துப்புரவு தொழிலாளி..இப்போ ஊராட்சி மன்ற தலைவி.. “முனியம்மா” கையில் செங்கோல்! திருமாவளவன் சொன்ன பஞ்ச்
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2024க்கான ஆண்டிற்கான தமிழா தமிழா விருதுகள் ஆகஸ்ட் 15 வியாழக்கிழமை 11:00 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் துப்புரவு தொழிலாளியாக இருந்து ஊராட்சி மன்ற தலைவியாக மாறிய முனியம்மாவிற்கு விருதுகள் வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தொல். திருமாவளவன் விருதை கொடுக்க அங்கு சிறப்பு விருந்தினராக அமர்ந்திருக்கும் தேமுதிக கட்சியின் தலைவரான பிரேமலதா விஜயகாந்த் கைத்தட்டி பாராட்டி இருக்கிறார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு டிவி சேனல்களில் புதியது புதியதாக பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வரும். அந்த வகையில் ஜீ தமிழில் தமிழா தமிழா விருதுகள் 2024 ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கும் மக்களுக்கு விருதுகள் வழங்குகிறார்கள். அப்போது மதுரையில் ஊராட்சி மன்ற தலைவியாக இருக்கும் முனியம்மாவிற்கு விருது வழங்கியிருக்கிறது.

அதாவது முனியம்மா ஆரம்பத்தில் மதுரையில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து இருக்கிறார். அதற்குப் பிறகு அவரோடு சேர்ந்தவர்கள் எல்லோரும் நீங்க ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அதனால நானும் சரின்னு அவங்க சொல்றாங்கன்னு போட்டியிட்டேன். மக்கள் எல்லோரும் என்னை ஜெயிக்க வச்சுட்டாங்க. இப்போ நான் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறேன். ஆனாலும் தொடர்ந்து என்னுடைய மக்களுக்கு நான் சேவை செய்வேன் என்று முனியம்மா சொல்லி இருக்கிறார்.
அதுபோல முனியம்மா பற்றி அவரோடு வேலை செய்தவர்கள் கூறுகையில், முனியம்மா எங்களோடு தான் வேலை செய்தார். இப்போ நாங்க சொன்னதால்தான் அவங்க ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டாங்க. ஆனாலும் எங்களுக்கு ஒன்று என்றால் அவங்க தான் ஓடி வந்து உதவுறாங்க. எங்க ஊரை காக்கும் தெய்வம் அவங்க தான்.. என்று கண் கலங்க பேசி இருக்கின்றனர். அவருக்கு ஜீ தமிழ் மேடையில் தொல் திருமாவளவன் செங்கோல் விருது வழங்கி இருக்கிறார்.

அப்போது திருமாவளவன் பேசுகையில், "கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம்.. எளிய மனிதனுக்கும் அதிகாரம்.. தூய்மை பணியாளர் பச்சை மையில் கையெழுத்து போடக்கூடிய வாய்ப்பை நம்முடைய ஜனநாயகம் நமக்கு தந்திருக்கிறது" என்று அவர் பேசுகையில் அங்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த பிரேமலதா விஜயகாந்த் உட்பட பல சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் எல்லோரும் கைத்தட்டி ஆதரவு கொடுத்திருக்கின்றனர். இந்த எபிசோடு வரும் ஆகஸ்ட் 15 வியாழக்கிழமை 11:00 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications