அம்மா தான் இப்படின்னா தங்கச்சியுமா? தமிழின் வீட்டிற்கே வந்து அதிர்ச்சி கொடுத்த ராகினி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வரும் 27 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரைக்கும் ஆன ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் அர்ஜுனை ஜாமினில் எடுத்த ராகினி தமிழின் வீட்டிற்கே வந்து தமிழை தன்னுடைய வீட்டிற்கு கூப்பிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே தமிழுக்கு தெரியாமல் கோதை அர்ஜுன் ஜெயிலில் இருந்து வெளியே வருவதற்கு உதவி செய்திருக்கும் நிலையில் இப்போது ராகினியும் தமிழை வீட்டிற்கு கூப்பிட்டு இருப்பதால் இதில் என்ன சிக்கல் இருக்கப் போகிறது என்று விரிவாக பார்ப்போம்.

அந்த வகையில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் சமீப காலமாகவே யாரும் எதிர்பார்க்காத பல அடுத்தடுத்த திருப்பங்கள் வந்து கொண்டு இருக்கிறது. ஏற்கனவே மேக்னாவின் அறிமுகத்தால் சீரியலின் கதை இனி எப்படி போகப்போகிறதோ என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். ஒரு பக்கத்தில் மேக்னா தமிழுக்கு உதவி செய்வதை பார்க்கும்போது நன்றாகத்தான் இருக்கிறது.
ஆனால் தமிழை ஒருதலையாக காதலித்துக் கொண்டிருப்பதால் இனி சரஸ்வதியின் நிலைமை என்னாகும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுபோல சரஸ்வதிக்கும் இப்போது தமிழும் மேக்னாவும் நடந்து கொள்ளும் விதம் மன கஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு மேக்னா அதிகமாக தமிழுக்கு செய்யும் செயல்களை பார்த்து வசு சந்தேகப்படுகிறார்.

இப்படியான நிலையில் இத்தனை நாட்களாக தமிழுக்கு பிரச்சனை கொடுத்துக் கொண்டிருந்த அர்ஜுனை தமிழும் மேக்னாவும் போலீசில் பிடித்துக் கொடுத்திருந்தனர். ஆனால் தன் மகள் மீது இருந்த பாசத்தில் தன்னுடைய நேர்மையை தவறி கோதை வக்கீல் உதவியோடு அர்ஜுனை வெளியே கொண்டு வந்திருக்கிறார். அதே நேரத்தில் அது பற்றி கார்த்திக் கோதையிடம் கேள்வி கேட்க அதற்கு தமிழ் தன் அம்மா மீது தனக்கு இருக்கும் நம்பிக்கையை சொல்லி கோதையை அதிர்ச்சி அடைய வைத்திருந்தார்.

இப்படியான நிலையில் தற்போது புது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தமிழ் வீட்டிற்கு ராகினி தயங்கியபடி வந்து நிற்க சரஸ்வதி ராகினியை வீட்டிற்குள் கூப்பிடுகிறார். அப்போது ராகினியை கார்த்திக் மற்றும் ராகினியின் அப்பாவும் திட்டி வெளியே போக சொல்கின்றனர். அதற்கு ராகினி நான் என்னுடைய குழந்தைக்கு பெயர் சூட்டு விழா வைத்திருக்கிறேன்.

அங்கு அம்மாவும் அண்ணனும் வந்து தான் என் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்று சொல்லி, கண்ணீரோடு அண்ணா நீங்க வருவீங்களா? என்று கேட்டதற்கு தமிழ் கண்டிப்பா வருகிறேன். நீ போய்ட்டு வா என்று சொல்கிறார். இந்த நிலையில் இனி தமிழ் அர்ஜுன் வீட்டிற்கு போகும்போது அடுத்து என்ன பிரச்சனையில் சிக்க இருக்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications