தமிழை அழிக்க அர்ஜுனுக்கு கோதையே செய்த உதவி.. ராகினி கேட்ட கேள்வி.. உடைந்த குடும்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் டிசம்பர் 30ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் கோதை தன்னுடைய குடும்பத்திற்கு தெரியாமல் அர்ஜுன் ஜெயிலிலிருந்து வெளியே வருவதற்கு உதவி செய்து இருக்கிறார்.
ஜெயிலில் இருந்து வந்த அர்ஜுன் வழக்கம் போல தமிழை பழி வாங்குவதற்காக அடுத்த பிளானை தீட்டி இருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் தமிழின் வக்கீல் இடம் கோதை தமிழ் மற்றும் கார்த்திக்கு தெரியாமல் பேசி அர்ஜுனுக்கு ஜாமீன் கிடைக்க திட்டம் போடுகிறார். அதனால் அர்ஜுனுக்கு ஜாமீன் கிடைத்து விடுகிறது. ஜாமீன் கிடைத்து அர்ஜுன் வெளியே வந்து விடுகிறார். இதை கேட்டு தமிழ், கார்த்தி, நமச்சி மூவரும் அதிர்ச்சியாகி கம்பெனியில் நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது எப்படி ஜாமீன் கிடைத்திருக்கும்?... எப்படி? என்று தெரியவில்லையே என்று எல்லோரும் மாறி மாறி குழப்பத்தில் இருக்கின்றனர். அப்போது நமச்சி ஒருவேளை அந்த வக்கீல் நமக்கு தெரியாம அவன் பக்கம் சாய்ந்து விட்டாரா? அதனால நமக்கு சதி செய்கிறாரா என்று கேள்வி எழுப்புகிறார். ஆனால் கார்த்தி இதில் ஏதோ குழப்பம் இருக்கிறது கண்டிப்பா யாரோ ஹெல்ப் பண்ணி இருக்காங்க அதை கண்டுபிடிக்கிறேன் என்று பேசிக் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த சமயத்தில் அர்ஜுனும் அவருடைய மாமாவும் ஆட்டோவில் வந்து அங்கு இறங்குகிறார். இவர்களை பார்த்ததும் தமிழ் மற்றும் கார்த்திக் எதற்காக இவன் இங்கே வந்தான் என்று கேட்கிறார்கள். அதற்கு அர்ஜுன் நான் வெளியே வர மாட்டேன்னு நினைச்சீங்களா? என்று நக்கல் செய்ய அதற்கு கார்த்தி கடுப்பாகி அடிக்க கை ஓங்குகிறார். அப்போது தமிழ் கார்த்தியை தடுத்து நிறுத்தி விடுகிறார்

அடுத்த கட்டத்தில் ராகினியிடம் கோதை தமிழுக்கும் கார்த்திக்கும் தெரியாமல் அர்ஜுனை வெளியே எடுத்தது குற்ற உணர்ச்சியாக இருக்கிறது என்று போனில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ராகினி இதுக்கு எப்படி நான் நன்றி சொல்வது என்று தெரியவில்லை என்று அம்மாவிடம் பேசிக்கொண்டு ஃபோனை கட் பண்ணி வைக்க அப்போது அங்கு அர்ஜுன் வருகிறார்.
ராகினியை பார்த்ததும் அர்ஜுன் ராகினிடம் ரொமான்ஸ் பண்ண நெருங்க அதற்கு ராகினி பிடித்து தள்ளுகிறார். அதனால் அர்ஜுன் என்ன ஆச்சு ஏன் சோகமா இருக்கிறாய் என்று கேட்க, அதற்கு ராகினி தமிழ் அண்ணாவுக்கும் கார்த்திக்கும் தெரியாம தான் அம்மா உங்களை வெளியே எடுக்க உதவுனாங்க. ஆனா நீங்க அவங்கள பெயர் சூட்டு விழாவுக்கு கூப்பிடாதேன்னு சொல்லிட்டீங்களே என்று வருத்தப்படுகிறார்.

அதற்கு அர்ஜுன் நீ உங்க அம்மா அப்பா எல்லாரையும் பெயர் சூட்டு விழாவுக்கு கூப்பிடு என்று பெர்மிஷன் கொடுத்து விட்டு கோதை தான் என்னை வெளியே எடுத்ததுன்னு தமிழுக்கு தெரியாதா? இது செம மேட்டரா இருக்கு.. இதை வச்சி ஒரு கேம் விளையாடுவோம் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைந்தது.
-
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications