சரஸ்வதி கர்ப்பமாக இருப்பது பற்றி ராகினி சொன்ன வார்த்தை.. கோபத்தில் அர்ஜுன்.. கோதை எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் செப்டம்பர் 22ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் சரஸ்வதி கர்ப்பமாக இருப்பது பற்றி மருத்துவமனையில் உறுதி செய்கின்றனர். இந்த நிலையில் சரஸ்வதி கர்ப்பமாக இருப்பது பற்றி ராகினி சந்தோஷப்பட அர்ஜுன் கோபப்படுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் சரஸ்வதிக்கு செக்அப் பண்ணுவதற்காக எல்லோரும் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிருக்கின்றனர். அங்கு தமிழ் சரஸ்வதியை பற்றி டாக்டர் ஏதாவது சொல்லிடுவாரோ என்று பயத்தில் இருக்க அதற்கு கோதை அப்படியெல்லாம் ஒன்னும் இருக்காது எல்லாம் நல்லவிதமாகத் தான் இருக்கும் பயப்பட வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் டாக்டர் வெளியே வந்து சரஸ்வதிக்கு பயப்படுற மாதிரி எதுவும் இல்லை. அவரை நல்லா பாத்துக்கோங்க. கஷ்டமான வேலை எதுவும் செய்யக்கூடாது என்று சொல்கின்றனர். இதைக் கேட்டு குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷப்பட்டு சரஸ்வதியை நல்லா பார்த்துக்கொள்ள வேண்டியது எங்களுடைய பொறுப்பு என்று சொல்கின்றனர்.
மறுபக்கம் அர்ஜுன் குடும்பம் தமிழை எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டதே என்று ஆதங்கத்தில் பேசிக் கொண்டிருக்க, அபி ராகினியை அழைத்து சரஸ்வதி கர்ப்பமாகத்தான் இருக்கிறாங்க. இப்பதான் ஹாஸ்பிடலில் செக் பண்ணி கன்ஃபார்ம் பண்ணி இருக்காங்க என்று சொல்கிறார். அதைக் கேட்டு ராகினி சந்தோஷப்படுகிறார். அத்தோடு என்னுடைய பங்க்ஷனில் வச்சி சரஸ்வதி அண்ணி கர்ப்பமாக இருக்கிறார்கள் என்று சொன்னது என்னால நம்ப முடியல என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
அத்தோடு தன்னுடைய மாமியாரிடம் நீங்க வளைகாப்பு நேரத்துல அண்ணியிடம் நடந்து கொண்டது சரியில்லை. அது எனக்கு வருத்தமாக இருந்தது என்று சொல்ல, அதற்கு அர்ஜுன் குடும்பத்தினர் சம்பிரதாயம் என்று ஒன்று இருக்கு தானே? அதற்காகத்தான் அவங்களை சடங்கு பண்ண வேண்டாம் என்று தடுத்தோம் என்று சமாளிக்கின்றார்.

அதைத் தொடர்ந்து அர்ஜுனன் சரஸ்வதி கர்ப்பமாகியது எனக்கும் சந்தோஷம்தான் என்று ராகினிடம் கூறுகிறார். அந்த நேரத்தில் தமிழ் எல்லோருக்கும் ஸ்வீட் வாங்கி வந்து கொடுத்து கொண்டிருக்கிறார். அப்போது நடேசன் கோதைக்கும் கொடுக்க சொல்லம தமிழ் கொண்டு போய் கொடுக்கிறார். அந்த நேரம் தமிழ் வீட்டுக்கு ஹவுஸ் ஓனர் வர அவரிடமும் விஷயத்தை சொல்ல அவர் சரஸ்வதி ரொம்ப நல்லவங்க அவங்களுக்கு நல்லது நடந்தது பார்த்தீர்களா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு கோத சொத்து நம்ம கையை விட்டுப் போனாலும் புதுசா ஒரு உறவை கடவுள் நமக்கு தந்திருக்காரு என்று நினைக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் தமிழை எதுவும் பண்ண முடியாமல் போச்சே ஆனால் ஒரு நாள் அவனை அவமானப்படுத்தியே தீருவேன் என்று அர்ஜுன் தன்னுடைய மாமாவிடம் புலம்பி கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications