சரஸ்வதிக்காக சாட்சி சொல்ல வந்த நபர்.. கோர்ட்டில் நடந்த செம டுவிஸ்ட்..மாட்டிக்கொண்ட கலிவரதன், அர்ஜுன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் பிப்ரவரி 16ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் சரஸ்வதியை காப்பாற்றுவதற்கு வழியே தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த தமிழுக்கு ஒரு நபர் உதவி செய்திருக்கிறார். அதனால் கலிவரதன் கோர்ட்டில் மாட்டி இருக்கிறார்.
சரஸ்வதி ஜெயிலில் இருந்து வெளியே வர முடியாது என்று நினைத்திருந்த அர்ஜுனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கிடைக்கிறது. இந்த நிலையில் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடைபெற்றது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் தமிழ் மேக்னாவை கொலை செய்த இடத்திற்கு சென்று அங்கிருந்து குப்பைகளை கிளறி பார்த்து எந்த எவிடென்ஸும் கிடைக்காததால் அழுது கொண்டிருக்கிறார்கள். சரஸ்வதியை என்னால காப்பாற்ற முடியல என்று அழுது புலம்பி கொண்டிருக்கிறார். அப்போது ஒரு வயதானவர் உனக்கு நல்ல வழி பிறக்கும் என்று கூப்பிடுகிறார்.
அதோடு கொஞ்ச நாளைக்கு முன்னாடி இங்க கொலை நடந்தது அவங்க உங்களுக்கு வேண்டப்பட்டவர்களா என்று கேட்கிறார். அதற்கு தமிழ் ஆமாங்கய்யா கொலையை யாரோ செஞ்சுட்டு என் பொண்டாட்டி மேல பழியை போட்டுட்டாங்க என்று சொல்ல அதற்கு அந்த நபர் யார் அந்த கர்ப்பிணி பொண்ணா என்று கேட்கிறார். அதற்கு தமிழ் ஆமாம் ஐயா என்று சொல்ல உடனே அந்த நபர் அன்னைக்கு நடந்த நிகழ்வுகளை சொல்கிறார்.
ஒரு 50 வயது அம்மாவும் ஒரு இளம்பெண்ணும் ஓடி வந்தாங்க. அவங்கள ஒரு 50 வயது நபரும் ஒரு இளம் பையனும் துரத்திட்டு வந்தாங்க முதலில் அந்த அம்மாவை கொன்னுட்டாங்க. அய்யோ அம்மா என அந்த பாப்பா அழுகுது உடனே அந்த பாப்பாவையும் கொன்னுட்டாங்க அதே சமயத்தில் இன்னொரு கார் வந்துருச்சு உங்களை நம்புனது பிரயோஜனமே கிடையாது என்று சொல்லிட்டு கிளம்பிட்டாங்க. பிறகு தான் அந்த கர்ப்பிணி பெண் ஓடிவந்து காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு சொன்னாங்க.
ஆனா அதற்குள் அந்த ரவுடி பசங்க ஓடிட்டாங்க பிறகு கம்பெனியிலிருந்து நிறைய பேரு வந்து அடப்பாவி கர்ப்பிணியாக இருந்துட்டு இப்படி ரெண்டு கொலை பண்ணிட்டேன்னு சொன்னாங்க. ஆனா அந்த குரல் கிடையாது என்று அந்த நபர் சொல்லிக் கொண்டிருக்க அதற்கு தமிழ் இதை நீங்க கோர்ட்டில் வந்து சொல்ல முடியுமா என்று கேட்க அந்த நம்பர் எனக்கு கண்ணு தெரியாது எனக்குனு யாருமே கிடையாது.
ஒரு பொண்ணோட வாழ்க்கையை காப்பாற்றுவது நான் செஞ்ச புண்ணியம் தான் நான் வந்து சொல்றேன் என்று சொல்கிறார். அடுத்த நாள் காலையில் கோர்ட் வாசலில் காத்துக் கொண்டிருக்க அப்போது அர்ஜுன் மற்றும் கலிவரதன் கெத்தாக நிற்கிறார்கள். அதோடு சரஸ்வதியை பார்த்து தமிழ் பேசிக் கொண்டிருக்கிறார். அதை தொடர்ந்து கோர்ட்டில் கேஸ் விசாரணைக்கு வருகிறது.
அப்போது எதிர் தரப்பு வக்கீல் வாதாடி சரஸ்வதிக்கு அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூற தமிழ் தரப்பு வக்கீல் வாதாட ஆரம்பிக்கிறார். அப்போது எங்களிடம் ஒரு சாட்சி இருக்கிறது என்று கூற அதற்கு கேட்டு அர்ஜுன் மிரண்டு போயிருக்கிறார். அதோடு வந்த வயதானவர் கண்ணு தெரியாதவர் அவர் சாட்சி சொல்லும்படி ஆகாது என்று எதிர்தரப்பில் வக்கீல் கூறுகிறார்.
ஆனால் அவர் சொல்வதை கேளுங்கள் என்று தமிழ் நீதிபதியிடம் கேட்க நீதிபதி சம்மதம் தெரிவிக்க அந்த வயதானவர் நடந்தவற்றை அங்கு சொல்கிறார். அதோடு அங்கு நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் தான் ஒரு டேப்ரிக் ரெகார்ட் செய்து வைத்தேன் என்று அதையும் ஜட்ஜ்மெண்ட் போட்டு காட்டுகிறார்கள்.

அது மட்டும் அல்லாமல் சில நபர்களை விசாரித்தால் உங்களுக்கே உண்மை தெரியும் என்று அங்கிருந்தவர்களை குரலை கரெக்டாக அடையாளம் காட்டுவார் என்று தமிழ் சொல்ல அது போல் நான்கு பேரை அழைத்து பேச சொல்ல அப்போது கலிவரதன் மற்றும் அவருடைய மகன் பேசும்போது இவர்கள்தான் அந்த நபர் என்று அடையாளம் காட்டி விடுகிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைந்தது.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications