தமிழும் சரஸ்வதியும்: அர்ஜுன் பற்றி கோதைக்கு தெரிய வந்த உண்மை.. இனி ராகினி நிலை? பரபரப்பான திருப்பம்
சென்னை: விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முக்கியமான தருணம் வந்திருக்கிறது.
இத்தனை நாட்களாக அர்ஜுன் நல்லவன் என்று நம்பிக் கொண்டிருந்த கோதைக்கு அர்ஜுன் பற்றி மொத்த உண்மையும் தெரிய வருகிறது.

அதே நேரத்தில் இனி தமிழுக்கு எதிராக அர்ஜுன் செய்யும் செயல்களை கோதை தானே கண்டுபிடிக்க போவதாக சொல்லி இருக்கிறார்.
இந்த நிலையில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரைக்கும் ஆன ப்ரோமோ வெளியேறி இருக்கிறது. அதைத் தொடர்ந்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.
விஜய் டிவியில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த சீரியல்களில் தமிழும் சரஸ்வதியும் சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலிலும் அடுத்தடுத்த பல எதிர்பாராத திருப்புங்கள் அட்டகாசமாக வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்த சீரியலில் கதை வேகம் எடுத்து இருக்கிறது. இந்த நிலையில் இன்றைய புரோமோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த வகையில் தற்போது வெளியான ப்ரோமோவில் சரஸ்வதி செய்த வேலையால் அர்ஜுன் பற்றிய ரகசியங்களை கோதை தெரிந்து கொள்கிறார். அதனால் தன்னுடைய கணவர் நடேசனிடம் அப்போ அந்த அர்ஜுன் இத்தனை நாளா நல்லவனா நடிச்சு நம்மளை ஏமாத்திட்டு இருந்திருக்கான். அர்ஜுன் தான் தமிழை திட்டம் போட்டு மாட்டிவிட்டு இருக்கான்.
அர்ஜுன் கெட்டவன். அவ மேல தான் தப்பு இருக்குன்னு நான் இப்பதான் முழுசா நம்புறேன். இத்தனை நாளா நீங்க முயற்சி பண்ணுனீங்க. இனிமே நானே நேரடியா இறங்குறேன். அர்ஜுன் உடைய முகமூடியை நானே கழட்டி வீசுறேன் என்று அதிரடியாக கோதை பேசுவதை கேட்டு நடேசன் என்ன பேசுவது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்.

ஏற்கனவே ராகினி தன்னுடைய கணவர் அர்ஜுனை சொத்துக்காகவும் பதவிக்காகவும் தமிழ் கொலை செய்ய வந்து விட்டான் என்று அர்ஜுன் சொன்னதை நம்பி ஒவ்வொரு முறையும் தமிழ் மற்றும் சரஸ்வதியை அசிங்கப்படுத்திக் கொண்டே இருக்கிறார். இந்த நிலையில் இனி தன்னுடைய மகனை புரிந்து கொண்ட அம்மாவால் அர்ஜுன் மாட்ட போகிறாரா? அல்லது இப்போதும் ராகினியை வைத்து அர்ஜுன் புது நாடகம் போடப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
அதே நேரத்தில் இந்த சீரியலில் முக்கியமான திருப்பங்கள் வந்திருப்பதால் இந்த சீரியல் முடிவடைய போகிறதா? என்று பலர் கேள்வி எழுப்பி கொண்டிருக்கின்றனர். சீரியலில் எதிர்பாராத அடுத்தடுத்த திருப்பங்களும் சீரியலுக்கு வேகம் கூட்டி இருந்தாலும் ஒருவேளை இது முடிவடைந்து புது சீரியல் வருவதற்கான காரணமாக இருக்குமோ என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications