அம்மா வீட்டுக்கு கிளம்பிய ராகினி.. அர்ஜுனுக்கு நீதிமன்றத்தால் ஆப்பு.. கடைசியில் எதிர்பாராத முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலின் நவம்பர் மூன்றாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் தமிழ் அவசர அவசரமாக ஆர்டரை முடித்து கொடுத்து புதிய ஆர்டரை வாங்கி இருக்கிறார்.

அதே நேரத்தில் தமிழ் வீட்டிற்கு ராகினி சென்றிருக்கும் நிலையில் அவருக்கு அதிர்ச்சி கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் தமிழ் தன்னால் சொன்ன ஆர்டர் செய்து முடிக்க முடியாமல் ஆகிவிட்டதே என்று திணறிக் கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அந்த நேரத்தில் 15,000 பீஸ் மட்டுமே ரெடி பண்ண முடிந்திருக்கிறது 3000 பீஸ் இன்னும் முடியவில்லை என்று புலம்பி கொண்டிருக்கும்போது அங்கு சிஇஓ வருகிறார்.
அப்போது அவர் வேலையை முடித்து விட்டீர்களா? தமிழ் இரண்டு நாளா உங்க கம்பெனியை பற்றி தான் இன்டஸ்ட்ரியில் பேசிக்கொண்டு இருக்காங்க. ராப்பகலா வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று பேசிக் கொண்டிருக்கும்போது அதற்கு தமிழ் ஆமா சார் ஆனா எங்களால ஆர்டர் டெலிவரி பண்ண முடியவில்லை என்று சொல்ல அதற்கு அந்த கம்பெனியின் மேனேஜர் பரவாயில்ல தமிழ் உங்களுடைய ஹார்ட்ஒர்க்கு என்னுடைய வாழ்த்துக்கள் நீங்க நெனச்சதை சாதிச்சிட்டீங்க.

உங்களோட உழைப்பு வீண் போகல. இனிமே தொடர்ந்து உங்களுக்கு தான் இந்த ஆர்டர் கொடுக்கப் போறோம் என்று சொல்ல அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். அதோடு பல கம்பெனிகள் உங்களை மாதிரி பிரச்சனை வந்தா செய்ய முடியாதுன்னு கை விரிச்சிடுவாங்க. ஆனா நீங்க உங்களால் முடிந்த அளவுக்கு முயற்சி செஞ்சிருக்கீங்க என்று பாராட்டுகிறார். உடனே தமிழ் அனைத்து தொழிலாளிகளையும் கூப்பிட்டு உங்களால தான் இந்த ஆர்டர் நமக்கு கிடைத்திருக்கிறது என்று நன்றி கூறுகிறார்.
அப்போது மேக்னாவால் தான் இந்த வாய்ப்பு கிடைத்தது என மேனேஜர் கூறி இருந்ததால் அவருக்கும் கால் பண்ணி நன்றி கூறுகிறார். அதைத்தொடர்ந்து அர்ஜுனுக்கு இந்த விஷயம் தெரிய வர எப்படி இந்த ஆர்டர் தமிழுக்கு கிடைச்சது இதோட எல்லாத்தையும் விட்டுட்டு ஓடிருவான் என்று நினைத்தேன். ஆனால் மறுபடியும் அவனுக்கு ஆர்டர் கிடைச்சிடுச்சு என்று வயிற்று எரிச்சலில் புலம்பி கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் இந்த சந்தோஷமான விஷயத்தை கோதை ராகினிக்கு போன் பண்ணி சொல்ல, ராகினி அண்ணனுக்கு ஆர்டர் கன்ஃபார்ம் ஆகிவிட்டது என்று வீட்டில் எல்லோரும் முன்பும் சந்தோஷத்தோடு பேசிக் கொண்டிருக்கிறார். அதோடு நான் அண்ணனையும் அம்மாவையும் பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு அவர்களுடைய பதிலுக்கு காத்திருக்காமல் அங்கிருந்து குழந்தையை தூக்கிக்கொண்டு தமிழ் வீட்டிற்கு வருகிறார்.
அங்கே தமிழ் எல்லோருக்கும் கேக் ஊட்டி கொண்டு சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அப்போது ராகினி வந்ததும் ராகிணியை ஆரத்தி எடுத்து வரவேற்று குழந்தையை எல்லோரும் கொஞ்சிக் கொண்டிருக்கின்றனர். வித விதமான சாப்பாட்டுகளையும் விறுவிறுவென ரெடி பண்ணி எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
அந்த நேரத்தில் அப்பாவை எங்கே என்று ராகினி கேட்க அதற்கு அப்பா வக்கீல் பார்க்க போயிருக்கிறார் என்று கூறுகிறார்௺ அதைக் கேட்டு ராகினி குழப்பம் அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. இந்த நிலையில் அர்ஜுன் சொத்தை ஏமாற்றி வாங்கியது குறித்து கேஸ் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அதை விசாரிப்பதற்காக தமிழின் அப்பா போயிருக்கும் நிலையில் இதை தெரிந்ததும் ராகினி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது அடுத்த வாரம் தெரிய வரும்.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications