தமிழும் சரஸ்வதியும்: கதறி அழுத கோதைக்கு தமிழ் கொடுத்த பதிலடி.. அதிர்ச்சியில் அர்ஜுன்.. செம பரபரப்பு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலின் செப்டம்பர் ஐந்தாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் தமிழுக்கு தன்னுடைய அம்மா மற்றும் அப்பா குடும்பத்தை அர்ஜுன் ஏமாற்றியது தெரிந்ததும் கடும் கோபத்தில் இருக்கிறார். அதற்காக அர்ஜுனிடம் தமிழ் சண்டையிட்டு வாக்குவாதம் செய்ய ராகினி தமிழை திட்டுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் அர்ஜுன் சொத்தை ஏமாற்றி ராகினியின் பெயரில் மாற்றி எழுதிவிட்டதால் வீட்டை விட்டு வெளியேறிய கோதை குடும்பம் கோவிலில் இருக்கின்றனர். அப்போது கோதை மட்டும் தனியாக சாமி முன்பு நின்று அழுது கொண்டிருக்கிறார். நான் என்ன பாவம் செய்தேன். நேர்மையாக தானே நடந்தோம். நேர்மையாக நடந்ததால் தானே என்னுடைய பையன் கூட தப்பு பண்ணி இருப்பான் என்று அவனை நான் வீட்டை விட்டு அனுப்பினேன்.
ஆனால் இப்போ என்னுடைய நேர்மையே பொய்யா போச்சு என்று கதறி அழுது கொண்டிருக்கிறார். இத்தனை நாட்களாக கோதை எந்த முடிவு எடுத்தாலும் சரியாக இருக்கும் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் நான் எடுத்த முடிவு இவ்வளவு பெரிய தப்பாக ஆகிவிட்டது என்று அழுது கொண்டு இருக்க சரஸ்வதியும், நடேசனும் சமாதானப்படுத்துகின்றனர்.
அதைத் தொடர்ந்து சரஸ்வதி வாங்க எங்க வீட்டுக்கு போகலாம் என்று கூப்பிட நடேசன் எப்படிமா அங்க வர முடியும். நாங்க வரல என்று சொல்ல, அதற்கு வசுவின் தம்பி எங்க வீட்டுக்கு வாங்க என்று சொல்ல அங்கேயும் போக முடியாது என்று மறுத்து விடுகின்றனர். இதனால் சரஸ்வதி தமிழ் வந்து கூப்பிட்டா வருவீங்க தானே இருங்க என்று அவர்களிடம் சொல்லிவிட்டு தமிழை பார்க்க வேகமாக போகிறார்.
அந்த நேரத்தில் தமிழின் கம்பெனிக்கு வந்த சரஸ்வதி அர்ஜுன் பற்றிய உண்மைகள் எல்லாம் வீட்டிற்கு தெரிய வந்து விட்டதாக சொல்ல நமச்சி சந்தோஷப்படுகிறார். கூடவே உண்மை தெரிந்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. அந்த அர்ஜுன் அத்தனை சொத்து கம்பெனி எல்லாத்தையும் ஏமாற்றி வாங்கி விட்டான் என்று நடந்த விஷயங்களை எல்லாத்தையுமே சொல்லி, இது எல்லாமே ராகினிக்கும் தெரியும் என்று சொல்ல இதைக் கேட்டு தமிழ் அதிர்ச்சி அடைகிறார்.
அதைத்தொடர்ந்து தமிழ் சரஸ்வதியையும் நமச்சியையும் கோவிலுக்கு நீங்க போங்க நான் பின்னாடியே வரேன் என்று சொல்லிவிட்டு அர்ஜுன் வீட்டுக்கு போகிறார். வாசலில் நின்று அர்ஜுன் அர்ஜுன் என்று கத்த, அந்த நேரத்தில் அர்ஜுனுடைய அக்கா அர்ஜுனிடம் தமிழ் கோபத்தில் வந்திருக்கிறார் என்று சொல்ல, அர்ஜுன் வெளியே வந்து பார்க்கிறார். அர்ஜுனை கண்டதும் தமிழ் என் குடும்பத்துக்கும் எனக்கும் ஆயிரம் பிரச்சனை இருக்கும் அதுக்காக நீ அவங்களுக்காக என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் என்று நினைக்காத என்று அடித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் ராகினி வந்து தடுக்க ராணுகினியையும் தமிழ் அதட்டுகிறார். அத்தோடு உன் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டா, நினைத்ததை செய்து முடிச்சுட்டோம்னு சந்தோசமா இருக்காத, இனிமேல் நான் தான் உனக்கு எமன். உனக்கு என் கையால தான் சாவு என்று வார்னிங் கொடுத்து விட்டு செல்ல அர்ஜுன் இதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.
பிறகு கோதை கோவிலில் இருக்க அங்கு சரஸ்வதி நமச்சியோடு வந்ததை பார்த்ததும் தமிழ் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டானா? என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்க அந்த நேரத்தில் தமிழ் வந்து நிற்கிறார். நேத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications