூர்த்தி முதலில் உங்க அம்மாவையும் தங்கச்சியையும் வீட்டிற்கு அனுப்பி வைங்க என்று சொல்கின்றார். அதுபோலவே மீனாவும் தன்னுடைய அம்மாவும் தங்கச்சியிடமும் நீங்க வீட்டுக்கு போங்க நான் அப்பா கூடவே இருக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு மீனாவின் தங்கச்சி ஏதாவது பிரச்சனையா அக்கா பிரசாந்த் இரண்டு தடவை ரூமுக்குள் போக வந்தாரு. நான்தான் விடல என்று சொல்கிறார்.

அப்போது மீனாவும் அவருடைய தங்கச்சியும் பேசிக் கொண்டிருக்கும் இப்போது அந்த இடத்திற்கு பிரசாந்த் வருகிறார். நீங்க வீட்டுக்கு போங்க எத்தனை நாளைக்கு தான் நீங்களே இங்க இருப்பீங்க நான் தான் இருக்கேனே நான் மாமாவை பார்த்துகிறேன் என்று சொல்ல அதற்கு மீனாவும் கிளம்பி போவது போன்று போய் தன்னுடைய அம்மாவையும் தங்கச்சியும் அனுப்பி வைத்து மீண்டும் ஹாஸ்பிடலுக்கு போய் வருகிறார்.
அப்போது ஐஸ்வர்யா வீடியோ எடுப்பதற்காக போனை ஜனார்த்தனன் இருக்கும் அறையில் வைத்துவிட்டு வெளியே வந்து விடுகிறார். பிறகு மூர்த்தி, முல்லையின் அப்பா, கண்ணன், ஐஸ்வர்யா என எல்லோரும் ஒவ்வொரு இடமாக மறைந்து இருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது எல்லோரும் ஹாஸ்பிடலை விட்டு போய்விட்டதாக நினைத்து பிரசாந்த் சந்தோஷமாக ஜனார்த்தனன் ரூமிற்குள் போகிறார்.
பாண்டியன் ஸ்டோரின் இறுதி கட்டம்.. பாபநாசம் படத்தை மிஞ்சிய கதை.. ரசிகர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
அப்போது உள்ளே போய் ஜனார்த்தனன் இடம் உன்ன பாக்குறதுக்கு 4 அடுக்கு பாதுகாப்பை தாண்டி வந்து இருக்கேன்.உன் பெரிய பொண்ணு ஹாஸ்பிட்டல விட்டு போகவே மாட்டேங்குறா. என் மேல அவளுக்கு சந்தேகம் வந்துடுச்சா? ஆனா வந்திருக்க வாய்ப்பில்லை. வந்து இருந்தா நான் சொன்னதும் போய் இருக்க மாட்டா. நீ உயிரோடு இருந்து என்ன பண்ண போற? நீ முழித்ததும் என்னோட பணம் எங்கன்னு என்கிட்ட கேப்பா, என்னால அந்த பணத்தை தர முடியாது.
நான் அந்த பணத்தை செலவு பண்ணிட்டேன். அதனால நீ செத்து போயிரு. நீ கண் முழிச்சா எனக்கு தான் கஷ்டம் என்று அங்கிருக்கும் தலையணையை வைத்து ஜனார்த்தனனை கொலை செய்ய பிரசாந்த் முயற்சி செய்யும் போது மூர்த்தி வந்து பிரசாந்தை பிடித்துக் கொள்கிறார்.

மொத்த குடும்பமும் அங்கு வந்து பிரசாந்தை பிடித்துக் கொள்ள ஐஸ்வர்யா மாமா இவன் பேசுறது எல்லாமே ரெக்கார்டு ஆகி இருக்கு என்று சொல்ல, அந்த போனை பிரசாந்த் உடைக்க பார்க்கிறார். பிறகு மூர்த்தி பிரசாந்தை தரதரவென இழுத்து ரூமை விட்டு வெளியே கூட்டிட்டு வருகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைந்தது.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: நிஜ கேரக்டரை காட்டிய சைக்கோ அருண்.. முத்துவால் உடைந்த உண்மை.. விஜயாவுக்கு ஆப்பு -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்!












Click it and Unblock the Notifications