தமிழும் சரஸ்வதியும்: கார்த்திக்காக தமிழ் செய்த செயல்.. அர்ஜுன் குடும்பத்தை திட்டிய ராகினி.. டுவிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கோதையை அர்ஜுன் குடும்பத்தினர் திட்டுவதை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாமல் ராகினி அவர்களை திட்டுகிறார்.

அதே நேரத்தில் ராகினிக்காக அர்ஜுன் தன்னுடைய குடும்பத்தையே எதிர்த்து நிற்கிறார்.

tamilum saraswathiyum serial 15th September 2023 promo and episode full update

அதுபோல வேறு இடத்தில் வேலை தேடிக் கொண்டிருக்கும் கார்த்திக்கு தன்னுடைய கம்பெனியிலேயே உயர் பதவியை தமிழ் கொடுக்க மொத்த குடும்பமும் சந்தோஷம் அடைகின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் எபிசோடின் ஆரம்பத்தில் ராகினி எதற்காக அம்மாவைப் பற்றி தப்பா பேசினீங்க என்று அர்ஜுன் குடும்பத்தினரிடம் சண்டை போட, அதற்கு அவங்களாக தான் வந்து பேசுனாங்க அதனால்தான் அப்படி பேசினோம் என்று அர்ஜுனின் மாமா சொல்ல, அதற்கு ராகினி கோபத்தில் திட்டுகிறார். அப்போது அர்ஜுன் விடு ராகினி நான் நேற்றைக்கே மாமாவை திட்டிட்டேன். நீ இத நெனச்சு கவலைப்பட்டு கொண்டு இருக்காதே என்று சமாதானப்படுத்துகிறார்.

tamilum saraswathiyum serial 15th September 2023 promo and episode full update

அதைத் தொடர்ந்து கோதை வீட்டில் தானே சமையல் எல்லாம் செய்து எல்லோருக்கும் சாப்பாடு பரிமாற, தமிழ் சாப்பாட்டை சாப்பிட்டு பார்த்து உண்மையா சொல்லு சரஸ்வதி இது நீதான் சமைச்சியா? என்று கேட்க அதற்கு வசு ஆமா நாங்க தான் காய்கறி வெட்டி கொடுக்க சரஸ்வதி தான் சமைச்சாங்க என்று பொய் சொல்கின்றனர். ஆனால் தமிழ் உண்மையை கண்டுபிடித்து நீ பொய் சொல்ற, இது யாரு சமைச்சாங்கன்னு எனக்கு தெரியும் என்று சொல்லி மேலும் மேலும் சாப்பாட்டை வாங்கி சாப்பிடுகிறார்.

அப்போது கார்த்திக் எனக்கு ஒன்னும் இதுல வித்தியாசம் தெரியலையே என்று சொல்ல, அதற்கு நடேசன் இது உங்க அம்மா சமைச்சது டா என்று சொல்ல எல்லோரும் சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றனர். மறுபக்கம் ராகினி வீட்டில் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர் அப்போது அங்கே அசைவ சாப்பாடு வைக்கப்பட்டிருக்கிறது.

tamilum saraswathiyum serial 15th September 2023 promo and episode full update

அந்த நேரத்தில் அர்ஜுன் மாமா நல்லவேளை இப்போ கோதை இங்கே இல்லை. இருந்தா இப்படி நல்ல சாப்பாடு எல்லாம் சாப்பிட முடியுமா? என்று பேச, அதற்கு கடுப்பான ராகினி இப்போ எதுக்கு எங்க அம்மாவை திட்றீங்க. இனிமேல் அவங்கள பற்றி தப்பா பேசினா நான் சும்மா இருக்க மாட்டேன் என்று திட்டிவிட்டு கோபப்பட்டு உள்ளே போகிறார்.

tamilum saraswathiyum serial 15th September 2023 promo and episode full update

இதனால் கோபமான அர்ஜுன் தன்னுடைய குடும்பத்தில் அனைவரையும் திட்டுகிறார். இன்னும் சொத்து நம்ம பேருக்கு வரலை. ராகினி பெயரில் தான் இருக்கு. நீங்க இப்படி பண்ணிட்டு இருந்தா அவளுக்கு நம்ம மேல கோபம் தான் வரும். எனக்கு கோதை மேல தான் கோவமா இருக்கு தவிர, ராகினி மேல கிடையாது. ராகினியை நான் உண்மையா லவ் பண்றேன். இனிமேல் பார்த்து நடந்துக்கோங்க என்று சொல்லிவிட்டு போகிறார்.

அதைத்தொடர்ந்து கார்த்திக் இன்னொரு கம்பெனிக்கு வேலை விஷயமாக போக போறேன் என்று சொல்லும் போது தமிழ் நீ எதுக்கு வேற கம்பெனிக்கு போற நம்ம கம்பெனியிலே வந்து வேலை செய்தால் எனக்கும் உதவியாக இருக்கும் என்று சொல்ல, கோதை அண்ணன் சொல்றதை கேளுடா என்று சொல்ல கார்த்திக் தமிழ் கம்பெனிக்கு போகிறார்.

tamilum saraswathiyum serial 15th September 2023 promo and episode full update

அதை தொடர்ந்து கம்பெனிக்கு கார்த்திகை கூட்டிட்டு போன தமிழ் அங்கு இருக்கும் அனைவரிடமும் கார்த்திகை அறிமுகப்படுத்தி வைக்கிறார். அதோடு அவருக்கு உயர் பதவி கொடுக்கப்பட்டு இருப்பது பற்றியும் சொல்ல, அனைவரும் பாராட்டுகின்றனர். அப்போது தன்னுடைய அண்ணனுடைய பெருந்தன்மையை பார்த்து கார்த்திக் கண்கலங்குகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+