தமிழும் சரஸ்வதியும்: அர்ஜுன் பற்றி உண்மை தெரிந்த ராகினி.. கட்சி மாறிய கோதை.. கோபத்தில் சரஸ்வதி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலின் செப்டம்பர் 14ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் அர்ஜுனை எதற்காக தமிழ் அடித்தார் என்ற உண்மையை ராகினி தெரிந்து கொள்கிறார்.

அதே நேரத்தில் சரஸ்வதி கோதையிடம் கோபப்படுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஹாஸ்பிடலில் அர்ஜுனின் அக்காவும் அம்மாவும் தமிழை போலீசில் பிடித்துக் கொடுத்திருக்கலாம் என்று கேட்க, அதற்கு அர்ஜுன் அவனை போலீசில் பிடித்துக் கொடுத்தால் நானும் தான் மாட்டிக்கொள்வேன். நாங்க தான் அவன்கிட்ட சண்டைக்கு போனோம் என்று அங்கு நடந்தவற்றை பேசி கொண்டிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து கோதை தமிழ் வீட்டில் எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறுகின்றார். அப்போது நடேசன் அர்ஜுன் என்ன சொன்னாலும் நீ எதுக்கு சண்டைக்கு போற? அவன் என்ன சொன்னாலும் சைலண்டா போக வேண்டியது தானே? என்று தமிழை கேட்க, அதற்கு நமச்சி, அவன் கோதை அம்மா பற்றி தப்பா பேசினான். அதான் தமிழ் அடிச்சான் என்று சொல்ல, சரஸ்வதி அவன் எப்படி அத்தையை பற்றி தப்பா பேசலாம்? என்று கேட்க, உனக்கு கோபம் வருது தானே...!? அப்படித்தான் தமிழுக்கும் கோபம் வந்துச்சு, அதான் அடிச்சான் என்று சொல்ல கோதை தமிழை பார்க்கிறார்.
பிறகு சாப்பிட்டு முடித்ததும் கோதையும் நடேசனும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது நடேசன் பாத்தியா தமிழ் உன் மேல எவ்வளவு பாசமாக இருக்கான் என்று சொல்ல, கோதை ராகினி நம்மளை நம்பாமல் அனுப்பிய போது தான் தமிழையும் நாம அனுப்பும்போது அவன் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பான் என்று தெரிந்தது என்று வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்.

மறுபக்கம் சரஸ்வதி இடம் தமிழ் தண்ணி கேட்கிறார். அதற்கு சரஸ்வதி தண்ணி கொண்டு வந்து கொடுக்க, எல்லா வேலையும் முடிந்து விட்டதா? என்று சரஸ்வதி இடம் தமிழ் கேட்க, அதற்கு பாத்திரம் மட்டும் கழுவனும் என்று சரஸ்வதி சொல்கிறார். கூடவே கால் ரொம்ப வலிக்குது என்று சொல்ல காலையில வேலை செஞ்சுக்கலாம் நீ போய் தூங்கு என்று தமிழ் கூறுகிறார்.
அதைத்தொடர்ந்து வசுவிடம் கார்த்தி நாளைக்கு சீக்கிரமா வேலைக்கு போகணும். அப்பதான் வேலை தேட முடியும் என்று சொல்ல, வசு அபி கிட்ட சொல்லி உங்க டாக்குமெண்ட் எல்லாம் வாங்கிக்கலாம் என்று சொல்கிறார். இதை தமிழ் கேட்டுக்கொண்டு நிற்கிறார். பிறகு விடிந்ததும் எல்லோரும் எழுந்து கொண்டிருக்கின்றனர். அப்போது முதல் ஆளாக எழுந்து கோதை வீட்டு வேலைகளை செய்து முடித்து எல்லோருக்கும் டீ போட்டுக் கொடுக்க எல்லோரும் குடிக்கின்றனர். அப்போது சரஸ்வதி எதுக்காக அத்தை நீங்க இந்த வேலை எல்லாம் பாக்குறீங்க? நான் பாத்துக்குறேன் என்று சொல்ல, நான் வேலை செய்வதில் என்ன தப்பு இருக்கு, நாம அந்த வீட்ல இருக்கும்போதே நான் சின்ன சின்ன வேலைகளை செஞ்சுட்டு தானே இருந்தேன் என்று கோதை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

மறுபக்கம் அபி ராகினியிடம் கோதை அம்மாவை பற்றி அர்ஜுன் தப்பா பேசினதால தான் தமிழ் அடிச்சாரு என்று சொல்ல, ராகினி போய் அர்ஜுனிடம் கேட்கிறார். அப்போது அவருடைய மாமா நான் தான் கோதை அம்மா பற்றி பேசினேன். அதுக்கு இப்படியா பண்ணுவாங்க? என்று கேட்க, ராகினி நீங்க அம்மா பற்றி பேசினதால்தான் அர்ஜுனை தமிழ் அடிச்சி இருக்கிறார் என்று திட்டிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications