தமிழும் சரஸ்வதியும்: நண்பனுக்கு துரோகம் செய்யும் நமச்சி.. மேக்னா பற்றி சரஸ்வதி சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நவம்பர் 15ம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் மேக்னாவை பார்ப்பதற்காக தமிழ் கிளம்பி போயிருந்த நிலையில் அவரோடு சரஸ்வதியும் நமச்சியும் போய் இருக்கின்றனர்.

அங்கு நமச்சி தமிழுக்கு கல்யாணம் முடிந்ததை மறைத்து புது நாடகம் போட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மேக்னாவை சந்திப்பதற்காக தமிழ் மற்றும் நமச்சி இருவரும் கிளம்புகின்றனர். அப்போது கார்த்திக்கிடம் இருவருக்கும் டிக்கெட் போட சொல்லிக் கொண்டிருக்கும்போது சரஸ்வதி நானும் வருகிறேன் என்று சொல்கிறார். ஆனால் தமிழ் பிசினஸ் விஷயமா போறேன். நீ எதற்கு தேவையில்லாம நாங்க போயிட்டு வந்து விடுவோம் என்று சொல்கிறார்.

ஆனால் திருமணம் ஆன பிறகு நீங்க இரண்டு பேரும் தனியாக போனது கிடையாது அதனால கண்டிப்பா ரெண்டு பேரும் சேர்ந்து போக வேண்டும் என்று கோதை கூறிவிடுகிறார். அதனால் தமிழ் மறுக்க முடியாமல் சரஸ்வதியை கூட்டிக்கொண்டு போவதற்கு சம்மதம் தெரிவிக்கிறார். அந்த சமயத்தில் நமச்சி சரஸ்வதியை எதுக்கு கூட்டிட்டு போகணும்? மேக்னாவிற்க்கு தெரிந்து விடுமே என்று பயந்து, நானும் கண்டிப்பாக வருவேன் என்றும் எனக்கும் கண்டிப்பா டிக்கெட் போட்டே ஆகணும் என்றும் அங்கு ஸ்ட்ரைக் பண்ணி ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார்.
பிறகு இவர் செய்யும் அலப்பறையை பார்த்து தமிழ், வா என்று கூட்டிக்கொண்டு அனைவரும் போகின்றனர். அடுத்ததாக பெங்களூருக்கு தமிழ் சரஸ்வதி நமச்சி மூவரும் வந்து இறங்கியதும், அங்கு ஹோட்டலில் ரூம் போட்டு தங்குகின்றனர். அப்போது மேக்னாவின் மாமா தமிழை பார்க்க வருகிறார்.

தமிழை பார்த்து பேசிவிட்டு அங்கு கூடவே வந்திருக்கும் சரஸ்வதியை பற்றி நமச்சியிடம் விசாரிக்கிறார். அதற்கு நமச்சி பதட்டத்தில் அது ஒன்றும் கிடையாது கம்பெனியில் வேலை செய்யும் பெண் என்று சொல்லி சமாளிக்கிறார். ஆனாலும் மேக்னாவின் மாமா மீண்டும் மீண்டும் சரஸ்வதி பற்றி துருவி துருவி கேட்க பிறகு தமிழோட மனைவி என்று நமச்சி கூற அதைக் கேட்டதும் அதிர்ச்சியாவது போல மேக்னாவின் மாமா நடிக்கிறார்.

பிறகு என்னை மன்னித்து விடுங்கள் என்று நமச்சி அவரிடம் காலில் விழுந்து கேட்க உன்ன பார்த்தா பாவமா இருக்கு வா சமாளிக்கலாம் என்று பேசுகிறார். அதை தொடர்ந்து அடுத்த கட்டத்தில் மேக்னாவை பார்க்க மெக்னா வீட்டிற்கு தமிழ், சரஸ்வதி, நமச்சி போக, அப்போது மேக்னாவின் மாமா மேக்னாவிடம் உன்னை பார்ப்பதற்காக தமிழ், நமச்சி ,தமிழுடைய கம்பெனியில் வேலை பார்க்கும் பெண் சரஸ்வதியும் வந்திருக்கிறார். அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று சொல்ல அதற்கு மேக்னா எதற்காக அந்த பொண்ணு இங்க வரணும் என்று கேட்கிறார்.
அப்போது எல்லோரும் வீட்டிற்கு வந்து விடுகின்றனர். பிறகு சரி என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது சரஸ்வதி பற்றிய உண்மை தெரிந்து விடக்கூடாது என்பதற்காக நமச்சி மற்றும் மேக்னாவின் மாமாவும் பிளான் போட்டு சமாளித்துக் கொண்டே இருக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications