தமிழும் சரஸ்வதியும் மேக்னாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. மாப்பிள்ளை யார் தெரியுமா? சூப்பர் ஜோடி
சென்னை: விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி என்று பல சேனல்களின் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை அக்ஷிதாவிற்கு இன்று எங்கேஜ்மென்ட் முடிவடைந்து இருக்கிறது. அது குறித்த புகைப்படங்களை அக்ஷிதா வெளியிட அது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு அக்ஷிதாவிற்கு வாழ்த்துக்கள் குவிக்கிறது.
நடிகை அக்ஷிதா சின்னத்திரை ரசிகர்களுக்கு அதிகமாக பரிச்சயமானவர்தான். சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியல், சுமங்கலி சீரியலில் இவர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து இவருக்கு அதிகமான பிரபலத்தை கொடுத்தது என்றால் அது "கண்ணான கண்ணே சீரியல்" தான். இந்த சீரியலில் கதாநாயகிக்கு இணையாக இவரும் அதிகமாக பாராட்டப்பட்டு இருப்பார்.

அதுவும் கதாநாயகிக்கு தங்கையாக இவர் நடித்து பலருடைய மணங்களை கவர்ந்திருந்தார். அந்த சீரியலில் இவர் "ப்ரீத்தி" என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அந்த கேரக்டர் மூலமாக இவர் அதிகமாக பிரபலம் அடைந்திருந்தார். அந்த சீரியலில் அக்கா மீது உள்ள பாசம், அப்பாவையும் அக்காவையும் பேச வைப்பதற்காக இவர் படும் கஷ்டங்கள் என கிடைக்கும் இடங்களில் எல்லாம் தன்னுடைய நடிப்பை ஸ்கோர் செய்திருந்தார்.
அந்த சீரியல் முடிவடைந்ததும் அதைத்தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் சீரியலில் சீதாவின் அக்காவாக நடித்திருக்கிறார். ஆனால் சமீபத்தில் அவருடைய காட்சிகள் அதிகமாக காட்டப்படவில்லை. அது அவருடைய ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்திருக்கிறது. அதே நேரத்தில் இவர் விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மேக்னாவாக நடித்திருந்தார்.

இவர் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடிக்க தொடங்கிய ஆரம்பத்திலேயே இவருக்காக சீரியலை பலர் அந்த சீரியலை பார்ப்பதாக கூறி வந்தனர். ஆனால் ஒரு சில மாதங்களில் இந்த சீரியலில் அவர் கொலை செய்யப்படுவது போல காட்சிகள் வைத்து விட்டனர். அதற்குப் பிறகு இப்போது இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
அதாவது தனக்கு இன்று எங்கேஜ்மென்ட் ஆகிவிட்டது என்று ரசிகர்களுக்கு தெரிவித்திருக்கிறார். அதோடு தன்னுடைய என்கேஜ்மென்ட் புகைப்படங்களை தன்னுடைய ஸ்டோரியில் பகிர, அது அதிகமான லைக்கள் மற்றும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக சில மாதங்களாகவே இவர் அடிக்கடி சுற்றுலா செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வந்தார்.

இந்த நிலையில் இன்று திடீரென்று இவருக்கு எங்கேஜ்மென்ட் என்பதை கேட்டு அதிர்ந்து போன ரசிகர்கள் என்ன "இதை சொல்லவே இல்லையே" என்று கேட்டு வருகிறார்கள். அதேபோல இவருடைய வருங்கால கணவரும் பாப்புலரானா நடிகர் தான். பெங்களூரை சார்ந்த பிரீத்தம் சுரேஷ் என்பவரோடு தான் இவருக்கு எங்கேஜ்மென்ட் முடிவடைந்து இருக்கிறது. அதோடு பிரீத்தம் சுரேஷ் தன்னுடைய சமூக வலைத்தள ப்ரொபைலில் அவர் ஒரு எக்சிடியூடிவ் ப்ரொடியூசர் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நிலையில் இந்த தம்பதிகளுக்கு நம்முடைய வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

-
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட் -
மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? -
திமுக ஆட்சியில் நடந்தது.. இப்போ தொடருது! விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுங்க! துரை வைகோ ஒரே போடு! -
பரந்தூர் திட்டம் கைவிடப்படுகிறதா? விமான நிலையத் திட்டத்தில் அதிரடி திருப்பம் - விஜய் புதிய வியூகம்! -
கோவையன்ஸ் ஓட்டு மட்டும் போதுமா? மதுரையை மறந்த விஜய்! கொந்தளிப்பில் ’சவுத்’ மக்கள்! என்னாச்சு? -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
ஆல் ஏரியாலயும் அய்யா கில்லி.. கர்நாடகாவை அதிர வைத்த விஜய் பயணம்! தேசிய அரசியலுக்கு தொடக்கப் புள்ளி? -
விஜய்யின் பெயரை கூட தவறாக சொன்ன கர்நாடகா அமைச்சர்.. இப்படி செய்வாருனு யாரும் எதிர்பார்க்கலை -
சிறகடிக்க ஆசை: பட்டும் திருந்தாத விஜயா.. அசிங்கப்படுத்தும் மனோஜ்! முத்துக்கு வெற்றி மேல் வெற்றி.. செம சம்பவம்












Click it and Unblock the Notifications