தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஏன் இந்த குழப்பம்? நல்லவங்களா இருக்கலாம் அதுக்குன்னு இப்படியா சரஸ்வதி?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ராகினி கோர்ட்டில் என்னுடைய அம்மாவும் அப்பாவும் மனசார விருப்பப்பட்டு தான் எனக்கு சொத்தை எழுதி தந்தாங்க. அதனால நான் இனி அவங்களுக்கு இதை திருப்பிக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லி விடுகிறார்.
அதே நேரத்தில் அர்ஜுன் குடும்பத்தினர் ராகினி சொன்ன வார்த்தையை கேட்டு சந்தோஷப்படுகின்றனர். ஆனால் கோதை குடும்பத்தினர் எல்லோரும் கோபப்படுகின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோர்ட்டில் ராகினி அப்பாவும் அம்மாவும் விருப்பப்பட்டு தான் எனக்கு சொத்து எழுதி கொடுத்தாங்க, அதனால திருப்பி கொடுக்க மாட்டேன் என்று சொல்ல அதற்கு நீதிபதி சரிதம்மா இப்போ உங்க அண்ணன் சொத்து கேக்குறாங்களே அதுக்கு என்ன பதில் சொல்ல போறேன்னு கேட்க, அதற்கு ராகிணி அண்ணன் தான் ஒரு பெரிய கம்பெனி வச்சிருக்காரு, அதுல தான் சின்ன அண்ணன் கார்த்தி ஜி எம் டியா இருக்காரு.
அப்புறம் அவங்க வசதியா தான இருக்காங்க எதுக்காக நான் சொத்தை எழுதிக் கொடுக்கணும் என்று பேச ராகினி பேசுவதை கேட்டு கோதைக்கு பயங்கரமாக கோபம் வருகிறது. அதோடு கார்த்தி, நடேசன், தமிழ் என எல்லோரும் கோபப்படுகின்றனர். நீதிபதி இந்த கேஸை தள்ளி வைக்கிறேன் என்று சொல்லிவிட்டு வெளியே வருகிறார். நடேசன் கோதியிடம் என் பொண்ணுன்னு சொன்னியே இப்ப எப்படி முதுகுல குத்துனா பாத்தியா என்று திட்டுகிறார்.
அதற்கு கோதை ராகினி வெளியே வரும்போது நில்லுடி என்று நிற்கவைத்து எங்களுடைய உறவு வேண்டும் என்று நீ சொல்லிக்கிட்டு இருந்தல்ல, இன்னைக்கு நான் சொல்றேன் இனிமேல் உன் உறவும் வேண்டாம், ஒட்டும் வேண்டாம் இதுக்கு மேல நீ எனக்கு பொன்னே கிடையாது... ஏன் நீ என் வயித்துல தான் பிறந்தியா? என்று பயங்கரமாக திட்டுகிறார்.
மறுபக்கத்தில் அர்ஜுன் குடும்பத்தினர் எல்லோரும் பதட்டத்தில் இருக்கிறார்கள். சொத்தை எழுதி கொடுத்துட்டாளா? இல்லையா? என்று குழப்பத்தில் இருக்கும்போது அர்ஜுனும் அர்ஜுனன் மாமா பரமும் வந்து சொத்தை எழுதிக் கொடுக்கல நம்ம எதிர்பார்த்தபடி ராகினி சரியான பதிலடி கொடுத்துட்டா என்று சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க ராகினி சோகமாகவே இருக்க இருக்கிறார்.
அதற்கு அதோடு அம்மா இப்படி சாபம் விடுற மாதிரி பேசினதே கிடையாது. ஆனா இப்போ முதல் முறையா பேசிட்டாங்க என்று ஃபீல் பண்ணுகிறார். மறுபக்கத்தில் கோதை வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது ராகினியை நம்புனது ரொம்ப தப்பா போச்சு. அவ இப்படி ஏமாத்திட்டாளே என்று பேசிக் கொண்டிருக்கும் போது தமிழ் அடுத்து வளைகாப்பு வேலையை பார்க்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்க சரஸ்வதி வளைகாப்புக்கு ராகினியையும் கூப்பிடலாம் என்று சொல்லுகிறார்.
அதற்கு எல்லோரும் முடியாது என்று மறுக்கின்றனர். பிறகு சரஸ்வதி இது என்னுடைய பங்க்ஷன் தானே? நான் சந்தோஷமா இருக்கணும்னு நடத்துறதா இருந்தா கண்டிப்பா நீங்க ராகினியும் கூப்பிடனும் அப்பதான் நான் சந்தோஷப்படுவேன் என்று சொல்ல வேறு வழியில்லாமல் கோதையும் தமிழும் ராகினி வீட்டிற்கு போகின்றனர். அப்போது வாசலில் அபி அவர்களை வரவேற்க, அர்ஜுன் அம்மா எங்கே வந்தீங்க நில்லுங்க என்று கத்திக் கொண்டிருக்கிறார். இப்படியாத இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
மரியான் பட நடிகர் சலீம் குமாரின் மறைவால் உருகிய 'கருப்பு' நடிகை சிவதா.. கலங்க வைத்த பதிவு -
"விஜய் ஜெயிச்சதும் வீட்டிலேயே ஷாக் கொடுத்த குடும்பம்”... போஸ் வெங்கட் சொன்ன ஓபன் ஸ்டேட்மென்ட் -
மகனின் 2வது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. பாராட்டு குவியுது -
தன் உயரத்திற்கு அரிவாள் காணிக்கை... கருப்பசாமி கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன? -
ஆண் பாவம் பாண்டியனின் சோகமான மறுபக்கம்.. பிரபல நடிகரை வீழ்த்திய "பந்தய குதிரை".. நடந்தது என்ன -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications