மேக்னாவிற்காக சரஸ்வதியை தூக்கி போட்ட தமிழ்.. கோதை செய்த குழப்பம்.. போலீஸ் ஸ்டேஷனில் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஜனவரி 8ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. இதில் தனக்கு மேக்னாவின் நடவடிக்கையில் இருக்கும் சந்தேகம் பற்றி தமிழ் இடம் சரஸ்வதி சொல்ல அதனால் தமிழ் கோபமாகி இருக்கிறார்.வீட்டில் மொத்த பேரும் சரஸ்வதி முன்பு வைத்து மேக்னாவை புகழ்ந்து பேசிக் கொண்டிருக்க ஆதலால் சரஸ்வதி மனது கஷ்டப்படுகிறார்.

ஏற்கனவே வசுவிற்கு மேக்னா மற்றும் தமிழ் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து சந்தேகம் வந்திருந்த நிலையில் இப்போது வீட்டிற்கு பூகம்பம் வெடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறது.அதே நேரத்தில் தமிழ் மேக்னாவை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து பார்த்துவிட்டு வந்திருக்கும் நிலையில் இனி அடுத்தது குடும்பத்தில் மேக்னாவை வைத்து பிரச்சனை வர இருக்கிறது. இந்த நிலையில் இன்று என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் தமிழுக்காக மேக்னா தான் ஆக்சிடென்ட் செய்தேன் என்று கூறி போலீசில் சரண்டர் ஆகி இருக்கும் நிலையில் அது குறித்து வீட்டில் எல்லோரும் மேக்னாவை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கின்றனர். மேக்னா தமிழ் வாழ்க்கையில் வந்த தேவதை. இப்படி ஒரு முடிவு யாருமே எடுக்க மாட்டாங்க என்று கோதை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

tamilum saraswathiyum serial January 8th episode Saraswathi tells Tamil about her suspicions Meghna

அதற்கு தமிழ் மேக்னாவிற்கு என் மீது அவ்வளவு பாசமும் நட்பும் இருக்கிறது. அதனால் தான் நான் எதிர்பார்க்கிறதுக்கு முன்னாடியே எனக்கு ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து பார்த்து பண்ணிக்கிட்டு இருக்காங்க. இவங்க இதெல்லாம் எனக்கு பண்ணனும்னு அவசியமே இல்லை. இதுவரைக்கும் என்னுடைய வாழ்க்கையில் யாருமே இப்படி எல்லாம் பண்ணுனதே கிடையாது. யாரும் எனக்கு இவ்வளவு உதவி செய்தது இல்லை என்பதால் எனக்கு வியப்பு ஏற்படுத்தியது.

மேக்னா தான் என்னுடைய வாழ்க்கையில் பல மாற்றத்துக்கு காரணமாய் இருந்திருக்காங்க என்று பெருமையாக பேசிக் கொண்டிருக்க அந்த இடத்தில் சரஸ்வதி எதுவுமே பேசாமல் அமைதியாகவே நிற்கிறார். பிறகு சரஸ்வதி தமிழிடம் அந்த ரவுடியை நம்ம ஆக்சிடென்ட் செய்திருந்தால் நம்ம காரில் அடிபட்டு இருக்கும் ஆனா நம்ம காரில் அப்படி எதுவுமே கிடையாது.

அதே போல அர்ஜுன் காரை வைத்து அந்த ரவுடி மீது மோதி இருந்தால் அர்ஜுனுடைய காரிலும் அடிபட்டிருக்குமே அப்போ அதை முதல்ல நாம செக் பண்ணனும் அதை வச்சி தான் நம்ம மேல தப்பு இல்லை என்பதை நம்ம நிரூபிக்க முடியும் என்று சரஸ்வதி ஐடியா கொடுக்க இதுவும் நல்ல ஐடியா தான் இதை நான் யோசிக்கவே இல்ல என்று சரஸ்வதியை பாராட்டி விட்டு தமிழ் மேகனாவை பார்க்க ஜெயிலுக்கு போகிறார்.

tamilum saraswathiyum serial January 8th episode Saraswathi tells Tamil about her suspicions Meghna

அங்கு மேக்னாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு உங்களை சீக்கிரமா நான் ஜெயிலிலிருந்து வெளியே எடுத்து விடுவேன். அதற்கான வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்ல அதற்கு மேக்னாவும் சந்தோஷப்படுகிறார். அதைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த தமிழ் சரஸ்வதியிடம் காலையில் எல்லோரும் மெக்னாவை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கும் போது நீ அமைதியாகவே இருந்தியே என்ன ஆச்சு என்று விசாரிக்கிறார்.

அதற்கு சரஸ்வதி எனக்கு மேக்னா உங்ககிட்ட பழகுறது நட்பை தாண்டி வேற ஏதோ ஒரு அர்த்தம் இருக்கும்னு தோணுது என்று சொல்ல அதற்கு தமிழ் கோபப்படுகிறார் எப்படி உன்னால இப்படி எல்லாம் பேச முடியுது. இதுக்கு மேல உன்கிட்ட பேசி பிரயோஜனம் இல்லை என்று அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

பிறகு தமிழ் தனியாக யோசித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் சரஸ்வதி நான் இப்பவும் சொல்றேன் ஏதோ தப்பா இருக்கு மேக்னா உங்க கிட்ட எடுத்துக்குற உரிமையும் சரி பாசமும் சரி அதுல வேற ஏதோ இருக்கு என்று சொல்ல அதற்கு தமிழ் கோபப்பட்டு அடிக்கப் போகிறார்.பிறகு உன் மனசுல இப்படி எல்லாம் ஒரு எண்ணம் இருக்குன்னு நான் நினைச்சு கூட பாக்கல. உன்கிட்ட இனி நான் பேசி வேஸ்ட் என்று அங்கிருந்து கிளம்பி போகிறார். இப்படியாக எபிசோடு முடிவடைந்து இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+