தமிழும் சரஸ்வதியும்: மொத்த குடும்பத்திற்கும் தமிழ் கொடுத்த சர்ப்ரைஸ்.. ரோட்டில் அவமானப்படும் அர்ஜுன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலின் செப்டம்பர் 28ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் தமிழ் மொத்த குடும்பத்திற்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக புது வீட்டிற்கு கூட்டிட்டு போகிறார்.

அதே நேரத்தில் கோதை தமிழ் பற்றி உருக்கமாக பேசுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் மழை வந்துவிட நமச்சியும் கார்த்திக்கும் எழுந்து உள்ளே வருகின்றனர். அப்போது எல்லோரும் எழுந்து விடுகின்றனர். பிறகு கோதை எல்லோருக்கும் டீ கொடுக்க எல்லோரும் சந்தோஷமாக பேசி பாட்டுப்போட்டி வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது எல்லோரும் பாட்டு பாடி கொண்டிருக்கும்போது கோதையும் அவர்களோடு சேர்ந்து பாடுகிறார். அதை எல்லாரும் கிண்டல் செய்து பேசிக் கொண்டிருக்கின்றனர். பிறகு காலையில் விடிந்ததும் தமிழ் பிரியாணி கடையில் சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்து எல்லோருக்கும் சாப்பிட கொடுக்கின்றார். முதலில் எல்லோரும் எதற்காக இப்போ பிரியாணி வாங்கிட்டு வந்தீங்க என்று கேட்க, அதற்கு தமிழ் இன்னைக்கு ஒரு நாள் தானே வெளியே சாப்பிடலாம் என்று எனக்கு தோணுச்சு என்று சொல்லி கொடுக்கிறார்.
இப்போது வசுவிற்கு குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் ஹாஸ்பிடலுக்கு போயிட்டு வசுவும் கார்த்திக்கும் வருகின்றனர். அவர்களும் இவர்களோடு சேர்ந்து சாப்பிடுகின்றனர். அப்போது தமிழ் எல்லோரும் கிளம்பி ரெடி ஆகுங்க நம்ம ஒரு இடத்திற்க்கு போகணும் என்று சொல்ல, எல்லோரும் எங்க போறோம் என்று தமிழிடம் கேட்டுக் கொண்டே இருக்கின்றனர். ஆனால் தமிழ் இன்னும் பத்து நிமிஷத்தில் கிளம்புங்க போய் நான் சொல்றேன் என்று சொல்கிறார்.

பிறகு எல்லாரையும் தமிழ் ஒரு புது வீட்டிற்கு கூட்டிட்டு போகிறார். அந்த வீட்டை பார்த்ததும் நாங்க இந்த வீட்ல இருக்க மாட்டோம். அந்த வீட்டிலேயே எல்லாரும் சேர்ந்து இருப்போம் என்று கோதை, வசு என எல்லோரும் சொல்கின்றனர். அப்போது தமிழ் நீங்க மட்டும் இல்ல நாங்களும் இனி உங்களோடு சேர்ந்து இங்கேயே தான் இருக்கப் போகிறோம் என்று சொல்கின்றார்.
இதைக் கேட்டு எல்லோரும் சந்தோஷப்படுவதோடு வீட்டிற்குள் சென்று வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். அப்போது தமிழ் நமச்சியிடம் உனக்கு ஒரு ரூம் இருக்கு என்று சொல்ல, நமச்சியும் சந்தோஷத்தோடு இவர்களோடு வீட்டை சுற்றி பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது நடேசன் கோதை இடம் வீடு பிடிச்சிருக்கா? என்று கேட்க அதற்கு கோதை ரொம்பவே பிடிச்சிருக்கு. என்னுடைய பையனோட சம்பாத்தியத்தில் வாழ்வது எனக்கு பெருமை தானே என்று பேசிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

அதைத்தொடர்ந்து இவர்கள் எல்லோரும் காரில் வந்து கொண்டிருக்கும்போது எதிரே அர்ஜுன் மற்றும் அவருடைய மாமா வந்து விடுகின்றனர். அவர்களிடம் நீங்க போட்ட ஆட்டம் முடிவுக்கு வரப்போகுது நாங்க புது வீட்டுக்கு போக போறோம். சொந்தமா என் புருஷன் புது வீடு வாங்க போறாரு என்று சரஸ்வதி சொல்ல, அர்ஜுன் என்ன சபதம் போடுறீங்களா? என்று கேட்க, ஆமா சபதம் தான். நான் என் குடும்பம், என் பிள்ளைங்க பேரபசங்க என எல்லோரோடும் சந்தோஷமா தான் இருக்கிறேன். நீ செஞ்ச பாவத்துக்கு எல்லாம் சீக்கிரமா அனுபவிப்ப என்று கோதை சொல்ல, அர்ஜுன் அதிர்ச்சியாகி நிற்கிறார். இப்படியாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications