அர்ஜுனுக்காக தமிழ் எடுத்த முடிவு.. வார்த்தையை விட்ட பரமு.. ஆனால் ராகிணி இப்படி பண்ணிட்டாங்களே!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மார்ச் 15 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் காணாமல் போன அர்ஜுனை கண்டுபிடிப்பதற்காக தமிழ் நமச்சியோடு சேர்ந்து பரமுவை ஃபாலோ பண்ணுகிறார். ஆனால் உண்மை தெரியாமல் ராகிணி போலீசுக்கு போய் விடுகிறார்.
மறுபக்கத்தில் தமிழ் குடும்பம் முழுமையாக தமிழுக்கு சப்போர்ட் செய்கின்றனர். வீட்டிற்கு வந்த போலீஸிடம் இரண்டு நாள் மட்டும் அவகாசம் கொடுங்கள். அர்ஜூனை கண்டுபிடித்து கூட்டிட்டு வந்து விடுகிறோம் என்று கூறி இருக்கிறார்கள். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் நீண்ட நேரம் ஆகியும் அர்ஜுன் வராததால் குடும்பத்தினர் எல்லோரும் சந்தேகமடைகின்றனர். அதோடு தமிழ் தான் கடத்தி இருப்பார் என்று எல்லோரும் ராகிணியிடம் சொல்லிக் கொண்டிருக்க, ராகிணி அண்ணன் அப்படி எல்லாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழுக்காக சப்போர்ட் செய்து கொண்டிருக்கிறார்.
ஆனாலும் அர்ஜுன் குடும்பம் அய்யய்யோ என் மகனை என்ன செஞ்சாங்கன்னு தெரியலையே ஏற்கனவே ஒரு முறை கடத்திட்டு போய் அடிச்சு கொடுமை படுத்தினாங்களே என்று ஒப்பாரி வைக்க, அதை பார்த்து பயந்து போன ராகிணி சரி வாங்க நேரடியா போய் கேட்கலாம் என்று வீட்டிற்கு போகிறார். அங்கு சென்று ராகிணி தமிழிடம் நீங்கதான் அர்ஜுனா கடத்தி வச்சிருக்கீங்களா? என்று கேட்க அதற்கு தமிழ் நான் ஏன் அவனை கடத்த போறேன் எனக்கு அந்த அவசியமே இல்லையே என்று சொல்லி ராகிணியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்புகின்றனர்.
ஆனாலும் இரவு தாண்டியதும் அர்ஜுனை காணவில்லை இதனால் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று சொல்கிறார்கள். அதனால் அடுத்த நாள் காலையில் ராகிணி போலீசை கூட்டிக்கொண்டு தமிழ் வீட்டிற்கு வருகிறார். அப்போது போலீஸ் தமிழிடம் விசாரிக்க அதற்கு தமிழ் நான் எதுக்கு அவனை கடத்த போறேன். எனக்கு அந்த வேலையே கிடையாது என்று சொல்ல அதற்கு பரமு இல்லை இவன்தான் கடத்திருப்பான் என்று போலீஸ் முன்பு கத்தி கொண்டு இருக்க அதற்கு தமிழ் பரமுவை அடிக்க போகிறார்.
அதற்கு போலீஸ் நீங்க ஏற்கனவே அர்ஜுனை கடத்திருக்கிறீர்களே என்று கேட்க அதற்கு தமிழ் நான் அந்த முறை தெரியாமல் ஏதோ பண்ணிட்டேன். ஆனால் என்னுடைய தங்கச்சி வாழ்க்கையை கெடுக்கணும்னு எந்த நேரத்திலும் நினைத்தது இல்ல. அவளுக்காக தான் நாங்க எல்லா விஷயங்களும் செய்கிறோம் என்று சொல்கிறார். அதோடு இன்னும் இரண்டு நாள் எனக்கு டைம் கொடுங்க கண்டிப்பா அவனை நான் தேடி கண்டுபிடிக்கிறேன் என்று டைம் கேட்கிறார்.
அதோடு நாங்க தான் அர்ஜுனை கடத்திருப்போம் என்பதற்கு உங்களிடம் அதாவது எவிடன்ஸ் இருக்கா என்று கேட்க அதற்கு போலீஸ் இரண்டு நாள் உங்களுக்கு டைம் தரேன் அதுக்குள்ள கண்டுபிடிச்சிருங்க என்று சொல்லிவிட்டு போகின்றனர். பிறகு தமிழ் நமச்சியை கூட்டிக்கொண்டு பரமு எங்கெல்லாம் போகிறார் என்று ஃபாலோ பண்ணி போகிறார்கள்.
அப்போது பரமு ஒரு கடையில் சென்று இட்லி வாங்கிக்கொண்டு இரண்டு வாட்டர் பாட்டில் வாங்கிக் கொண்டு வருகிறார். இதை எல்லாம் பார்த்த தமிழுக்கு சந்தேகம் மேலும் வலுக்கிறது. பரமுக்கு பின்னாடியே போய்க்கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம்












Click it and Unblock the Notifications