கம்பெனியில் கோதை பெயரை மாற்றிய அர்ஜுன்.. ராகினி சொன்ன எதிர்பாராத பதில்.. பழைய இடத்தில் சரஸ்வதி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் செப்டம்பர் 26ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் கோதையின் கம்பெனியில் அவருடைய பெயரை மாற்றி விட்டு அர்ஜுன் அவருடைய பழைய கம்பெனி பெயரை வைக்கிறார்.

அதைத் தொடர்ந்து வீட்டிலும் அர்ஜுன் எடுத்த முடிவை பார்த்து அதிர்ச்சியில் ராகினி இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோதை சமையல் செய்து கொண்டிருக்கிறார். அதற்காக சரஸ்வதி காய்கறிகளை வெட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது நடேசன் உங்க அத்தை நிறைய நாளுக்குப் பிறகு இப்பதான் சமைக்கிறா. அவளே சமைக்கட்டுமே, நீ எந்த உதவியும் செய்ய வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அங்கு வரும் தமிழ் சரஸ்வதியை வெளியே கூட்டிட்டு போகிறார்.

பிறகு சரஸ்வதியை அவருடைய மெக்கானிக் செட்டில் கொண்டு போய்விட்டு இந்த மாதிரி நேரத்துல அம்மா சிரிச்சு சந்தோஷமா இருந்தா தானே குழந்தையும் சந்தோஷமாக இருக்கும். அதனால தான் உனக்கு பிடிச்ச இடத்திற்கு உன்னை கூட்டிட்டு வந்தேன். நீ இங்கே சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று சொல்லி சரஸ்வதிக்கு மாங்காய் எல்லாம் வாங்கி கொண்டு வந்து கொடுக்கிறார்.
அதைத்தொடர்ந்து ராகினி வீட்டில் அர்ஜுனுடைய அப்பாவுக்கும், அக்காவுக்கும் நினைவு நாள் என்பதால் போட்டோ வைத்து அர்ஜுன் குடும்பத்தினர் பூஜை செய்து கொண்டிருக்கின்றனர். அதில் ராகினியும் கலந்து கொண்டு பீல் பண்ணுகிறார். அப்போது அர்ஜுனின் அம்மா தன்னுடைய கணவரை ஏமாற்றி சொத்தை எல்லாம் வாங்கி விட்டார்களே என்று வழக்கம் போல பழைய கதையை பேசி ராகினியின் மனதை மாற்றுகிறார்.

அப்போது அர்ஜுனின் அக்கா கம்பெனியின் பெயரை மாற்றனும். நம்ம கம்பெனியில் பெயர் லட்சுமி இண்டஸ்ட்ரி என்று தானே இருந்தது. இப்போ கோதை கம்பெனி என்று இருந்தால் அது எப்படி? அதனால அந்த பெயரை மாற்றலாம் என்று சொல்கிறார். அதைக் கேட்டு முதலில் ராகினி அதற்கு மறுப்பு சொல்ல பிறகு அர்ஜுன் குடும்பத்தினர் தொடர்ச்சியாக சென்டிமென்டாக பேசுவதால் பெயரை மாற்றுவதற்கு ஓகே சொல்கிறார்.

ராகினி மனம் மாறியதை தெரிந்துகொண்ட அர்ஜுனின் அம்மா, வீட்டில் மாட்டி இருக்கும் கோதை குடும்பத்தினர் போட்டோவை கழட்ட சொல்ல, அதற்கு அர்ஜுன் ராகினியிடம் அவங்க சொல்றதும் சரிதான். நீ அவங்க போட்டோக்களை பார்த்து கவலைப்படுவது நல்லது இல்லை. அதனால் போட்டோவை கழட்டிடுவோம். இந்த மாதிரி டைம்ல உன்னோட சந்தோசம் தான் முக்கியம் என்று போட்டோவை ஆள் வைத்து கழட்டுகிறார். இதை பார்த்த ராகினி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications