தமிழுக்கு கல்யாணம் ஆனதை தெரிந்து மேக்னா கோபத்தில் எடுத்த முடிவு.. ஆனால் சரஸ்வதி சொன்னதை பாருங்க
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஜனவரி 12ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகியிருக்கிறது. அதில் தமிழ் தான் சரஸ்வதியின் கணவர் என்ற உண்மையை தெரிந்த மேக்னா அதிர்ச்சியில் இருக்கிறார். இதுவரைக்கும் தமிழுக்கு கல்யாணம் ஆகவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த மேக்னாவிற்கு இப்போது மொத்த உண்மையும் தெரிய வந்திருக்கிறது.
அதே நேரத்தில் மேக்னா அதிர்ச்சி அடைவதை பார்த்து தமிழ் குடும்பத்தினர் குழப்பத்தில் இருக்கின்றனர். ஏற்கனவே தமிழ் மனைவி தான் சரஸ்வதி என்பதை பற்றி சொல்லியிருந்தும் எதற்காக இவர் இப்படி கோபப்படுகிறார் என்று எல்லோரும் புரியாமல் இருக்கின்றனர்.
அதே நேரத்தில் இதுவரைக்கும் தமிழ் இடம் ஒவ்வொரு முறையும் தோற்றுக் கொண்டிருந்த அர்ஜுன் இப்போது தமிழை வசமாக சிக்க வைத்திருக்கிறார். இனி மேக்னாவால் தமிழுக்கு என்ன பிரச்சனை வரப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். அந்த வகையில் இன்று என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் கோதை குடும்பத்தினர் அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது வசு தமிழிடம் நீங்க பேசாம வக்கீல் ஆகிடலாம் நீங்களே எல்லாத்தையும் போட்டு உடைச்சிட்டீங்க. அர்ஜுன் மாட்டிகிட்டு திண்டாடுறான் என்று பேசிக்கொண்டு இருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் தமிழ் நம்ம கம்பெனி 2000 பேர் வேலை செய்ற கம்பெனியாக சீக்கிரமாக மாறிவிடும் என்று கோதையிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு நடேசன் அந்த மாதிரி நம்ம சொத்தையும் மீட்டு விடுவோம் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். இப்படியான நிலையில் கம்பெனியில் வேலை அதிகமாக இருக்கு வாங்க கிளம்பலாம் என்று நமச்சியையும் அழைத்துக் கொண்டு எல்லோரும் கம்பெனிக்கு போகின்றனர். மறுபக்கத்தில் அர்ஜுன் ராகினியை நம்ப வைப்பதற்காக உங்க அம்மா அப்பா கிட்ட இருந்து வாங்குன எல்லா சொத்துகளையும் அவங்க கிட்டவே கொடுத்துடலாம்.

நம்ம ஊருக்கே போய் ஏதாவது சின்ன வீடா வாடகைக்கு எடுத்து கிடைச்ச வேலையை செஞ்சுட்டு சந்தோசமா இருக்கலாம் என்று சொல்லி நீ என்ன சந்தேகப்பட்டுட்டியே என்று அழுது புலம்புகிறார். அதை பார்த்து மனம் ராகினி இனிமேல் உங்களை சந்தேகப்பட மாட்டேன் என்று வழக்கம் போல பேசி விடுகிறார். அடுத்த கட்டத்தில் கம்பெனிக்கு போன நமச்சி அங்கிருக்கும் பேனரை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
அந்த பேனரில் தமிழ் மற்றும் சரஸ்வதியின் புகைப்படங்கள் போடப்பட்டிருக்கிறது. இதை பார்த்தா மேக்னாவுக்கு உண்மை தெரிஞ்சதுமே என்று நமச்சி இதை மறைப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இதையெல்லாம் அர்ஜுன் வெளியே நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மேக்னா உள்ளே வர அங்கு பேனரில் தமிழ் மற்றும் சரஸ்வதியின் புகைப்படம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி ஆகிறார். அது பற்றி விசாரிக்க, அதற்கு இதை செஞ்சது இந்த அர்ஜுன்தான்.
அர்ஜுனன் தமிழை கேவலப்படுத்துவதற்காக இப்படி எல்லாம் செஞ்சிருக்கான் என்று நமச்சி சமாளிக்க அதை நம்பிக்கொண்டு மேக்னாவும் உள்ளே போகிறார். இதனால் பேனர் வைத்தது ஒர்க் அவுட் ஆகல என்று அர்ஜுன் உள்ளிருக்கும் ஐயருக்கு போன் பண்ணி தம்பதிகளாக விளக்கு ஏத்த சொல்லு என்று சொல்லிவிடுகிறார். அதை தொடர்ந்து கம்பெனிக்குள் ஐயர் முதலில் முதலாளியை விளக்கேற்ற சொல்லிவிட்டு பிறகு தம்பதிகளாக வந்து விளக்கேற்றுங்க என்று சொல்கிறார்.
அதற்கு எல்லோரும் தம்பதிகளாக விளக்கிக் கொண்டிருக்கும் போது நமச்சி மேக்னாவின் மாமாவுக்கு போன் செய்து ஏதாவது செய்யுங்க என்று சொல்ல, அதற்கு அவர் சரி என்று சொல்லிவிட்டு பிறகு மேக்னாவிடம் நான் சும்மாதான் கூப்பிட்டேன் பெரிய விஷயம் ஒன்னும் இல்லை என்று சொல்லிவிடுகிறார். அந்த நேரத்தில் தமிழும் சரஸ்வதியும் விளக்கு ஏத்த அதை மேக்னாவின் வேலைக்கார அம்மா பார்க்கிறார்.

உடனே அவர் அதிர்ச்சியாகி என்ன நீங்க ரெண்டு பேரும் விளக்கு ஏத்துறீங்க என்று கேட்க சரஸ்வதி ஏன் நாங்க புருஷன் பொண்டாட்டி அதான விளக்கு ஏத்துறோம் இதுல என்ன இருக்கு என்று சரஸ்வதி சொல்ல, இதைக் கேட்டு அதிர்ச்சியான மேக்னா தமிழிடம் சரஸ்வதி உங்க பொண்டாட்டியா என்று கேட்க, ஆமா நாங்க ஏற்கனவே உங்ககிட்ட பெங்களூரில் வைத்து சொல்லி இருக்கோமே என்று தமிழ் சொல்ல அதற்கு மேக்னா இல்ல நீங்க பொய் சொல்றீங்க என்னை ஏமாத்திட்டீங்க என்று தமிழின் சட்டையை பிடித்து சண்டை போட மொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications