தமிழால் அர்ஜுனுக்கு வந்த ஆபத்து.. கோதைக்கு கிடைத்த அரவணைப்பு.. கோபத்தில் ராகினி சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலின் செப்டம்பர் ஐந்தாம் தேதி முதல் 9ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

இதில் வீட்டை விட்டு வெளியேறிய கோதைக்காக அர்ஜுனிடம் தமிழ் சண்டை போடுகிறார்.

tamilum saraswathiyum serial 5th to 9th September 2023 promo full update

அதைத் தொடர்ந்து தன்னை வீட்டைவிட்டு வெளியேற்றிய அம்மா தற்போது பிரச்சினையில் இருப்பதால் அம்மாவுக்காக தமிழ் மனம் மாறுகிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அடுத்தடுத்த பல ரகசியங்களும் திருப்பங்களும் வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே அர்ஜுன் யார் என்பது பற்றி தெரியாமல் இருந்த கோதைக்கு அர்ஜுன் பற்றிய மொத்த ரகசியங்களும் தெரிய வந்திருக்கிறது.

tamilum saraswathiyum serial 5th to 9th September 2023 promo full update

தமிழ் அர்ஜுனை கொலை செய்ய முயற்சி செய்யவில்லை. அர்ஜுனை காப்பாற்ற தான் செய்து இருக்கிறார் ஆனால் அர்ஜுன்தான் தன்னிடம் ஏமாற்றி குடும்பத்தை பிரிக்க வைத்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்ட கோதை மற்றும் நடேசன் அர்ஜுனை வீட்டை விட்டு வெளியே போ என்று திட்ட அந்த நேரத்தில் வீடு மட்டுமல்லாமல் மொத்த சொத்துகளும் ஏற்கனவே ராகினி பெயரில் மாத்தியாச்சு என்று அர்ஜுன் சொல்ல மொத்த குடும்பமும் அதிர்ச்சடைந்து இருக்கின்றனர்.

அதே நேரத்தில் மொத்த உண்மையையும் ஏற்கனவே ராகினிக்கு தெரியும் என்பதை தெரிந்ததும் கோதை அதிர்ச்சியாகி என்னுடைய வளர்ப்பு தப்பாக போய்விட்டதே என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் இந்த நம்பிக்கை துரோகம் செய்பவர்களோடு நாம் இனி இருக்க வேண்டாம் என்று கோதை வீட்டை விட்டு வெளியேற கோதையோடு அவருடைய மொத்த குடும்பமும் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறது.

tamilum saraswathiyum serial 5th to 9th September 2023 promo full update

இந்த உண்மைகள் அனைத்தும் சரஸ்வதி மூலமாக தமிழுக்கு தெரிந்ததும் அர்ஜுன் வீட்டிற்கு தமிழ் போகிறார். அங்கு அர்ஜுனனின் சட்டையை பிடித்து இழுத்து எங்க அப்பா கஷ்டப்பட்டு சம்பாதிச்ச சொத்தை ஏமாற்றலாம் என்று நினைக்கிறாயாடா? என கேட்கிறார். பிறகு உன் உயிரை எடுக்கிறேன் என்று கூறி அங்கிருந்த பூச்சாடியை தூக்கி அர்ஜுன் தலை மேலே போடப் போகிறார்.

அப்போது அங்கு வந்த ராகினி அண்ணா என்று கத்த, பிறகு பூச்சாடியை கீழே போட்ட தமிழ் அர்ஜுனிடம், அவங்க என் கூட இல்லை என்றாலும் அது என் குடும்பம். அவங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நான் வந்து நிற்பேன். கேள்வி கேட்பேன், என்று கூறிவிட்டு அங்கிருந்து கோபத்தில் போகிறார்.

tamilum saraswathiyum serial 5th to 9th September 2023 promo full update

இதைத்தொடர்ந்து கோவிலில் கோதையின் குடும்பம் அனைவரும் இருக்க அங்கு வந்த தமிழ் "என்ன இங்க உட்கார்ந்துட்டு இருக்கீங்க. என் நினைப்பு உங்களுக்கு வரலையா? நான் உயிரோட தானே இருக்கேன்? நான் என்ன செத்தா போயிட்டேன்? எல்லாரும் கிளம்பி வாங்க போகலாம் என்று எல்லோரையும் தன்னோடு வருமாறு அழைக்கிறார். இப்படியாக பிரமோ வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இனி அர்ஜுனை எதிர்த்து தமிழ் உடைய மொத்த குடும்பமும் நிற்கப் போகிறது. அதே நேரத்தில் ராகினிக்கும் உண்மைகள் எப்போது தெரியும் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+