போலீசிடம் இருந்து தப்பித்த அர்ஜுன்.. ஆனால் அதிர்ச்சி கொடுத்த ராகினி.. சரஸ்வதியை காப்பாற்ற போவது இவரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் பிப்ரவரி 5ஆம் தேதி காலை எபிசோடு வெளியாகியிருக்கிறது. அதில் மேக்னா கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடைத்த கண்ணாடி துண்டை வைத்து இது பரமுடையது தான் என்று அவரை அரஸ்ட் பண்ணுவதற்காக போலீசை கூட்டிக்கொண்டு தமிழ், அர்ஜுன் வீட்டிற்கு போய் இருக்கிறார்

ஆனால் அர்ஜுன் ஏற்கனவே இதை யோசித்து சரியாக காய் நமக்கு நகர்த்தி போலீஸிடம் இருந்து தானும் தப்பித்து பரமுவையும் தப்பிக்க வைக்கிறார். ஆனால் வழக்கம்போல ரஜினி சில சொதப்பல்களை செய்ய கோபப்பட வைத்திருக்கிறது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

tamilum saraswathiyum serial february 5th episode full update

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மேக்னா கொலை செய்யப்பட்ட இடத்தில் போலீஸ் கையில் கிடைத்த கண்ணாடி துண்டை வைத்து பரமு அரெஸ்ட் பண்ணுவதற்காக அர்ஜுன் வீட்டிற்கு தமிழ் போலீசை கூட்டிக்கொண்டு போகிறார். அங்கு எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க வெளியே நின்றபடியே தமிழ் டேய் வெளிய வாங்கடா அங்க ஒரு கொலையை பண்ணிட்டு நீங்க எல்லாரும் சாப்பிட்டு இருக்கீங்களா?

உங்களால நிம்மதியாக இருக்க முடியாது. அது கடைசி வரைக்கும் நிலைக்காது என்று திட்டுகிறார். ஆனால் அதற்கு ராகினி வழக்கம்போல அண்ணா சரஸ்வதி அண்ணி கொலை செஞ்சி இருக்க மாட்டாங்கன்னு எனக்கு தெரியும். ஆனா அந்த பழியை நீங்க அர்ஜுன் மேல போடுறீங்க. அது ரொம்ப தப்பு என்று பேசுகிறார். இது பார்க்கும் ரசிகர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தி இருக்கும் அதே நேரத்தில் தரம் போலீஸ் அரெஸ்ட் செய்து ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வர கூடவே அர்ஜுனும் வருகிறார்.

அப்போது போலீஸ் பரமுவிடம் அந்த கண்ணாடியை காட்டி இது உன்னுடையது தானே என்று விசாரிக்க, அதற்கு பரமு இது என்னுடையது இல்லை என்பது போல பேசுகிறார். அப்போது அர்ஜுன் வக்கீலை கூட்டிக் கொண்டு வந்து இந்த கண்ணாடி உடைந்து பத்து நாட்களுக்கு மேல் ஆகுது. இந்தாங்க அதற்கான ஆதாரம். நாங்கள் அஞ்சு நாளைக்கு முன்னாடியே இந்த கண்ணாடியை மாற்றி இருக்கிறோம் என்று பில்லை கொடுக்கிறார்.

tamilum saraswathiyum serial february 5th episode full update

அப்போது தமிழ் கொலை நடந்த இடத்தில் செல்போன் டவர் சிக்னலில் பரமுடையதும் காமிக்குமே அதை செக் பண்ணி பார்க்கலாம் என்று ஐடியா கொடுக்க போலீசார் சரி என்று அதை செக் பண்ணி பார்க்க பரமு நம்பர் சுவிட்ச் ஆப் என்று வருகிறது. அதனால் அர்ஜுன் மற்றும் வக்கீல் பரமுவை கூட்டிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கிளம்புகின்றனர்.

அவர்கள் போனதும் தமிழ் போலீஸிடம் தப்பு பண்ணவங்க இவங்க ஆனா இவங்க மாட்டலையே என்று ஃபீல் பண்ணி பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு போலீஸ் 100 சதவீதம் எனக்கு இவங்க தான் தப்பு பண்ணி இருக்காங்கன்னு டவுட் அதிகமாகின்றது. கண்டிப்பா இவங்கதான் பிளான் பண்ணி இந்த தப்பு பண்ணி இருக்காங்க. அதுக்காக எல்லாம் எவிடென்ஸையும் அழிச்சிட்டாங்க என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

tamilum saraswathiyum serial february 5th episode full update

அப்போது தமிழ் என்னதான் நம்ம மேல தப்பு இல்லனாலும் அதுக்காக ஒரு ஆதாரமாவது கிடைக்கணுமே என்று பேசுகிறார். அந்த நேரத்தில் தமிழுக்கு ஒரு ஐடியா தோணுகிறது. அதாவது சரஸ்வதி ஆட்டோவில் தானே மேக்னாவை காப்பாற்ற போனா அந்த ஆட்டோ டிரைவர் வந்து சொன்னா உண்மையை நிரூபிக்க முடியுமா என்று கேட்கிறார். அதற்கு போலீஸ் ஆமா நிரூபிக்க முடியும் என்று சொல்ல, அதற்கு ஆட்டோ டிரைவரை எப்படி கண்டுபிடிப்பது என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறது.

tamilum saraswathiyum serial february 5th episode full update

அப்போது கார்த்திக் அண்ணி ஆன்லைன்ல தான் புக் பண்ணி இருந்தாங்க. அதனால அதில் நம்பர் இருக்கும் என்று சொல்கிறார். உடனே ஆட்டோ டிரைவரை கூட்டிட்டு வருவதற்காக போலீஸ் முடிவு செய்து போகின்றனர் இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+