அப்பாவாக போகும் தமிழ்.. அர்ஜுனின் அம்மா கேட்ட கேள்வி.. சந்தோஷத்தில் ராகினி.. செம டுவிஸ்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலின் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரைக்கும் ஆன ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் தமிழ் குடும்பத்தை ராகினியின் வளைகாப்புக்கு வரவைத்து கேவலப்படுத்த வேண்டும் என்று அர்ஜுன் பிளான் போட்டு இருந்தார்.

ஆனால் கடைசி நேரத்தில் தமிழுக்கு இன்ப அதிர்ச்சி கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழ் தன்னை அடித்து அவமானப்படுத்தியதை வைத்து அர்ஜுன் தமிழையும் தமிழ் குடும்பத்தையும் அவமானப்படுத்த வேண்டும் என்று ராகினிக்கு வளைகாப்பு ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தார். ஆனால் ராகினியின் வளைகாப்புக்கு நம்ம வீட்டில் இருந்து யாரும் போகக்கூடாது என்று நடேசனும், தமிழும் கூறி இருந்தனர்.

ஆனால் வீட்டில் ஆண்கள் இல்லாத நேரத்தில் சரஸ்வதி, வசு, கோதை மூவரும் ராகினி அழுது தன்னுடைய ஆசையை சொன்னதால் அவருக்காக கோயிலுக்கு சென்று ராகினியின் வளைகாப்பு விஷயத்தில் கலந்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்திருக்கின்றனர். அதே நேரத்தில் இந்த விஷயத்தை தமிழுக்கு அர்ஜுன் தன்னுடைய ஆள் மூலமாக தெரியப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில் கோதை வளைகாப்பு பங்க்ஷனில் கலந்து கொள்ளக்கூடாது அதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று கம்பெனியில் இருந்து தமிழ், நடேசன், கார்த்தி, நமச்சி என அனைவரும் அவசரமாக கிளம்பி வந்தனர். அதே நேரத்தில் வளைகாப்பு பங்க்ஷனுக்கு வந்த கோதை, வசு, சரஸ்வதியை அர்ஜுன் வரவேற்க அதற்கு சரஸ்வதி அர்ஜுனனை திட்டவும் செய்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் அதில் எல்லோரும் கோவிலில் இருக்கும்போது ராகினிக்கு வளையல் போடுவதற்காக ராகினியின் மாமியார் சம்பந்தி நீங்க வாங்க என்று கோதையை கூப்பிடுகிறார். அதை தொடர்ந்து கோதை நலுங்கு வைத்துங்கு வைத்து முறை செய்ய, பிறகு கோதை சரஸ்வதியை கூப்பிட, அதற்கு எல்லோரும் நலங்குவைங்க ஆனால் சரஸ்வதி மட்டும் நலுங்கு வைக்க கூடாது. அவளுக்கு குழந்தை இல்ல. அவ வச்சு என் பேர குழந்தைக்கு ஏதாவது ஆகிட கூடாது என்று அர்ஜுனனின் அம்மா அவமானப்படுத்துகிறார்.

அதை பார்த்து அர்ஜுன் நக்கலாக சிரித்துக் கொண்டிருக்கிறார். அப்போது கோதை சரஸ்வதி என்னுடைய மருமக, அவ என் மகளுக்கு நலுங்கு வைப்பா என்று சொல்லி கூட்டி வந்து விட அப்போது அர்ஜுனனின் அக்கா நீ சொன்னா கேட்க மாட்டியா? என்று சரஸ்வதியை பிடித்து தள்ளிவிட, அந்த இடத்தில் சரஸ்வதி மயக்கம் போட்டு விடுகிறார். அப்போது ஓடி வந்து தமிழ் என எல்லோரும் பிடித்துக் கொள்கின்றனர்.
அந்த நேரத்தில் அங்கிருக்கும் ஒரு பாட்டி சரஸ்வதியின் கையைப் பிடித்து பார்த்துவிட்டு எல்லாம் நல்ல செய்தி தான். சரஸ்வதி அம்மாவாக போறா என்று சொல்ல எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். நமச்சி தமிழைப் பார்த்து தமிழ் நீ அப்பாவாக போற, நடேசன் அப்பா நீங்க மீண்டும் தாத்தாவாக போறீங்க என்று சந்தோஷப்படுகிறார். இதையெல்லாம் பார்த்து அர்ஜுன் கோபத்தில் நிற்கிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications