மேக்னா போனதும் ரோகினியால் வரும் பிரச்சனை? ரசிகர்கள் சொன்னது போலவே நடந்தது! முடிவு இதுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் பிப்ரவரி 26 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். ஏற்கனவே மேக்னா பிரச்சனை முடிவுக்கு இப்போதுதான் வந்திருக்கிறது. அதை தொடர்ந்து ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே தமிழ் மற்றும் அர்ஜுன் கம்பெனி பிரச்சனை மட்டும்தான் இனி பயணிக்க இருக்கிறது. இந்த நிலையில் இன்று அர்ஜுன் சொன்ன பொய்யை நம்பி தமிழ் வீட்டிற்கு வந்து ரோகிணி சண்டை போட்டிருக்கிறார்.
அதே நேரத்தில் வழக்கம் போல தமிழும் தமிழ் உடைய குடும்பமும் ரோகிணிக்காக அர்ஜுனை மன்னித்து விட்டிருக்கின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கார்த்திக் கம்பெனியில் செய்த புதிய மாற்றத்தால் டெலிவரி செய்யாமல் போனதை வைத்து தமிழ் கோபப்பட்டு கார்த்திக்கை அனைவர் முன்பும் வைத்து திட்டுகிறார். அதனால் கார்த்தி வீட்டில் வந்து தன்னுடைய கோபத்தை காட்ட அங்கு நடந்த விஷயத்தை நமச்சி வீட்டில் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து தமிழ் வீட்டில் எல்லாரிடமும் சொல்லிட்டியா? நீ படிச்சும் உனக்கு பக்குவமே இல்லன்னு அம்மா சொல்ற மாதிரி தான் இருக்கு என்று திட்டுகிறார். அப்போது எல்லோரும் ஏன் திட்டுற என்று கேட்க அதற்கு இவனை திட்டாம பின்ன கொஞ்ச சொல்றீங்களா என்று கம்பெனியில் நடந்த விஷயங்களை எல்லாவற்றையும் தமிழ் சொல்கிறார். அடுத்த கட்டத்தில் அர்ஜுன் கோபமாக வீட்டிற்கு வருகிறார்.
அப்போது எல்லாமே போச்சு என்று அவர் புலம்பி கொண்டிருக்கிறார். அதோடு இனிமேல் கம்பெனிக்கு போய் என்ன பண்ணுறது? வீட்டிலேயே உட்கார்ந்து விடலாம் என்று பேச அதற்கு ராகினி என்ன ஆச்சு என்று கேட்கிறார். அதற்கு அர்ஜுனோடு சேர்ந்து பரமுவும் கத்திக் கொண்டிருக்கிறார். உங்க அண்ணன் நமக்கு கிடைச்ச ஆர்டரை படிச்சிட்டாரு என்று ராகினியிடம் பொய் சொல்கின்றனர்.
அப்போது அங்கு வரும் அபி தமிழ் அண்ணா அப்படி செய்யுற ஆள் கிடையாது என்று சொல்ல அதற்கு உன் வேலைய பாரு என்று திட்டி விடுகின்றனர். மேலும் இனிமே கம்பெனி எல்லாம் நடத்த முடியாது வேலைக்காரங்களுக்கும் சம்பளம் எப்படி கொடுக்கிறது என்று அர்ஜுன் நடித்துக் கொண்டு இருக்க அதை வழக்கம் போல நம்பும் ராகினி உடனே கிளம்பி வீட்டை விட்டு வெளியே போகிறார்.
எல்லோரும் எங்கே என்று கேட்க நான் வரும்போது கம்பெனி ஆர்டர் ஓட வருவேன் என்று சொல்லிவிட்டு நேராக தமிழ் வீட்டுக்கு வந்து ஏன் இப்படி செய்றீங்க கிடைச்ச ஆர்டரை தட்டி பறிச்சிட்டீங்க என்று சண்டை போடுகிறார். அதோடு இனி நாங்க வேலை பாக்குறவங்களுக்கு எப்படி சம்பளம் கொடுக்க முடியும் என்று கத்தி கொண்டு இருக்க அதற்கு தமிழ் நாங்க ஒன்னும் தட்டி பறிச்சுக்கல அவங்க தான் கொடுத்தாங்க நீங்க கரெக்டா எதுக்கு டெலிவரி பண்ணல.
மெட்டீரியல் குவாலிட்டி இல்ல சரியில்லன்னு தான் அவங்க எங்களுக்கு கொடுத்தாங்க என்று அங்கு நடந்த எல்லா விஷயத்தையும் சொல்கிறார் அதோடு நீ வார்த்தைக்கு வார்த்தை கம்பெனினு சொல்லுறியே அது அம்மா அப்பா கஷ்டப்பட்டு உழைச்சு உருவாக்கியது. உன் அர்ஜுன் ஒன்னும் அந்த கம்பெனியை உருவாக்கல என்று தமிழ் திட்டுகிறார். அதோடு இனி நாங்க என்ன பண்றது தொழிலாளிகளுக்கு எப்படி சம்பளம் போட முடியும் எதுவுமே இல்லையே என்று ராகினி புலம்பி கொண்டு இருக்க அதற்கு தமிழ் அந்த ஆர்டரை அர்ஜுனுக்கு திருப்பி விடுகிறார்.
உடனே சந்தோஷமாக ராகினி வீட்டிற்கு வந்து ஆர்டர் கிடைத்துவிட்டது தமிழன்னா ஒண்ணும் அந்த தப்ப பண்ணல நீங்க அந்த கம்பெனியில் நல்ல மெட்டீரியல் குவாலிட்டியா கொடுக்கல, கரெக்டா எடுத்த டெலிவரி பண்ணல அதனாலதான் உங்க ஆர்டர் அவங்க கேன்சல் பண்ணிட்டாங்க. ஆனா தமிழ் அண்ணா தான் நமக்கு மீண்டும் ஆர்டர்கொடுத்திருக்காரு என்று பெருமையாக பேச அதை கேட்டு அர்ஜுனுடைய அம்மு இவா வரவர அந்த பக்கமாவே சாய்ந்து போறாளே என்று சொல்ல அதற்கு இதுதான் என்னுடைய ஐடியா அந்த வீட்டுக்குள்ள போயி மொத்தமா அவங்க ஆட்களை வைத்து தான் தமிழிலை சாய்க்கணும் என்று பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications