உதவி செய்த தமிழ்.. பழி தீர்த்த அர்ஜுன்.. சரஸ்வதி குடும்பத்தினருக்கு அபி சொன்ன விஷயம்.. ராகினி பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அக்டோபர் ஐந்தாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

இதில் அர்ஜுன் கம்பெனியில் அவருடைய மாமா தொழிலாளரை அடித்து அவமானப்படுத்தி இருக்கிறார்.

அந்த தொழிலாளர்களுக்கு உதவி செய்யப்போன தமிழுக்கு அர்ஜுனால் அதிர்ச்சி கிடைக்கிறது. இந்தநிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் அர்ஜுன் மாமா கம்பெனியில் வேலை செய்யும் தொழிலாளி ஒருவரை அடித்து விடுகிறார். அதனால் அவர்கள் அங்கு பிரச்சனை செய்ய அர்ஜுன் அவர்களிடம் மாமாவை மன்னிப்பு கேட்கும் படி சொல்கிறார். அதற்கு தொழிலாளர்கள் மன்னிப்பு மட்டும் கேட்டால் போதாது நாங்களும் உங்க மாமாவை அடிக்க வேண்டும் என்று கோபத்தில் திட்டுகின்றனர்.

அதற்கு கோபமான அர்ஜுன் அப்படியெல்லாம் செய்ய முடியாது. நாங்க மன்னிப்பு கேட்க மாட்டோம் என்று பிரச்சனை செய்ய அதற்கு தொழிலாளிகள் அப்படி என்றால் இனி எங்களால் இந்த கம்பெனியில் வேலை செய்ய முடியாது என்று சொல்லிவிட்டு அவர்கள் தமிழ் கம்பெனிக்கு சென்று வேலை கேட்க அதற்கு கார்த்திக் உங்களுக்கு இங்கே வேலை கிடைக்காது. ஏற்கனவே இங்க நிறைய பிரச்சனை போயிட்டு இருக்கு நீங்களும் இங்க வந்தா பெரிய பிரச்சனை ஆயிடும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

tamilum saraswathiyum serial 2023 October 2nd episode full update

அதற்கு தமிழ் என்ன பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை இவங்க இங்கேயே இருக்கட்டும். இவங்க எல்லாருமே ரொம்ப அனுபவம் உள்ளவங்க இப்படிப்பட்டவங்களை வேலைக்கு சேர்க்கிறது நம்ம கம்பெனிக்கு தான் நல்லது என்று சொல்கிறார். அதற்கு கார்த்திக்கும் சம்மதம் என்று சொல்கிறார். இதைத்தொடர்ந்து அர்ஜுனிடம் அவருடைய மாமா பரமு நம்ம கம்பெனியில் இருந்து வெளியே போனவங்க தமிழ் கம்பெனிக்கு போயிட்டாங்க என்று சொல்ல, அர்ஜுன் நாம சும்மா நம்ம வேலையை பார்த்துட்டு இருக்கோம். அந்த தமிழ் எதுக்காக இப்படி பண்ணிக்கிட்டு இருக்காரு என்று ராகினி முன்பு நல்லவன் போல நடிக்க ராகினியும் இதையே நம்புகிறார்.

அதைத்தொடர்ந்து வெளியில் நின்று அர்ஜுனும் அவருடைய மாமாவும் தமிழை ஏதாவது செய்யணும் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்க அந்த வழியாக அபி வருகிறார். அவரை கண்டதும் பேச்சை அப்படியே நிறுத்துகின்றனர். மறுபக்கம் அர்ஜுன் கம்பெனியில் இருந்து தங்களுடைய கம்பெனிக்கு வந்து அவர்களை சேர்க்கலாமா வேண்டாமா என்று குடும்பத்தினர் குழப்பத்தில் இருக்க தமிழ் அதெல்லாம் ஒன்னும் இல்ல சேர்த்துக்கலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

tamilum-saraswathiyum-serial-2023-october-5nd-episode-full-update

அதைத்தொடர்ந்து அபி சரஸ்வதிக்கு போன் பண்ணி நடந்த விஷயத்தை எல்லாத்தையும் சொல்கிறார். அது மட்டுமல்லாமல் வீட்டில் அர்ஜுன் மீண்டும் ஏதாவது செய்ய வேண்டும் என்று பிளான் போடுகிறான் என்று சொல்ல அதற்கு தமிழ் அவன் என்ன செய்கிறான் என்று பார்த்துக்கொள்ளலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது கோதைக்கு வாழை மரம் எரிகிறது என்று வசு கத்துவது போன்று கனவு வர அதனால் தூக்கத்தில் இருந்து விழித்து வெளியே வருகிறார். அங்கே தமிழும் தூங்காமல் யோசித்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+